வலைப்பூக்களுக்கு நான் ஒரு late entrant.. 2003-லிருந்து 2005 வரை நிறைய கட்டுரைகளை (பெரும்பாலும் இசை விமர்சனங்கள்) தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். அப்படி அனுப்பிய மின்னஞ்சல்களில் ஒன்று கூட கைவசம் இல்லை. அப்படி அனுப்பிய ஒரு மடலை பிரகாஷ் அவர் வலைப்பூவில் போட்டார். (இங்கு படிக்கலாம்). 15-20 கட்டுரைகள் காணாமல் போனதே என்றெண்ணி அவ்வப்போது வருந்துவதுண்டு. யாருக்கும் பெரிய இழப்பில்லை எனினும், அந்த கட்டுரைகளைத் திருபிப் பார்க்கும் பொது, நினைவில் [...]
மார்ச், 2010 க்கான தொகுப்பு
தொலைந்தது மீண்டது
Posted in review, குறிச்சொல் இடப்பட்டது Guruvayur Durai, Nostalgia, review, t.n.krishnan, Vaikom Gopalakrishnan on மார்ச் 24, 2010 | Leave a Comment »
தேவையா தம்புரா?
Posted in Uncategorized, குறிச்சொல் இடப்பட்டது concerts, tambura on மார்ச் 18, 2010 | 12 மறுமொழிகள் »
இசைக் கலைஞர்களுக்கு ஸ்ருதி மாதா. ஸ்ருதியைத் தெளிவாகக் காட்டும் கருவி தம்புரா. சில ஆண்டுகளுக்கு முன் வரை தம்புரா இல்லாது கச்சேரி நடக்காது. குருகுல வாசம் செய்யும் சிஷ்யகோடிகளின் முக்கிய வேலை, அந்தர காந்தாரம் கேட்கும் அளவிற்கு தம்புராவில் ஸ்ருதி சேர்ப்பதுதான். தொழில்நுட்பம் வளரவும் electronic tambura மேடைகளுக்கு வர ஆரம்பித்தது. சிலர் சி.டி-யில் ஸ்ருதியை பதிவு செய்து அதனை ஹாலில் போட்டும் பாடுகின்றனர். இன்றைய தேதியில் வெறும் தம்புராவை மட்டும் வைத்துக் கொண்ட கச்சேரிகள் என்பது [...]
Welcome Back Schumi
Posted in Formula1, குறிச்சொல் இடப்பட்டது Formula1, Nostalgia, Schumacher on மார்ச் 15, 2010 | 1 மறுமொழி »
தமிழ்ப் பதிவுலகில் ஃபார்முலா-1 பற்றி யாரேனும் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. சிறு வயது முதலே ஃபார்முலா-1 ரேசிங் மேல் நிறைய ஈடுபாடு எனக்குண்டு. ஸ்டார் டிவி வகையறாக்களின் வருகைக்கு முன், டிடி-யில் வரும் ‘world of sports’-ம் வாரா வாரம் மலரும் sportstar இதழுமே ஃபார்முலா-1 நிகழ்வுகளைத் தெரியப்படுத்தின. Ayrton Senna, Nigel Mansell, Alain Prost மூவரும்தான் அப்போதைய சூப்பர் ஸ்டார்கள். அதிலும் ப்ராஸ்டும், சென்னாவும் ஒரே டீமுக்கு ஓட்டிய போதும், ஒருவரை ஒருவர் மிஞ்ச [...]
பூர்வ ஜென்மக் குரல்
Posted in அறிவிப்பு, personality, குறிச்சொல் இடப்பட்டது composition, kavithai, sindhuja on மார்ச் 12, 2010 | 11 மறுமொழிகள் »
முதன் முதலில் எழுத ஆரம்பித்தது, கல்லூரியில் மாணவர் பத்திரிக்கைக்குத்தான். பத்திரிக்கையின் ஆஸ்தான கவிஞன் நான். நான் எழுதிய கவிதைகள் எல்லாம் நன்றாக எழுதப்பட்டவை என்று நிஜமாகவே நம்பியிருந்தேன். 2001-ல் மேல் படிப்புக்கு அமெரிக்கா சென்றதும்தான் இணையம் பரிச்சியம் ஆனது. forumhub போன்ற இடங்களில் எண்ணற்றவர் கவிதைகள் புனைந்தனர். அந்த கவிதைகளைப் படித்த போது, நானும் கவிஞன்தான் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். வாரத்துக்கு 2 வீதம் கவிதை என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருந்த போது, ‘தினம் ஒரு கவிதை’ [...]
தீட்சிதர் அகண்டம் – A Late Report
Posted in தீட்சிதர், Music Review, குறிச்சொல் இடப்பட்டது akandam, bharathi ramasubban, concert report, dikshitar, neyveli santhanagopalan, review, sankari subramaniyam, seetha rajan, t.m.krishna, vijayalakshmi subramaniyam on மார்ச் 11, 2010 | Leave a Comment »
பதிவிட முடியாமல் வேலை பளு. இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது என்பதற்காக, அவசர கதியில் ஒரு பதிவு. பாரதிய சங்கீத வைபவம் என்ற அமைப்பு கடந்த 4 வருடங்களாக தீட்சிதர் கிருதிகளுக்காக அகண்டம் நடத்தி வருகிறது. அகண்டத்தில், காலையில் தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் தீட்சிதரின் பாடல்கள் பாடப்படுகின்றன. ”இது வரை நடந்த அகண்டங்களில் மட்டும், குறைந்த பட்சம் 280 தீட்சிதர்களாவது பாடப்பட்டு ஆவணப்படுத்தப்படூள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் , தீட்சிதர் கிருதிகள் [...]
கந்த கானாமுதம்
Posted in review, குறிச்சொல் இடப்பட்டது Album Review, kandaganamudham, Koteeswara Iyer, S.Rajam on மார்ச் 3, 2010 | 15 மறுமொழிகள் »
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின. அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரி முத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாய் கோபால கிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம் பெற்ற போதும், பெரும்பான்மையான [...]
MKT 100
Posted in அறிவிப்பு, event, MKT, personality, குறிச்சொல் இடப்பட்டது centenary, MKT, personality on மார்ச் 2, 2010 | 9 மறுமொழிகள் »
ஏழிசை மன்னர் எம்.கே.டி-யின் நூற்றாண்டு நேற்று தொடங்கியுள்ளது. எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மூன்றெழுத்து சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிய எம்.கே.டி-யின் நூற்றாண்டு இவ்வளவு அமைதியாகத் தொடங்கியிருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது! பாகவதர் நூல் எழுதிய ஜெ.ராம்கியுடன் சில முறை எம்.கே.டி பற்றி சக விசிறியாய்ப் பேசியுள்ளேன். அவர்தான் மின்னஞ்சல் அனுப்பி நினைவுபடுத்தினார். பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அதிகம் நான் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். என் அப்பாவின் அப்பா பெரிய எம்.கே.டி ரசிகர். நன்றாகப் பாடக் கூடியவர். [...]
எஸ்.ராஜம் சிறப்பிதழ்
Posted in அறிவிப்பு, வரலாறு, Tribute, குறிச்சொல் இடப்பட்டது announcement, S.Rajam, special issue, varalaaru.com on மார்ச் 1, 2010 | Leave a Comment »
வரலாறு என்றால், பல நூறு வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தவைதான் என்று ஒரு போதும் (http://varalaaru.com/Default.asp) வரலாறு.காம் எண்ணியதில்லை. நம்மிடையே வாழும் வரலாறுகளாய் விளங்குபவர்களை இயன்ற வரை கௌரவப்படுத்துவதும் இவ்விதழின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று. அவ்வகையில், இந்த மாதம் மலரும் வரலாறு.காம் இதழை, எஸ்.ராஜத்திற்குக் காணிக்கை ஆக்குகிறோம். வரலாறு.காமில் இது வரை வந்த சிறப்பிதழ்கள் அனைத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியுடன்தான் வெளியிட்டோம். இந்த மாதம் மலரும் எஸ்.ராஜம் சிறப்பதிழை மிகுந்த வருத்தத்துடன் வெளியிடுகிறோம். ஸ்ருதி இதழ் ஆசிரியர் ஜானகி, ராஜத்தின் மூத்த [...]

