Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Book Review’ பகுப்புக்கான தொகுப்பு

தி ஹிந்து நாளிதழின் இணையத்தளத்தில் ‘துருவ நட்சத்திரம்’ நூலுக்கான மதிப்புரை இன்று வெளியாகியுள்ளது. மதிப்புரை: http://www.thehindu.com/arts/books/article2923778.ece

முழு பதிவையும் வாசிக்க »

கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம். மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய [...]

முழு பதிவையும் வாசிக்க »

சொல்வனத்தில் வெளியான கட்டுரை. இவ்வருடம் மறைந்த இசைக் கலைஞர்கள் பட்டியலில் விதுஷி வித்யா சங்கர் ஜூன் 29-ம் தேதி இணைந்து கொண்டார். ஒருவர் மறைந்தவுடன் அஞ்சலிக் கட்டுரை எழுதுபவருக்கு, மறைந்தவரின் பரிச்சயம் நிச்சயம் இருக்க வேண்டும். நேரடிப் பழக்கமோ அல்லது அவர் மீதான உண்மையான ஆர்வமும், அவர் படைப்புகளில் நல்ல பரிச்சயமுமோ  இருத்தல் அவசியம். அப்படி பரிச்சயம் இல்லாதவர் எழுதும் கட்டுரை நிச்சயம் ஒரு சடங்குக்காக எழுதப்பட்டதே அன்றி, உண்மையான அஞ்சலி ஆகாது. வித்யா சங்கர் என்ற [...]

முழு பதிவையும் வாசிக்க »

கந்தர்வ கானம் – கிரிதரனின் விமர்சனம்

ஜி.என்.பி நூற்றாண்டு ஆர்பாட்டங்கள் (அர்த்தம் புரிந்துதான் இந்தப் பிரயோகம்) முடிந்து மாதங்கள் கடந்த நிலையில் கந்தர்வ கானம் பற்றி கிரிதரனின் விமர்சனம் ஒரு Pleasant Surprise. இன்னும் சில வாரங்கள் நேரம் இருந்திருப்பின், பிழைகளை இன்னும் கவனமாகக் களைந்திருக்கலாம். நிறைய புகைப்படங்களை பதிப்பித்த போதும், பெரும்பாலானவற்றுக்கு கேப்ஷன் எழுதாதது பெரும் குறைதான். அடுத்த எடிஷனில் திருத்தலாம் என்றெல்லாம் கூறப்போவதில்லை. இந்த எடிஷனே விற்றுத் தீரும் என்று தோன்றவில்லை. கிரிதரனின் கட்டுரை இங்கு. Related Posts: http://carnaticmusicreview.wordpress.com/2009/12/31/gnb-centenary-2/ & [...]

முழு பதிவையும் வாசிக்க »

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் ‘குருவே சரணம்’ என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், ‘தாம்பரம் மியூசிக் கிளப்’ நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers