98-வது வயதில் அடியெடுத்து வைக்கும் டாக்டர் பினாகபாணிக்கு வாழ்த்துகள். சதம் அடிக்க பிரார்த்தனைகள். அதற்குள் இன்னும் சில முறையாவது அவரைச் சந்தித்து விட வேண்டும். ஐந்து வருடங்களுக்கு மேலாக படுக்கையில் கிடக்கிறார் என்ற போதும் கிட்டத்தட்ட 90 ஆண்டு விஷயங்களை மனதில் பசுமையாய்த் தேக்கி வைத்துள்ளார். முடிந்த வரை தெரிந்து கொள்ள இறையருள் வேண்டும். சென்றாண்டு அவரளித்த விரிவான நேர்காணலை இங்கும், இங்கும் படிக்கலாம்.
‘Interview’ பகுப்புக்கான தொகுப்பு
Dr. Pinakapani – 98*
Posted in Interview, personality, குறிச்சொல் இடப்பட்டது பினாகபாணி, பிறந்த நாள் on ஆகஸ்ட் 3, 2010 | 2 மறுமொழிகள் »
அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!
Posted in Interview, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது Dinamani, musicfest09, Painting, S.Rajam on December 27, 2009 | 16 மறுமொழிகள் »
தினமணி இசை விழா மலர் 2009-ல் வெளியான கட்டுரை சங்கீத கலா ஆசார்யா எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீததில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.அறுபதைத் தாண்டினால் தன் பெயரே மறந்து போகும் நிலையில் பலர் [...]
விளையும் பயிர் – 3
Posted in Interview, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது amrutha vekatesh, Interview, musicfest09, young musician on December 25, 2009 | 2 மறுமொழிகள் »
இந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் அம்ருதாவுக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனம் இசைச் சிறப்பிதழுக்காக இவரிடம் தொலை பேசினேன். முதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும், போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன். உரையாடலைப் படிக்க இங்கு செல்லவும்.
ஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்
Posted in Interview, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது Interview, musicfest09, S.Rajam on December 23, 2009 | 4 மறுமொழிகள் »
மைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே? மைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும். அப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் [...]
சங்கீத டாக்டருடன் ஒரு நாள் – Interview – Part II
Posted in Interview, குறிச்சொல் இடப்பட்டது pinakapani on December 6, 2009 | 7 மறுமொழிகள் »
[ இது இம்மாத அம்ருதா இதழில் பிரசுரமான நேர்காணலில் மீள்பிரசுரம். அம்ருதா இதழுக்கு நன்றியுடன் ] நேர்காணலின் முதல் பகுதி லட்சுமண ராவைத் தொடர்ந்து வேறு யாரிடம் சங்கீதம் கற்றீர்கள்? ஒரு முறை துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் கச்சேரிக்குச் என் குருவுடன் சென்றிருந்தேன். நாயுடு காருவை என் குரு அறிந்திருந்ததால் அவரிடம் சென்று பேசினோம். அப்போது என்னைப் பற்றி விசாரித்தார். நூறு கிருதிகளுக்கு மேல் நான் அறிந்து வைத்திருந்ததை என் குரு சொன்னதும் ஆச்சரியம் அடைந்த துவாரத்திடம், [...]
சங்கீத டாக்டருடன் ஒரு நாள் – Interview – Part I
Posted in Interview, குறிச்சொல் இடப்பட்டது pinakapani on December 6, 2009 | 4 மறுமொழிகள் »
[ இது இம்மாத அம்ருதா இதழில் பிரசுரமான நேர்காணலில் மீள்பிரசுரம். அம்ருதா இதழுக்கு நன்றியுடன் ] சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணி இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர். பத்ம பூஷண் விருதினைப் பெற்ற இவர், தஞ்சாவூர் பாணியை ஆந்திரத்தில் நிறுவியவர். இன்று பிரபலமாய் விளங்கும் பல அன்னமாச்சாரியா கிருதிகளுக்கு மெட்டமைத்தவர். தான் கற்றவற்றை பரப்புவதை ஒரு தவமாகவே செய்து நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, வோலேட்டி வெங்கடேஸ்வருலு, ஸ்ரீரங்கம் கோபால்ரத்னம், நூகல சத்யநாராயணா போன்ற சங்கீத ஜாம்பவான்களை உருவாக்கியவர். இவரது [...]

