Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘review’ பகுப்புக்கான தொகுப்பு

கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம். மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய [...]

முழு பதிவையும் வாசிக்க »

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் ‘குருவே சரணம்’ என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், ‘தாம்பரம் மியூசிக் கிளப்’ நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

தொலைந்தது மீண்டது

வலைப்பூக்களுக்கு நான் ஒரு late entrant.. 2003-லிருந்து 2005 வரை நிறைய கட்டுரைகளை (பெரும்பாலும் இசை விமர்சனங்கள்) தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். அப்படி அனுப்பிய மின்னஞ்சல்களில் ஒன்று கூட கைவசம் இல்லை. அப்படி அனுப்பிய ஒரு மடலை பிரகாஷ் அவர் வலைப்பூவில் போட்டார். (இங்கு படிக்கலாம்). 15-20 கட்டுரைகள் காணாமல் போனதே என்றெண்ணி அவ்வப்போது வருந்துவதுண்டு. யாருக்கும் பெரிய இழப்பில்லை எனினும், அந்த கட்டுரைகளைத் திருபிப் பார்க்கும் பொது, நினைவில் [...]

முழு பதிவையும் வாசிக்க »

கந்த கானாமுதம்

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின. அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரி முத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாய் கோபால கிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம் பெற்ற போதும், பெரும்பான்மையான [...]

முழு பதிவையும் வாசிக்க »

பத்மானந்தம்

முடிந்த சீஸனில் சௌம்யா, மேண்டலின் ஸ்ரீனிவாஸ், சஷாங்க், லால்குடி டூயட், அபிஷேக் ரகுராம் போன்றவர்களை கேட்க முடியாமல் போனது வருத்தம்தான். அந்த வரிசையில் நான் அதிகம் கேட்க விரும்பி, ஆனால் கேட்க முடியாமல் போனவருள் இன்னொருவர் காயத்ரி வெங்கடராகவன். இன்று அவருடைய கச்சேரி இருப்பதை பேப்பரில் பார்த்ததும், நிச்சயம் போய்விட வேண்டும் என்று முடிவெடுத்தேன். நல்ல கனமான சாரீரம். லயத்தில் நல்ல பிடிப்பு. பாவபூர்வமான சங்கீதம் என்று இவருடையதைக் கூறலாம். நிறைய கே.வி.நாராயணசாமி வழியில் பாடுகிறார் என்று [...]

முழு பதிவையும் வாசிக்க »

ஜி.என்.பி நூற்றாண்டு மலர், கந்தர்வ கானம், பற்றிய விமர்சனம் இங்கே

முழு பதிவையும் வாசிக்க »

அமுதசுரபியில் இசை வசீகரன் விமர்சனம்

லா.ச.ரா-வின் புதல்வர் சப்தரிஷி எழுதியுள்ள விமர்சனம் இந்த மாத அமுதசுரபியில். என் புத்தகம் வெளியான போது எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதைப் படித்ததும், “கடிதம் என் புத்தகத்தை விட நன்றாக இருக்கிறது”, என்றேன். இப்போதும் அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. லா.ச.ரா-வும் சுஜாதாவும் கலந்த கலவையாக சப்தரிஷியின் பிரயோகங்கள் ஜொலிக்கின்றன. டிவிடியை இங்கே வாங்கலாம்

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers