ஜி.என்.பி-யின் கற்பனைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக ‘கமல சரணே’ கிருதியை சொல்லலாம். இவர் உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான அம்ருதபெஹாகில் இந்தக் கிருதி அமைந்துள்ளது. “ஸ ம க ப நி த ஸ” என்ற வக்ர ஆரோகணமும் “ஸ நி த ம க ஸ” என்ற அவரோகணமும் பெற்றுள்ள இந்த ராகம், 65 மேளகர்த்தாவான மேஷகல்யாணியின் ஜன்யம். நாதஸ்வர மேத ராஜரத்தினம், கல்யாணி ராகத்தில் சில வர்ஜ வக்ர சஞ்சாரங்கள் வாசித்ததைக் கேட்டே ஜி.என்.பி இந்த ராகத்தை [...]
‘Tribute’ பகுப்புக்கான தொகுப்பு
ஜி.என்.பி கிருதி (4) – கமல சரணே
Posted in GNB, GNB kritis, personality, Tribute, குறிச்சொல் இடப்பட்டது amrutabehag, centenary, gnb kritis, kamala charane, sindhuja on அக்டோபர் 7, 2010 | 1 மறுமொழி »
ஜி.என்.பி கிருதி 3: நீ பாதமே கதி
Posted in அறிவிப்பு, GNB, Tribute, குறிச்சொல் இடப்பட்டது centenary, GNB, GNB composition, gnb kritis, nalinakanthi, sindhuja, Tribute on செப்டம்பர் 22, 2010 | Leave a Comment »
ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது. பல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை. சிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம். http://octaves.blogspot.com/2010/09/celebrating-gnb-3-nee-padame-gathi-in.html வரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம். முந்தைய பாடல்கள்: http://carnaticmusicreview.wordpress.com/2010/05/21/gnb-kritis-nee-daya-varnam/ & http://carnaticmusicreview.wordpress.com/2010/04/12/gnb-kritis-srichakra/ பார்ப்போம்.
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
Posted in Book Review, personality, Tribute on ஜூலை 9, 2010 | Leave a Comment »
சொல்வனத்தில் வெளியான கட்டுரை. இவ்வருடம் மறைந்த இசைக் கலைஞர்கள் பட்டியலில் விதுஷி வித்யா சங்கர் ஜூன் 29-ம் தேதி இணைந்து கொண்டார். ஒருவர் மறைந்தவுடன் அஞ்சலிக் கட்டுரை எழுதுபவருக்கு, மறைந்தவரின் பரிச்சயம் நிச்சயம் இருக்க வேண்டும். நேரடிப் பழக்கமோ அல்லது அவர் மீதான உண்மையான ஆர்வமும், அவர் படைப்புகளில் நல்ல பரிச்சயமுமோ இருத்தல் அவசியம். அப்படி பரிச்சயம் இல்லாதவர் எழுதும் கட்டுரை நிச்சயம் ஒரு சடங்குக்காக எழுதப்பட்டதே அன்றி, உண்மையான அஞ்சலி ஆகாது. வித்யா சங்கர் என்ற [...]
விதுஷி வித்யா சங்கருக்கு அஞ்சலி
Posted in இரங்கல், obituary, personality, Tribute, குறிச்சொல் இடப்பட்டது cs aiyar, cv raman, vidya shankar on ஜூன் 30, 2010 | 2 மறுமொழிகள் »
இசைத் துறையில் பல ஆய்வுகள் செய்த திருமது வித்யா சங்கர் நேற்று இயற்கை எய்தினார். டாக்டர் சி.வி. ராமன், டாக்டர் சந்திரசேகர் என்று நோபல் பரிசு வாங்கியோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பத்தில் பலர் வெவ்வேறு துறைகளில் உச்சங்களைத் தொட்டவர்கள். மியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலத்தில் பல வித்வான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சி.எஸ்.ஐயர் – வித்யா சங்கரின் தகப்பனார். எனக்கு வித்யா சங்கரைப் பற்றி அதிகம் தெரியாவிடினும் அவரது இரண்டு அற்புதமான புத்தகங்களைப் பல முறை [...]
ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)
Posted in GNB, Tribute, குறிச்சொல் இடப்பட்டது andholika, cenenary, GNB, gnb kritis, sindhuja, varnam on மே 21, 2010 | 3 மறுமொழிகள் »
சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் ‘ராக ஸுதா ரஸ’, இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று. தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் [...]
ஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)
Posted in அறிவிப்பு, GNB, Tribute, குறிச்சொல் இடப்பட்டது GNB, GNB composition, ragam, sindhuja, sivashakthi, srichakraraja on April 12, 2010 | 6 மறுமொழிகள் »
சிந்துஜாவை இங்கு ஏற்கனெவே அறிமுகம் செய்துள்ளேன். சில நாட்களுக்கு முன், “ஜி.என்.பி-யின் நூற்றாண்டில், அவரது பாடல்கள் சிலவற்றைப் பாடி என் வலைப்பூவில் வருடம் முழுவதும் போடலாம் என்று நினைத்துள்ளேன். அவற்றைப் பற்றி எழுத முடியுமா?”, என்று சிந்துஜா கேட்டார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? உடனே ஒப்புக் கொண்டேன். முதல் பாடலாய், சிவசக்தி ராகத்தில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சக்ர ராஜ’ பாடலைப் பாடியுள்ளார். பாடலுக்குள் செல்வதற்கு முன்னால், ஜி.என்.பி என்ற வாக்கேயக்காரரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். [...]
எஸ்.ராஜம் சிறப்பிதழ்
Posted in அறிவிப்பு, வரலாறு, Tribute, குறிச்சொல் இடப்பட்டது announcement, S.Rajam, special issue, varalaaru.com on மார்ச் 1, 2010 | Leave a Comment »
வரலாறு என்றால், பல நூறு வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தவைதான் என்று ஒரு போதும் (http://varalaaru.com/Default.asp) வரலாறு.காம் எண்ணியதில்லை. நம்மிடையே வாழும் வரலாறுகளாய் விளங்குபவர்களை இயன்ற வரை கௌரவப்படுத்துவதும் இவ்விதழின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று. அவ்வகையில், இந்த மாதம் மலரும் வரலாறு.காம் இதழை, எஸ்.ராஜத்திற்குக் காணிக்கை ஆக்குகிறோம். வரலாறு.காமில் இது வரை வந்த சிறப்பிதழ்கள் அனைத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியுடன்தான் வெளியிட்டோம். இந்த மாதம் மலரும் எஸ்.ராஜம் சிறப்பதிழை மிகுந்த வருத்தத்துடன் வெளியிடுகிறோம். ஸ்ருதி இதழ் ஆசிரியர் ஜானகி, ராஜத்தின் மூத்த [...]
ராஜ மார்க்கம்
Posted in அறிவிப்பு, Tribute, குறிச்சொல் இடப்பட்டது Painting, S.Rajam, Sruti on பெப்ரவரி 24, 2010 | Leave a Comment »
இந்த மாத ஸ்ருதி இதழ், ஓவியர்/பாடகர் சிறப்பதிழாக மலர்ந்துள்ளது. ஸ்ருதி பத்திரிக்கையின் contributing editor-ஆக 20 வருடங்களுக்கு மேல் இருந்தவர் ராஜம். ராம்நாராயண், ஜானகி, ஸுதா என்று ஸ்ருதி குடும்பத்தினர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் நெஞ்சைத் தொடுகின்றன. 80-களில் ஸ்ருதி பட்டாபிராமன் ராஜத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையும் மீள் பிரசுரம் ஆகியிருக்கிறது. இவை தவிர, என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை ஓவியர் (ஹிந்து புகழ்) கேஷவுடையது. collector’s item-ஆக மலர்ந்துள்ள இவ்விதழைப் இங்கு பெறலாம் இச் சிறப்பிதழில் வெளியாகியிருக்கும் [...]
Hindu’s tributes to S.Rajam
Posted in அறிவிப்பு, personality, Tribute, குறிச்சொல் இடப்பட்டது personalities, S.Rajam, tributes on பெப்ரவரி 5, 2010 | Leave a Comment »
இன்றைய ஃப்ரைடே ரெவ்யூ பகுதியில் ராஜத்தைப் பற்றி பல நல்ல பதிவுகள் வெளியாகியுள்ளன. Gowri Ramnarayan’s Poignant Profile here Rajam’s sir prime disciple Vijayalakshmi’s tribute here Lakshmi Venkatraman’s account on his paintings here Randor Guy on Rajam’s brush with the Film world here ராண்டர் கையின் கட்டுரையில் ‘கானனம் எது ஸ்வாமி’ கானடா ராகத்தில் என்று தவறாகக் குறிக்கப்பட்டுள்லது. அது அமைந்திருகும் ராகம் பிலஹரி. ராஜம் [...]
ஜி.என்.பி-யின் கிராமஃபோன் ரிக்கார்டுகள்
Posted in Tribute, குறிச்சொல் இடப்பட்டது ஜி.என்.பி on அக்டோபர் 28, 2009 | Leave a Comment »
1900-களில் வாழ்ந்த ஜாம்பவான்கள் பலரைப் பற்றி கேள்விப் பட முடிந்தாலும், அவர்களுடைய இசையைக் கேட்பதென்பது அரிதான விஷயம். ஜி.என்.பி-யின் விஷயத்தில், அவர் கொடுத்த ரிக்கார்டுகள் இருபதுக்கு மேல் கிடைக்கின்றன. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை 1930-களின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டவை. தோடியில் ‘அம்ப நாதுவி’, காம்போதியில் ‘சுப்ரமண்யாய நமஸ்தே’, சுத்த சாவேரியில் ‘தாரிநி தெலுஸு கொண்டி’, சாவேரியில் ‘பராசக்தி’, ஆனந்த பைரவியில் ‘ஓ ஜெகதம்பா’, போன்ற ரிக்கார்டுகள் இந்த கால கட்டத்தில் வெளி வந்தவை. அனைத்துப் [...]

