Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு

வரும் 26-ம் தேதி, காலை பத்து மணிக்கு  கலாக்ஷேத்ராவில் ஜி.என்.பி பற்றி பேசுகிறேன். நேரம் இருப்பவர்கள் நிச்சயம் வரவும்.

முழு பதிவையும் வாசிக்க »

ஷாஜியை ஏன் நிராகரிக்க வேண்டும்?

விவரங்களுக்குள் செல்வதற்கு முன்னால் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். 1. நான் ஷாஜியை நிராகரிக்கிறேன். முடிவை முதலில் எடுத்து அதற்காக வலிந்து ஆதாரங்கள் தேடும் முயற்சி அல்ல இந்தக் கட்டுரை. உங்கள் நேரம் விரயமாகாமல் இருக்க இப்போதே கூறிவிடுகிறேன். 2. நான் இளையராஜாவின் ரசிகன். 3. எட்டு வருடங்களாய் இசை பற்றி எழுதி வந்தாலும், முழுக்க முழுக்க கர்நாடக இசை பற்றியே எழுதி வருகிறேன். 4. சேதுபதியும் ராமசந்திர ஷர்மாவும் என் கல்லூரி கால நண்பர்கள். 2,3,4-ஆவது விஷயங்களாக [...]

முழு பதிவையும் வாசிக்க »

தேவையா தம்புரா?

இசைக் கலைஞர்களுக்கு ஸ்ருதி மாதா. ஸ்ருதியைத் தெளிவாகக் காட்டும் கருவி தம்புரா. சில ஆண்டுகளுக்கு முன் வரை தம்புரா இல்லாது கச்சேரி நடக்காது. குருகுல வாசம் செய்யும் சிஷ்யகோடிகளின் முக்கிய வேலை, அந்தர காந்தாரம் கேட்கும் அளவிற்கு தம்புராவில் ஸ்ருதி சேர்ப்பதுதான். தொழில்நுட்பம் வளரவும் electronic tambura மேடைகளுக்கு வர ஆரம்பித்தது. சிலர் சி.டி-யில் ஸ்ருதியை பதிவு செய்து அதனை ஹாலில் போட்டும் பாடுகின்றனர். இன்றைய தேதியில் வெறும் தம்புராவை மட்டும் வைத்துக் கொண்ட கச்சேரிகள் என்பது [...]

முழு பதிவையும் வாசிக்க »

Happy Birthday Vishy

சொல்வனம் இதழில் வெளியான என் கட்டுரை…. பதினேழு வயதில் உலக ஜூனியர் சாம்பியன், பதினெட்டு வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமை என்று, 1980-களின் கடைசியிலிருந்து வெற்றிகளைக் குவிக்கத் துவங்கிய ஆனந்தால் சதுரங்கத்தின் பக்கம் உந்தப்பட்டோர் ஏராளம். சசிகிரண், ஹரிகிருஷ்ணா, ஹம்பி, நெகி என்று உலக அரங்கில் வெளுத்து வாங்கும் எண்ணற்ற இந்தியர்களின் ஆதர்ச புருஷர் ஆனந்த். எந்த அரங்கிலும் எதுவும் வாங்காத எனக்கும் ஆனந்த்தான் ஆதர்ச புருஷன். 1990-களில், இண்டர்நெட்டில் செஸ் ஆட்டங்களை நேரடியாகப் [...]

முழு பதிவையும் வாசிக்க »

குரங்குக் கவிதைக்குப் பரிசு

வரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா? அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது என்பது….சுஜாதா சொல்லுவாரே…… குரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers