Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘மார்கழி’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

மீண்டும் ஒரு மார்கழி

காலண்டரில் மார்கழி பிறந்து சில நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு இன்றுதான் மார்கழி. வருடா வருடம் இரண்டு வார விடுப்பு எடுத்துக் கொண்டு சபா சபாவாக ஏறி இறங்கி இசைக் கடலில் திளைக்க ஆரம்பிக்கும் நாள்தான் எனக்கு மார்கழி.  பெங்களூரில் இருந்து சென்னை வந்து, வீடு நோக்கி விரைந்த போது இதமான குளிரும் (பெங்களூர் பனியில் பயணித்த பிறகு சென்னைக் குளிர் இதமாகத்தானே இருக்கும்) திருப்பாவையும் என் மார்கழியைத் துவங்கி வைத்தன. புள்ளும் சிலம்பிய இடத்திற்கு பத்தடி தூரத்தில் [...]

முழு பதிவையும் வாசிக்க »

லேட்டாகவும் லேட்டஸ்டாக இல்லாமலும்….

மிகவும் காலம் தாழ்த்தி இதை எழுதுவதற்கு முதற்கண் என்னை மன்னிக்க கோருகிறேன். எழுதாமல் விட்டுவிடுவோம், நாதோபாசனா கூட கேட்டுக் கேட்டு அலுத்து, தண்ணி தெளித்துவிட்டிருப்பார் என்றுதான் பலமுறை தோன்றியது. இருப்பினும் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும் போது கூட மெய் சிலிர்க்க வைக்கும்படி அமைந்த கச்சேரியை இணைய நல்லுலகில் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது ஓங்கும். இன்று அந்த எண்ணம் சற்று அதிகமாகவே ஓங்கியது உங்களது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா? நானறியேன். என் கடன் இங்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers