இவர் கச்சேரிக்கு நம்பிப் போகலாம், minimum guarantee சங்கீதம் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். ஒரு சிலர் ஷேவாக் ஆட்டம் போல. ஒரு நாளைக்கு 300 ரன்னும் கிடைக்கும் அடுத்த நாள் முதல் பாலை தெர்ட் மேனில் கைக்கு அப்பர் கட் செய்வதும் நடக்கும். வேறு சிலர் மைக் ஹஸ்ஸி ரகம். எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், ஆட்டம் முடியும் போது 50 ரன்களாவது இவர் பெயருக்கு எதிரில் வந்துவிடும். அந்த ரக பாடகர்களுள் ஒருவராக [...]
‘december 2010’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
ஓ.எஸ்.டி @ ஸ்ரீங்கேரி மடம்
Posted in December 2010, Music Review, குறிச்சொல் இடப்பட்டது december 2010, MSN Murthy, Neyveli Narayanan, OST on December 30, 2010 | 2 மறுமொழிகள் »
பூனைக்கு மணி
Posted in December 2010, குறிச்சொல் இடப்பட்டது december 2010, Prodigies, Sruti on December 29, 2010 | 3 மறுமொழிகள் »
சென்னை சீஸனுக்கு இணையாக உலகத்தில் வேறெந்த இடத்திலும் இசைத் திருவிழா நடக்கிறதா என்று சந்தேகமே. சென்ற ஞாயிற்று கிழமை ஹிண்டுவின் நான்காம் பக்கம் முழுவதுமே கச்சேரி விவரங்களுக்காக ஒதுக்கும் அளவிற்கு கச்சேரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சந்தோஷம்தான், ஆனால்…. கச்சேரி நடந்தால் போதுமா? Does quantity matter more than quality? இப்படிச் சொன்னதற்காக கச்சேரிகளின் தரமெல்லாம் மோசம் என்று சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது. இளம் வித்வான்களுக்கு முன்னொரு காலத்தில் இருந்தது போல, திறமையைக் காட்ட மேடைகள் [...]
Very Very Special Concert
Posted in December 2010, Music Review, குறிச்சொல் இடப்பட்டது december 2010, Nada Inbam, TV Gopalakrishnan, Violin, VV Subramaniam on December 28, 2010 | 2 மறுமொழிகள் »
VVS என்ற இனிஷியல் உடையோர் எந்தத் துறையினர் என்ற போதும், அவர்களின் ஆளுமை Very Very Special-ஆகத்தான் அமையும் போலும். Silken touch, elegance personified, என்று நாம் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் பற்றி கூறுவதெல்லாம் சங்கீதத் துறை வி.வி.எஸ்-க்கும் நிச்சயம் பொருந்தும். சச்சின், திராவிட், கங்குலிக்கு இடையில் லட்சுமணை அதிகம் கண்டு கொள்ளாதது போலவே, லால்குடி, எம்.எஸ்.ஜி, டி.என்.கிருஷ்ணன் ஆகிய மூவரும் கோலோச்சிய வேளையில் சங்கீத உலகில் காலடி வைத்த வி.வி.சுப்ரமணியத்திற்கு, அவர் திறமைக்கு ஏற்ற [...]
மாலைப் பொழுதினிலே
Posted in December 2010, Music Review, குறிச்சொல் இடப்பட்டது carnatica, december 2010, jayanthi kumaresh, pantula rama on December 28, 2010 | 4 மறுமொழிகள் »
இந்த வருடம் கச்சேரி கேட்க சிறந்த இடம், என்னைப் பொறுத்தவரையில், திருவான்மியூர் ஹரே கிருஷ்ணா அமைப்பின் கடலோரக் கோயில்தான். ஒலியமைப்புக்காக வடிவமைக்கப்பட்ட அரங்கம் ஏதுமில்லை. ஷாமியானாவும், பிளாஸ்டிக் நாற்காலிகளும் நிறைக்கப்பட்ட தற்காலிக அரங்கம்தான். இருப்பினும், கடலலைக்கு வெகு அருகே, குளிர்ந்த காற்று வீசிய படி இருக்க, அந்த இடத்தில் பொங்கும் அமைதி, வேறொன்றும் தேவையில்லை என்று எண்ண வைத்தது. ஒரு பக்கம் கடல் அலை. மற்றொரு பக்கம் இசை அலை. அங்கு நிரம்பிய அமைதியை, இசைக்க வந்தவர்களும் [...]
டி.வி.ராம்பிரசாத் @ சாஸ்திரி ஹால்
Posted in December 2010, Music Review, குறிச்சொல் இடப்பட்டது december 2010, Mysore Srikanth, Sastri Hall, TV Ramprasadh, Umayalpuram Mali on December 24, 2010 | 3 மறுமொழிகள் »
நேற்று காலை சாஸ்திரி ஹாலில் டி.வி.ராம்பிரசாதின் கச்சேரி. கச்சேரிக்குள் சொல்வதற்கு முன் இரு விஷயங்கள். 22-ம் தேதி பாரதி ராமசுப்பனுக்கு வயலின் வாசித்த இளைஞரின் பெயர் ராகுல். சாஸ்திரி அரங்கத்தில் கழிப்பறையைப் பூட்டி வைத்துவிடுகிறார்கள் என்று கூறி இருந்தேன். அது தவறு. கீழே இருக்கும் அறைதான் பூட்டி இருக்கிறது. அரங்கிலிருந்து செல்லுமாறு வேறொரு கழிப்பறை இருக்கிறது. ராம்பிரசாதின் குரலில் அசாத்திய கனம். நல்ல குரல் அமைந்த போதும் அதை வைத்துக் கொண்டு சர்க்கஸ் ஜாலங்கள் செய்ய மாட்டார். [...]
சார்ஸூர் விழாவில் ராமகிருஷ்ணன் மூர்த்தி
Posted in December 2010, Music Review, குறிச்சொல் இடப்பட்டது Arun Prakash, Charsur, december 2010, Govindaraja, MA Krishnaswamy, Ramakrishnan Murthy on December 24, 2010 | 4 மறுமொழிகள் »
21-ம் தேதி மதியம் கே.காயத்ரியின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். காயத்ரி கச்சேரி நடந்த அதே ஹாலில் அடுத்த கச்சேரியில் ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடினார். சார்ஸுர் நிறுவனம் இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் நடத்தும் இசை விழா இது. நல்ல இளம் பாடகர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ப்ரைம் ஸ்லாட்டில் கச்சேரி வாய்ப்பளித்து, சீனியரான பக்கவாத்யங்களை உடன் வாசிக்க வைத்து, சார்ஸுர் நடத்தும் இந்த விழா பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. காயத்ரி கச்சேரி நாரத கான சபையின் இசை விழாக் [...]
பாரதி ராமசுப்பன் @ சாஸ்திரி ஹால்
Posted in December 2010, Music Review, குறிச்சொல் இடப்பட்டது bharathi ramasubban, bharathwaj, december 2010, rahul on December 23, 2010 | Leave a Comment »
பாரதி ராமசுப்பன் பாடி தீட்சதர் அகண்டத்தில் கேட்ட போது அவரது அழுத்தம் என்னை மிகவும் கவர்ந்தது. கணீர் குரலில் வாயைத் திறந்து பாடுகிறார். சொற்கள் புரிகிறது. தீட்சதர் கிருதிகளை அதன் கம்பீரம் குறையாமல் அவர் பாடிய போதே சீஸனில் ‘must listen’ லிஸ்டில் போட்டு வைத்துவிட்டேன். அன்று வயலின் வாசித்தவர் ராஹுல். மிருதங்கம் வாசித்தவர் பரத்வாஜ். கச்சேரியை ‘சங்கரம் அபிராமி மனோஹரம்’ என்று திருக்கடையூர் பற்றி தீட்சிதர் புனைந்துள்ள மனோஹரி ராக கிருதியுடன் தொடங்கினார் பாரது. பாடலில் [...]

