எஸ்.ராஜம் பற்றி இந்தத் தளத்திலேயே நிறைய எழுதியாகிவிட்டது. அவரிடம் நான் பாட்டோ ஓவியமோ கற்கவில்லை. இருப்பினும் என் குருநாதர் அவர்தான். அவர் பிறந்த நாளை ஒட்டி வரும் வார இறுதியான Feb 13 அன்று அவருடைய நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ராஜத்தைப் பற்றி சங்கீத கலாநிதி வேதவல்லியும், ஓவியர் கேஷவும் பேசவுள்ளனர். இயக்குனர் எஸ்.பி.காந்தனோடு சேர்ந்து நான் உருவாக்கி வரும் எஸ்.ராஜம் பற்றிய ஆவணப் படத்திலிருந்து 25 நிமிட excerpts திரையிடப்பட உள்ளது. டி.வி.ராம்பிரசாதின் கச்சேரியும் [...]
‘Documentary’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
எஸ்.ராஜம் நினைவு தினம்
Posted in அறிவிப்பு, personality, குறிச்சொல் இடப்பட்டது Documentary, Remembrance, S.Rajam on பெப்ரவரி 8, 2011 | 3 மறுமொழிகள் »
இசை வசீகரன் – திரையீடு
Posted in அறிவிப்பு, personality, குறிச்சொல் இடப்பட்டது Documentary, GNB, isai-vaseegaran on ஜனவரி 15, 2010 | 3 மறுமொழிகள் »
ஜனவரி 4 அன்று ஜி.என்.பி பற்றிய ஆவணப் படம் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் வெளியிடப்பட்டது. வருடத்தின் முதல் வேலை நாள் அன்று, மதியம் மூன்று மணிக்கு திரையீடு என்ற போது கூட்டம் அதிகம் வர வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். 2-மணி அளவில், “ஜி.என்.பி-க்கு பத்து குழந்தைகள் பிறந்தார்களோ தப்பித்தோம். அவர் குடும்பத்தினர் மட்டுமே அரங்கை ஓரளவு நிறைக்கின்றனர்”, என்றேன். மூன்று மணியை நெருங்கும் போது ஆச்சர்யப்பட்டுப் போனேன். சிறு துளி பெரு வெள்ளமென மாறியது. வழக்கமாய் கச்சேரிகளுக்கே, [...]
இரண்டு சந்தோஷங்கள்
Posted in அறிவிப்பு, Documentary, event, குறிச்சொல் இடப்பட்டது centenary, Documentary, gandharva ganam, GNB, souvenir on December 31, 2009 | 15 மறுமொழிகள் »
ஜனவரி நாலாம் தேதியும், ஐந்தாம் தேதியும், ஜி.என்.பி-யின் நூற்றாண்டு விழா இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில், நடை பெறவுள்ளது. முதல் நாளில் ஜி.என்.பி-யைப் பற்றிய ஆவணப் படம் வெளியாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதிய ‘இசையுலக இளவரசர் ஜி.என்.பி’ என்ற புத்தகம், இந்தப் படத்துக்கான script-ஆக அமைந்துள்ளது. எந்தெந்தப் பகுதியை யாரை வைத்துப் பேச வைக்கலாம், எந்தெந்த விஷயங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும், பல நூறு மணி நேர ஒலிப்பதிவுகளிலிருந்து, எந்தெந்த ஒலிப்பதிவுகளை, எவ்வளவு கால [...]
ராமநாதபுரம் கிருஷ்ணன் – ஆவணப் படம்
Posted in Documentary, குறிச்சொல் இடப்பட்டது carnatic legends, Documentary, Ramanathapuram Krishnan, Ramnad Krishnan, review on ஜூலை 7, 2009 | 2 மறுமொழிகள் »
இந்தியப் பாரம்பரிய இசையையும், இசைக் கலைஞர்களையும் பற்றிய ஆவணப் படங்கள் அரிது. அப்படியே வந்தாலும் அவற்றில் என்ன இருக்கும்? இந்த வருடம், இந்த நாளில் இவருக்கும் அவருக்கும் மகனாகவோ மகளாகவோ பிறந்தார் என்று தஞ்சாவூர் ஜில்லா கிராமத்து வீட்டை லாங் ஷாட்டில் காட்டுவர். அதன் பின், பிறந்த சில நாட்களிலேயே காலையில் கல்யாணியையும், மதிய உணவுக்கு மத்யமாவதியையும், சாயங்காலமாக சாயா தரங்கிணியும், ராத்திரிக்கு ராகவர்த்தினியையும் உட்கொள்ள ஆரம்பித்தார் என்று காலம் காலமாக அவ்விசைக் கலைஞரின் குடும்பத்தில் சுழன்று [...]

