ஜி.என்.பி-யின் கற்பனைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக ‘கமல சரணே’ கிருதியை சொல்லலாம். இவர் உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான அம்ருதபெஹாகில் இந்தக் கிருதி அமைந்துள்ளது. “ஸ ம க ப நி த ஸ” என்ற வக்ர ஆரோகணமும் “ஸ நி த ம க ஸ” என்ற அவரோகணமும் பெற்றுள்ள இந்த ராகம், 65 மேளகர்த்தாவான மேஷகல்யாணியின் ஜன்யம். நாதஸ்வர மேத ராஜரத்தினம், கல்யாணி ராகத்தில் சில வர்ஜ வக்ர சஞ்சாரங்கள் வாசித்ததைக் கேட்டே ஜி.என்.பி இந்த ராகத்தை [...]
‘gnb kritis’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
ஜி.என்.பி கிருதி (4) – கமல சரணே
Posted in GNB, GNB kritis, personality, Tribute, குறிச்சொல் இடப்பட்டது amrutabehag, centenary, gnb kritis, kamala charane, sindhuja on அக்டோபர் 7, 2010 | 1 மறுமொழி »
ஜி.என்.பி கிருதி 3: நீ பாதமே கதி
Posted in அறிவிப்பு, GNB, Tribute, குறிச்சொல் இடப்பட்டது centenary, GNB, GNB composition, gnb kritis, nalinakanthi, sindhuja, Tribute on செப்டம்பர் 22, 2010 | Leave a Comment »
ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது. பல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை. சிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம். http://octaves.blogspot.com/2010/09/celebrating-gnb-3-nee-padame-gathi-in.html வரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம். முந்தைய பாடல்கள்: http://carnaticmusicreview.wordpress.com/2010/05/21/gnb-kritis-nee-daya-varnam/ & http://carnaticmusicreview.wordpress.com/2010/04/12/gnb-kritis-srichakra/ பார்ப்போம்.
ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)
Posted in GNB, Tribute, குறிச்சொல் இடப்பட்டது andholika, cenenary, GNB, gnb kritis, sindhuja, varnam on மே 21, 2010 | 3 மறுமொழிகள் »
சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் ‘ராக ஸுதா ரஸ’, இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று. தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் [...]

