ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது. பல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை. சிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம். http://octaves.blogspot.com/2010/09/celebrating-gnb-3-nee-padame-gathi-in.html வரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம். முந்தைய பாடல்கள்: http://carnaticmusicreview.wordpress.com/2010/05/21/gnb-kritis-nee-daya-varnam/ & http://carnaticmusicreview.wordpress.com/2010/04/12/gnb-kritis-srichakra/ பார்ப்போம்.
‘GNB’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
ஜி.என்.பி கிருதி 3: நீ பாதமே கதி
Posted in அறிவிப்பு, GNB, Tribute, குறிச்சொல் இடப்பட்டது centenary, GNB, GNB composition, gnb kritis, nalinakanthi, sindhuja, Tribute on செப்டம்பர் 22, 2010 | Leave a Comment »
கந்தர்வ கானம் – கிரிதரனின் விமர்சனம்
Posted in Book Review, GNB, குறிச்சொல் இடப்பட்டது gandharva ganam, Giridaharan, GNB on ஜூன் 3, 2010 | Leave a Comment »
ஜி.என்.பி நூற்றாண்டு ஆர்பாட்டங்கள் (அர்த்தம் புரிந்துதான் இந்தப் பிரயோகம்) முடிந்து மாதங்கள் கடந்த நிலையில் கந்தர்வ கானம் பற்றி கிரிதரனின் விமர்சனம் ஒரு Pleasant Surprise. இன்னும் சில வாரங்கள் நேரம் இருந்திருப்பின், பிழைகளை இன்னும் கவனமாகக் களைந்திருக்கலாம். நிறைய புகைப்படங்களை பதிப்பித்த போதும், பெரும்பாலானவற்றுக்கு கேப்ஷன் எழுதாதது பெரும் குறைதான். அடுத்த எடிஷனில் திருத்தலாம் என்றெல்லாம் கூறப்போவதில்லை. இந்த எடிஷனே விற்றுத் தீரும் என்று தோன்றவில்லை. கிரிதரனின் கட்டுரை இங்கு. Related Posts: http://carnaticmusicreview.wordpress.com/2009/12/31/gnb-centenary-2/ & [...]
ஜி.என்.பி கிருதிகள் – 2 (நீ தய ராதா)
Posted in GNB, Tribute, குறிச்சொல் இடப்பட்டது andholika, cenenary, GNB, gnb kritis, sindhuja, varnam on மே 21, 2010 | 3 மறுமொழிகள் »
சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் ‘ராக ஸுதா ரஸ’, இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று. தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் [...]
ஜி.என்.பி கிருதிகள் -1 (ஸ்ரீ சக்ர ராஜ)
Posted in அறிவிப்பு, GNB, Tribute, குறிச்சொல் இடப்பட்டது GNB, GNB composition, ragam, sindhuja, sivashakthi, srichakraraja on April 12, 2010 | 6 மறுமொழிகள் »
சிந்துஜாவை இங்கு ஏற்கனெவே அறிமுகம் செய்துள்ளேன். சில நாட்களுக்கு முன், “ஜி.என்.பி-யின் நூற்றாண்டில், அவரது பாடல்கள் சிலவற்றைப் பாடி என் வலைப்பூவில் வருடம் முழுவதும் போடலாம் என்று நினைத்துள்ளேன். அவற்றைப் பற்றி எழுத முடியுமா?”, என்று சிந்துஜா கேட்டார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? உடனே ஒப்புக் கொண்டேன். முதல் பாடலாய், சிவசக்தி ராகத்தில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சக்ர ராஜ’ பாடலைப் பாடியுள்ளார். பாடலுக்குள் செல்வதற்கு முன்னால், ஜி.என்.பி என்ற வாக்கேயக்காரரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். [...]
கந்தர்வ கானம் – புத்தக விமர்சனம்
Posted in அறிவிப்பு, GNB, குறிச்சொல் இடப்பட்டது book review, gandharva ganam, GNB on April 3, 2010 | 2 மறுமொழிகள் »
மிருதங்க வித்வானும், மிருதங்க மாமேதை பழநி சுப்ரமண்ய பிள்ளையின் சீடருமான திரு.கே.எஸ்.காளிதாஸ் அவர்களின் கந்தர்வ கானத்தைப் பற்றிய விமர்சனத்தை இங்கு படிக்கலாம். http://varalaaru.com/Default.asp?articleid=981
இந்தியன் எக்ஸ்ப்ரஸில் கந்தர்வ கானம் – நூல் விமர்சனம்
Posted in GNB, review, குறிச்சொல் இடப்பட்டது gandharva ganam, GNB, review on பெப்ரவரி 8, 2010 | Leave a Comment »
ஜி.என்.பி நூற்றாண்டு மலர், கந்தர்வ கானம், பற்றிய விமர்சனம் இங்கே
அமுதசுரபியில் இசை வசீகரன் விமர்சனம்
Posted in GNB, review, குறிச்சொல் இடப்பட்டது DVD, GNB, review on பெப்ரவரி 4, 2010 | 3 மறுமொழிகள் »
லா.ச.ரா-வின் புதல்வர் சப்தரிஷி எழுதியுள்ள விமர்சனம் இந்த மாத அமுதசுரபியில். என் புத்தகம் வெளியான போது எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதைப் படித்ததும், “கடிதம் என் புத்தகத்தை விட நன்றாக இருக்கிறது”, என்றேன். இப்போதும் அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. லா.ச.ரா-வும் சுஜாதாவும் கலந்த கலவையாக சப்தரிஷியின் பிரயோகங்கள் ஜொலிக்கின்றன. டிவிடியை இங்கே வாங்கலாம்
இசை வசீகரன் – திரையீடு
Posted in அறிவிப்பு, personality, குறிச்சொல் இடப்பட்டது Documentary, GNB, isai-vaseegaran on ஜனவரி 15, 2010 | 3 மறுமொழிகள் »
ஜனவரி 4 அன்று ஜி.என்.பி பற்றிய ஆவணப் படம் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் வெளியிடப்பட்டது. வருடத்தின் முதல் வேலை நாள் அன்று, மதியம் மூன்று மணிக்கு திரையீடு என்ற போது கூட்டம் அதிகம் வர வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். 2-மணி அளவில், “ஜி.என்.பி-க்கு பத்து குழந்தைகள் பிறந்தார்களோ தப்பித்தோம். அவர் குடும்பத்தினர் மட்டுமே அரங்கை ஓரளவு நிறைக்கின்றனர்”, என்றேன். மூன்று மணியை நெருங்கும் போது ஆச்சர்யப்பட்டுப் போனேன். சிறு துளி பெரு வெள்ளமென மாறியது. வழக்கமாய் கச்சேரிகளுக்கே, [...]
ஜி.என்.பி-யின் இசை – ஸ்ருதி கருத்தரங்கம்.
Posted in Music Review, personality, குறிச்சொல் இடப்பட்டது DVD, GNB, review, Sruti on ஜனவரி 4, 2010 | Leave a Comment »
இம்மாதம் அம்ருதாவிலே வெளியான கட்டுரை (வெளியாகியிருக்கும் என்று நம்புகிறேன்) வாருங்கள் செல்வோம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதிக்கு. நேற்றும், அதன் முன் தினமும், ஸ்ருதி ·பௌண்டேஷன், ஜி.என்.பி-யின் இசையைப் பற்றிய ஆய்வின் முடிவுகளை நாரத கான சபையில் நடந்த கருத்தரங்கில் வெளியிட்டது. அதைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். குறுக்கிடாமல் கேளுங்கள். ஸ்ருதி பத்திரிகையின் நிறுவனர் என்.பட்டபிராமன் தலைமையில், எஸ்.ராஜம், கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, என்.ராமநாதன், ரிதா ராஜன், சுலோசனா பட்டாபிராமன் போன்ற கலைஞர்களும், இசை ஆய்வில் பல [...]
இரண்டு சந்தோஷங்கள்
Posted in அறிவிப்பு, Documentary, event, குறிச்சொல் இடப்பட்டது centenary, Documentary, gandharva ganam, GNB, souvenir on December 31, 2009 | 15 மறுமொழிகள் »
ஜனவரி நாலாம் தேதியும், ஐந்தாம் தேதியும், ஜி.என்.பி-யின் நூற்றாண்டு விழா இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில், நடை பெறவுள்ளது. முதல் நாளில் ஜி.என்.பி-யைப் பற்றிய ஆவணப் படம் வெளியாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதிய ‘இசையுலக இளவரசர் ஜி.என்.பி’ என்ற புத்தகம், இந்தப் படத்துக்கான script-ஆக அமைந்துள்ளது. எந்தெந்தப் பகுதியை யாரை வைத்துப் பேச வைக்கலாம், எந்தெந்த விஷயங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும், பல நூறு மணி நேர ஒலிப்பதிவுகளிலிருந்து, எந்தெந்த ஒலிப்பதிவுகளை, எவ்வளவு கால [...]

