Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘J.Venkatraman’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

கச்சேரி செய்யும் கலைஞர்கள் வீட்டின் அறைகள் என்றால், அவர்களை உருவாக்கும் பணியைச் செய்பவர்கள் (சில ஹை-டெக் வாத்தியார்கள் நீக்கி) வீட்டின் அஸ்திவாரம் போன்றவர்கள். இவர்கள் கண்ணில் பட மாட்டார்கள். இவர்களைக் கண்டாக வேண்டுமெனில் நிச்சயம் செய்முறை (லெக்-டெம்) விளக்க நிகழ்வுகளுக்காகக் காத்திருக்க வேண்டும். 22-ம் தேதி லெக் டெம்-க்காக வந்திருந்த ஜெ.வி என்று பரவலாய் அழைக்கப் படும் திருச்சி ஜெ.வெங்கடராமன் இவர்களுள் ஒருவர். ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் குருகுலவாசம் செய்தவர். சௌக்யத்துக்கு மதுரை மணி, பளிச்சென்று பாடுவதற்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »

சாவேரி சோமாரியான கதை

என் சீஸன் துவங்கி விட்டது. காலை ஆறு மணிக்கு சென்னை வந்ததும் ஹிந்து பேப்பரில் இன்று போக வேண்டிய கச்சேரிகளை முடிவு செய்வதற்குள், விஜய் சிவா ஜெயா டிவியில் அரை மணி பாடி முடித்துவிட்டார். திருச்சி ஜெ.வெங்கடராமன், வர்ணங்களில் கதி பேதம் செய்வதைப் பற்றி செய்முறை விளக்கம் கேட்க காலையில் பார்த்தசாரதி சபாவில் ஆஜர். கேண்டீனில் அவசர அவசரமாய் இட்லியை அள்ளிப் போட்டுக் கொண்டு அரங்கில் நுழைவதற்கும், திரை விலகுவதற்கும் சரியாக இருந்தது. மதுரை ஜி.எஸ்.மணி முதல் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers