டிசம்பர் 26-ம் தேதி காலையில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் வீணை ஜெயந்தியின் கச்சேரி. நல்லதோர் வீணை (கலைஞரைச்) செய்தே – அவரை நலங்கெட கூட்டமில்லா ஸ்லாட்டுகளில் இடுவதுண்டோ நான்கு வருடங்களாய் நானும் பார்க்கிறேன், இந்த அற்புதமான வாசிப்பு, நல்ல கூட்டமுள்ள இடத்தில் அரங்கேறும் என்று! ம்ஹும்! சரஸ்வதியே இன்று சீஸனுக்கு வந்தால் கூட, “வீணையெல்லாம் வாசிச்சா ப்ரைம் ஸ்லாட் கிடைதும்மா! வேணும்-னா, வாய்ப்பாட்டு பாடு. பாடினாப் போறாது, நல்ல ஷோக்கா அலங்காரம் பண்ணிக்கணும். கண்ணை எப்ப மூடணும், [...]
‘musicfest09’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
நல்லதோர் வீணை
Posted in Music Review, music-fest2009, குறிச்சொல் இடப்பட்டது bangalore arjun kumar, giridhar uduppa, jayanthi kumaresh, musicfest09, mylapore fine arts, veena on December 31, 2009 | 6 மறுமொழிகள் »
கேட்ட பாட்டும் கேட்காத பாடல்களும்
Posted in Music Review, music-fest2009, குறிச்சொல் இடப்பட்டது Dr. Narmada, Harihara Sarma, musicfest09, Rasika fine arts, thanjavur ramadas, vijayalakshmi subramaniam on December 30, 2009 | 6 மறுமொழிகள் »
அரிய பாடல்களை, நிதானமான சங்கீதத்தை, குரல் இருக்கிறது என்பதற்காக கச்சேரி மேடையை சர்கஸ் கூடாரமாக மாற்றாமல் இருக்கும் கலைஞரைக் கேட்க விழைவோர் நிச்சயம் விஜயலட்சுமி சுப்ரமணியத்தின் கச்சேரிகளைக் கேட்க வேண்டும். இந்த வருடம் அகாடமியில், “வாங்கும் எனக்கு இரு கை” (ஐயா தமிழிசை விரும்பிகளே! அகாடமியில் தமிழ்ப் பாடல் மெயின் ஐட்டமாக அரங்கேறியுள்ளது!), “அருள் செய்ய வேண்டுமையா”, “நாட்டைகுறிஞ்சி ராகம் தானம் பல்லவி”, ஆகியவை இடம் பெற்றனவாம். இந்தக் கச்சேரியைக் கேட்ட என் அம்மா, ரொம்பவே சிலாகித்துச் [...]
சீக்கிரம் வந்த புத்தாண்டு
Posted in Music Review, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது Music Academy, musicfest09, personalities, t.n.krishnan, Thiruvarur Bhakthavatsalam, Vaikom Gopalakrishnan, Viji Krishnan on December 29, 2009 | 5 மறுமொழிகள் »
சில வாரங்கள் முன், டி.என்.கிருஷ்ணனின் அகாடமி கச்சேரிகள் பற்றி எழுதியிருந்தேன். ஜனவரி 1-ம் தேது அவர் அகாடமியில் (சில வருடங்களாக) வாசிக்காததால், அவர் கச்சேரிகள் கேட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. டி.என்.கிருஷ்ணனுக்கு மட்டும் என்ன வயது கொஞ்சமாகவா ஆகிறது? ரொம்ப அற்புதமாய் அவர் வாசித்தக் கச்சேரிகளைக் கேட்டுவிட்டு, இப்போது கேட்டு, அது சரியாக அமையவில்லை என்றால், மனதுக்கு கஷ்டமாக இருக்குமே என்ற எண்ணம் வேறு. டிசம்பர் 25-ம் தேதி காலையில், அகாடமியில் லால்குடி ஜி.என்.பி-யைப் பற்றி [...]
அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!
Posted in Interview, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது Dinamani, musicfest09, Painting, S.Rajam on December 27, 2009 | 16 மறுமொழிகள் »
தினமணி இசை விழா மலர் 2009-ல் வெளியான கட்டுரை சங்கீத கலா ஆசார்யா எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீததில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.அறுபதைத் தாண்டினால் தன் பெயரே மறந்து போகும் நிலையில் பலர் [...]
விளையும் பயிர் – 3
Posted in Interview, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது amrutha vekatesh, Interview, musicfest09, young musician on December 25, 2009 | 2 மறுமொழிகள் »
இந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் அம்ருதாவுக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனம் இசைச் சிறப்பிதழுக்காக இவரிடம் தொலை பேசினேன். முதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும், போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன். உரையாடலைப் படிக்க இங்கு செல்லவும்.
ஓவியர்/பாடகர் ராஜத்திடம் சில கேள்விகள்
Posted in Interview, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது Interview, musicfest09, S.Rajam on December 23, 2009 | 4 மறுமொழிகள் »
மைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே? மைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும். அப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் [...]
பால ‘சேஷு’
Posted in Music Review, music-fest2009, குறிச்சொல் இடப்பட்டது musicfest09, review, TNS Krishna on December 21, 2009 | 11 மறுமொழிகள் »
21 Dec 2009 @ Krishna Gana Sabha, T.N.S Krishna, M.Chandrasekaran, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam எனக்கு சேஷகோபாலன் பாட்டென்றால் உயிர். 2004 வரை சென்னையிலும், பெங்களூரிலும் பல இடங்களில் அவர் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். தஞ்சாவூரில் படித்த போது, திருச்சிக்கு, இவர் கச்சேரி கேட்பதற்காகவே சென்றிருக்கிறேன். சில வருடங்களாய் இவரைக் கேட்க வேண்டுமென்றால், ஒலிப்பதிவுகளை நாடுவேன். நேரில் கேட்கும் அனுபவத்துக்கு ஏங்கும் போது டி.என்.எஸ் கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்குச் செல்கிறேன். பல சமயங்களில் பாத்திரம் பொன்னால் ஆனதாக [...]
விளையும் பயிர் – 2
Posted in Music Review, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது musicfest09, review, sucharithra, Trichur Brothers on December 20, 2009 | 15 மறுமொழிகள் »
Trichur Brothers (Srikrishna Mohan, Ramkumar Mohan), Trchur Mohan, D.V.Venkatasubramanian @ Brahma Gana Sabha சீஸனில் நடக்கும் கச்சேரிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், ப்ரைம் ஸ்லாட் இல்லாத கச்சேரிகள் நடக்கும் சமயத்தில், பாட்டு கேட்பவர்களை விட பாடுபவர்கள் அதிகம் இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இள பாடகர்களுக்கு இவை பெரும் வாய்ப்புகளாய் அமைகின்றன. என்னைப் போன்ற கர்ம சிரத்தையாய் கேட்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். எங்கே போவது என்று குழப்பம் தீராத ஒன்று. நான் இதுவரை கேட்காதவர்கள் [...]
தக்ஷிணத்தின் நஷ்டம்!
Posted in Music Review, music-fest2009, குறிச்சொல் இடப்பட்டது m.a.sundaresan, musicfest09, review, srimushnam rajarao, suryaprakash on December 19, 2009 | 4 மறுமொழிகள் »
Suryaprakash, M.A.Sundaresan, Srimushnam Raja Rao, E.M.Subramaniam @ Parthasarathy Sami Sabha சூர்ய பிரகாஷை ஒவ்வொரு சீஸனிலும் ஒரு முறையாவது கேட்டு விடுவேன். நல்ல குரல். தெளிவான உச்சரிப்பு. கச்சேரியைக் கேட்டு பாடலை எழுதிக் கொள்ளலாம் என்று விஜய் சிவாவுக்கு அடுத்து, இவரைத்தான் சொல்ல வேண்டும். விரிவான பாடாந்திரம், என்று குறிப்பிடும் படியான அம்சங்கள் பல இவர் பாட்டில் உள்ளன. பார்த்தசாரதி சபாவில் இன்று அவருக்கு நல்ல செட். எம்.ஏ.சுந்தரேசன் பாட்டை போஷாக்கு செய்வதில் வல்லவர். [...]
சாவேரி சோமாரியான கதை
Posted in Music Review, music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது J.Venkatraman, Laya, Lec-Dem, musicfest09 on December 19, 2009 | 15 மறுமொழிகள் »
என் சீஸன் துவங்கி விட்டது. காலை ஆறு மணிக்கு சென்னை வந்ததும் ஹிந்து பேப்பரில் இன்று போக வேண்டிய கச்சேரிகளை முடிவு செய்வதற்குள், விஜய் சிவா ஜெயா டிவியில் அரை மணி பாடி முடித்துவிட்டார். திருச்சி ஜெ.வெங்கடராமன், வர்ணங்களில் கதி பேதம் செய்வதைப் பற்றி செய்முறை விளக்கம் கேட்க காலையில் பார்த்தசாரதி சபாவில் ஆஜர். கேண்டீனில் அவசர அவசரமாய் இட்லியை அள்ளிப் போட்டுக் கொண்டு அரங்கில் நுழைவதற்கும், திரை விலகுவதற்கும் சரியாக இருந்தது. மதுரை ஜி.எஸ்.மணி முதல் [...]

