ஏழிசை மன்னர் எம்.கே.டி-யின் நூற்றாண்டு நேற்று தொடங்கியுள்ளது. எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மூன்றெழுத்து சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிய எம்.கே.டி-யின் நூற்றாண்டு இவ்வளவு அமைதியாகத் தொடங்கியிருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது! பாகவதர் நூல் எழுதிய ஜெ.ராம்கியுடன் சில முறை எம்.கே.டி பற்றி சக விசிறியாய்ப் பேசியுள்ளேன். அவர்தான் மின்னஞ்சல் அனுப்பி நினைவுபடுத்தினார். பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அதிகம் நான் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். என் அப்பாவின் அப்பா பெரிய எம்.கே.டி ரசிகர். நன்றாகப் பாடக் கூடியவர். [...]
‘personality’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
MKT 100
Posted in அறிவிப்பு, event, MKT, personality, குறிச்சொல் இடப்பட்டது centenary, MKT, personality on மார்ச் 2, 2010 | 9 மறுமொழிகள் »
திருச்சி தாயுமானவன்
Posted in music-fest2009, personality, குறிச்சொல் இடப்பட்டது award, mridangam, personality, profile, thayumanavan on பெப்ரவரி 10, 2010 | 5 மறுமொழிகள் »
மிருதங்கக் கலைஞர் திருச்சி தாயுமானவனைப் பற்றி சங்கீத சீஸனிலேயே எழுத வேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் முடிந்தது. இந்த வருடம், அகாடமியின் டிடிகே விருதைப் பெறும் இவர் கொட்டையூரில் பிறந்தவர். இசை கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ராஜு வயலின் வித்வான். குடும்பத்த்ல் அனைவருமே ஒன்று வாய்ப்போட்டோ அல்லது வயலினையோ எடுத்துக் கொண்டு அதில் தேர்ச்சியைப் பெற்றனர். அந்தக் குடும்பத்தில் தாயுமானவன் எப்படி மிருதங்கத்தின் பக்கம் வந்தார் என்பது சுவாரஸ்யமான கதை. “எனக்கு ஏழு வயதிருக்கும் போது எங்கள் [...]

