புதுக்கோட்டை லய பரம்பரையை உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்கள் வரிசையில் முத்தையாப் பிள்ளைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. புதுக்கோட்டை வழியில் வந்தவர் என்ற போதும் இவர் பிறந்தது பழநியில். மிடற்றிசை பிரபலமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இசையை பராமரித்தும் வளர்த்தும் வந்தவர்கள், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களாக விளங்கிய இசை வேளாளர்கள்தான். அந்தப் பரம்பரையில் பெரியசெல்வன் என்பவரின் மூத்த மகனாக 1868-ல் முத்தையா பிள்ளை பிறந்தார். பரம்பரை கலையான தவில் வாசிப்பை கற்றதோடு இளம் வயதில் பழநி [...]
‘pudukottai school’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
பழனி முத்தையா பிள்ளை
Posted in percussion instruments, personality, குறிச்சொல் இடப்பட்டது legend, manpoondia pillai, mridangam, palani muthiah pillai, pudukottai school on பெப்ரவரி 26, 2011 | 2 மறுமொழிகள் »
மான்பூண்டியா பிள்ளை
Posted in மிருதங்கம், வரலாறு, குறிச்சொல் இடப்பட்டது manpoondia pillai, mridangam, Narayanasamiyappa, pudukottai school on நவம்பர் 1, 2010 | 32 மறுமொழிகள் »
மான்பூண்டியா பிள்ளையைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் ஒரு கதை போல உள்ளதாய் போன கட்டுரையில் எழுதியிருந்தேன். அதனால், கிட்டத்தட்ட ஒரு கதையாகவே இந்தக் கட்டுரையை எழுதிவிடலாம் என்று தொன்றியது:-) அவர் காலத்தில் இசைப் பதிவுகள் ஏதுமில்லாததாலும், அவரைக் கேட்டவர்கள் இன்றும் யாரும் இல்லாததாலும், இது போன்றே எழுத வேண்டியுள்ளது. புதுக்கோட்டை மகாராஜா இராமச்சந்திர தொண்டைமானின் அரண்மனையில் கச்சேரி நடை பெற்று வந்தது. ஆஸ்தான வித்வான்களான நன்னுமியானும் சோட்டுமியானும் பாடிக் கொண்டிருந்தர்கள். டோலக் வாசித்துக் கொண்டே பாடுவதில் அவர்கள் [...]

