Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘S.Rajam’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

எஸ்.ராஜம் நினைவு தினம்

எஸ்.ராஜம் பற்றி இந்தத் தளத்திலேயே நிறைய எழுதியாகிவிட்டது. அவரிடம் நான் பாட்டோ ஓவியமோ கற்கவில்லை. இருப்பினும் என் குருநாதர் அவர்தான். அவர் பிறந்த நாளை ஒட்டி வரும் வார இறுதியான Feb 13 அன்று அவருடைய நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ராஜத்தைப் பற்றி சங்கீத கலாநிதி வேதவல்லியும், ஓவியர் கேஷவும் பேசவுள்ளனர். இயக்குனர் எஸ்.பி.காந்தனோடு சேர்ந்து நான் உருவாக்கி வரும் எஸ்.ராஜம் பற்றிய ஆவணப் படத்திலிருந்து 25 நிமிட excerpts திரையிடப்பட உள்ளது. டி.வி.ராம்பிரசாதின் கச்சேரியும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

கந்த கானாமுதம்

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின. அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரி முத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாய் கோபால கிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம் பெற்ற போதும், பெரும்பான்மையான [...]

முழு பதிவையும் வாசிக்க »

எஸ்.ராஜம் சிறப்பிதழ்

வரலாறு என்றால், பல நூறு வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தவைதான் என்று ஒரு போதும் (http://varalaaru.com/Default.asp) வரலாறு.காம் எண்ணியதில்லை. நம்மிடையே வாழும் வரலாறுகளாய் விளங்குபவர்களை இயன்ற வரை கௌரவப்படுத்துவதும் இவ்விதழின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று. அவ்வகையில், இந்த மாதம் மலரும் வரலாறு.காம் இதழை, எஸ்.ராஜத்திற்குக் காணிக்கை ஆக்குகிறோம். வரலாறு.காமில் இது வரை வந்த சிறப்பிதழ்கள் அனைத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியுடன்தான் வெளியிட்டோம். இந்த மாதம் மலரும் எஸ்.ராஜம் சிறப்பதிழை மிகுந்த வருத்தத்துடன் வெளியிடுகிறோம். ஸ்ருதி இதழ் ஆசிரியர் ஜானகி, ராஜத்தின் மூத்த [...]

முழு பதிவையும் வாசிக்க »

ராஜ மார்க்கம்

இந்த மாத ஸ்ருதி இதழ், ஓவியர்/பாடகர் சிறப்பதிழாக மலர்ந்துள்ளது. ஸ்ருதி பத்திரிக்கையின் contributing editor-ஆக 20 வருடங்களுக்கு மேல் இருந்தவர் ராஜம். ராம்நாராயண், ஜானகி, ஸுதா என்று ஸ்ருதி குடும்பத்தினர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் நெஞ்சைத் தொடுகின்றன. 80-களில் ஸ்ருதி பட்டாபிராமன் ராஜத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையும் மீள் பிரசுரம் ஆகியிருக்கிறது. இவை தவிர, என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை ஓவியர் (ஹிந்து புகழ்) கேஷவுடையது. collector’s item-ஆக மலர்ந்துள்ள இவ்விதழைப் இங்கு பெறலாம் இச் சிறப்பிதழில் வெளியாகியிருக்கும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Hindu’s tributes to S.Rajam

இன்றைய ஃப்ரைடே ரெவ்யூ பகுதியில் ராஜத்தைப் பற்றி பல நல்ல பதிவுகள் வெளியாகியுள்ளன. Gowri Ramnarayan’s Poignant Profile here Rajam’s sir prime disciple Vijayalakshmi’s tribute here Lakshmi Venkatraman’s account on his paintings here Randor Guy on Rajam’s brush with the Film world here ராண்டர் கையின் கட்டுரையில் ‘கானனம் எது ஸ்வாமி’ கானடா ராகத்தில் என்று தவறாகக் குறிக்கப்பட்டுள்லது. அது அமைந்திருகும் ராகம் பிலஹரி. ராஜம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

எஸ்.ராஜம் – மறையாத ஓவியம்

91 வருடங்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கலைக்காகவே செலவு செய்த ‘சங்கீத கலாச்சாரியா’ எஸ்.ராஜம், இன்று மாலை 7.35 மணி அளவில் காலமானார். அவர் கடைசியாக என்னிடம் தெரிவித்த விருப்பம், கோடீஸ்வர ஐயருக்கென்று ஒர்ய் தினம் கொண்டாடி, நாள் முழுவதும் அகண்டமாக அவர் பாடல்களைப் பாட வைக்க வேண்டும் என்றது. அதை நிறைவேற்ற இறையருள் வேண்டும்.

முழு பதிவையும் வாசிக்க »

ஒரு வேண்டுகோள்

ஆறு மாசமாய தமிழ்ஸ்டுடியோ.காம் உடன் இணைந்து எஸ்.ராஜத்தின் மீது ஆவணப்படம் எடுத்து வருகிறேன். ஷூட்டிங் எல்லாம் முடிந்தாகிவிட்டது. எடிட்டிங் வேலை முடிய இன்னும் ஒரு மாசம் ஆகும். விரைவிலேயே, ஒரு ஜீனியஸை அவர் இருக்கும் போதே ஆவணப்படுத்திய பெருமையை அடையப் போகிறோம் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன். போன ஞாயிற்றுக் கிழமை கூட அவரைச் சந்தித்தேன். கொஞ்சம் தளர்ந்திருந்தாலும், உற்சாகமாகப் பேசினார். திங்கள் முதல் மூச்சுத் திணரலாம். நேற்றிலிருந்து பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறதாம். என்ன சொல்லியும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

தினமணி இசை விழா மலர் 2009-ல் வெளியான கட்டுரை சங்கீத கலா ஆசார்யா எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீததில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.அறுபதைத் தாண்டினால் தன் பெயரே மறந்து போகும் நிலையில் பலர் [...]

முழு பதிவையும் வாசிக்க »

மைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே? மைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும். அப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் [...]

முழு பதிவையும் வாசிக்க »

சங்கீத லெட்டர் பேட்

திரு. எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இதைத் தவிர இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர் (வயது 90). இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீதத்தில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை. இவ்விரண்டு துறைகளிலும், தனித் தனியாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பல இருப்பினும், இவரின் இரு துறை [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 105 other followers