Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2009

வரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா? அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது என்பது….சுஜாதா சொல்லுவாரே……

குரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா இருந்து, அந்த கவிதையைப் போட்டிக்கு அனுப்பி, அந்தக் கவிதைக்கு முதல் பரிசும் கிடைசக்கிற மாதிரி….

எத்தனையோ வருடங்கள் முன்னால ‘தொல்லியல் இமயம்’  கே.ஆர்.சீனிவாஸனுக்கு பத்ம பூஷண் கொடுத்தாங்க, அதுக்கு அப்புறம், தவறாம இரண்டாவது ரவுண்டுல தோற்கும் சானியா (பேசாம சூனியா-னு பேரை வெச்சா சரியா இருக்கும்), ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டி திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்…இப்படி பல ரக மக்களைத் தாண்டி, இந்த வருஷம் குரங்குக் கவிதைக்கு பரிசு கிடடச்சாச்சு! 

ஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது.

அவரைப் பற்றி: http://varalaaru.com/Default.asp?articleid=739 

நான் கண்ட நேர்காணல்: http://varalaaru.com/Default.asp?articleid=740

அன்புடன், 

லலிதா ராம்.

Read Full Post »