இசைக் கலைஞர்களுக்கு ஸ்ருதி மாதா. ஸ்ருதியைத் தெளிவாகக் காட்டும் கருவி தம்புரா. சில ஆண்டுகளுக்கு முன் வரை தம்புரா இல்லாது கச்சேரி நடக்காது. குருகுல வாசம் செய்யும் சிஷ்யகோடிகளின் முக்கிய வேலை, அந்தர காந்தாரம் கேட்கும் அளவிற்கு தம்புராவில் ஸ்ருதி சேர்ப்பதுதான்.
தொழில்நுட்பம் வளரவும் electronic tambura மேடைகளுக்கு வர ஆரம்பித்தது. சிலர் சி.டி-யில் ஸ்ருதியை பதிவு செய்து அதனை ஹாலில் போட்டும் பாடுகின்றனர். இன்றைய தேதியில் வெறும் தம்புராவை மட்டும் வைத்துக் கொண்ட கச்சேரிகள் என்பது நடப்பதே இல்லை.
பெரும்பான்மையான மத்தியான வேளை கச்சேரிகளில் வெறும் ஸ்ருதி பெட்டி மற்றும் வைத்தே பாடி விடுகின்றனர். சாயங்கால ப்ரைம் ஸ்லாட் கச்சேரிகளில் மட்டும்தான் தம்புராவும் இசைக்கப் படுகிறது.
இந்தத் தம்புராவால் பயன் என்ன?
1. கரண்ட் போனாலும் தம்புராவில் ஸ்ருதி வரும்.
2. ஒருவர் சில நூறுகள் சம்பாதிக்கக் கூடும்.
நல்ல விஷயம்தானே. இருந்துவிட்டுப் போகட்டுமே எனலாம். ஆனால், இதில் சில பிரச்னைகள் உள்ளன.
1. தம்புரா மீட்டுவதும் கலைதான். நிறைய கச்சேரிகளில் தம்புராவில் ஸ்ருதி கலைந்து கொண்டே இருக்க, பாடுபவர் பாடுவதை விட்டுவிட்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்து விடுகிறார். பாடுபவருக்கும் கேட்பவருக்கும் இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
2. எவ்வளவுதான் கஷ்டப் பட்டு சேர்த்தாலும், தம்புராவில் இருந்து எழும் நாதம் அரங்கில் ஒலிப்பதே இல்லை.
3. பேட்டரி back-up உள்ள ஸ்ருதி பாக்ஸ் வடிவமைப்பு ஒன்றும் அத்தனை கடினமானதல்ல.
4. நிறைய கலைஞர்களுக்குத் தம்புரா போடுவது சிஷ்யர்களாக இருக்கிறார்கள். ஆதலால், தம்புராவை நீக்கினால் ஒரு ஆளின் ஊதியத்துக்கு பங்கம் உண்டாகிறது என்றும் கூறிவிட முடியாது.
பாரம்பரிய சின்னம் என்ற ஒரே காரணத்துக்காக இன்றைய கச்சேரிகளில் தம்புரா வைத்திருக்க வேண்டுமா? அல்லது தம்புராவினால் ஏதேனும் உண்மையான உபயோகம் இன்றளவும் இருக்கின்றதா?
அறிந்தவர்கள் கூறலாம்…
நான் பார்த்த பல கச்சேரிகளில் தம்புரா யாராவது இசைகற்போர், அல்லது பாடகரின் மாணாக்கர் இசைப்பார்கள். அதனால் அந்த மாணாக்கருக்கும்; இசை கற்பவருக்கும் மேலதிக ஒன்றிய கேள்வி ஞானத்துக்கு வழி வகுக்கலாம் என நம்புகிறேன்.
இது பற்றி இசைவல்லுணர்களே! முடிவு செய்யவேண்டும்.
Johan: தம்புரா மீட்டாமலும் அதே கேள்வி ஞானத்தைப் பெறலாம்தானே?
லலிதாராம்,
இதுபற்றி ஒரு எழவும் தெரியாமலே இங்கே கேள்வி கேட்கத் துணிந்த என் தைரியததை நீங்கள் பாராட்டியே தீர வேண்டும்.
பொதுவாக வாத்தியக் கருவிகளின் நேரடி இசைக்கும் கணினி மூலம் பயன்படுத்தப்படும் சிந்தசைசர் கருவிகளின் ஒலிக்கும் உள்ள வேறுபாட்டை சற்று நுட்பமாக கேட்டால் கண்டுபிடித்து விட முடியும் என்று நம்புகிறேன், இன்று பெரும்பாலும் கணினி மூலம் வாத்தியங்களின் இசை பயன்படுத்தப்படுகிறது என்றாலும்.
அதைப் போல் நேரடியாக இசைக்கப்படும் தம்புராவின் ஒலிக்கும் நீங்கள் சொல்லும் எலெக்ட்ரானிக் தம்புராவின் ஒலிக்கும் நுட்பமான ரசிகரால் வித்தியாசத்தை உணர முடியுமா?
சுரேஷ் கண்ணன்,
நுட்பமாய் கேட்டால் வித்தியாசம் கண்டுபிடிக்கலாம் என்றே நினைக்கிறேன்.
ஆனால்,தம்புராவில் துல்லியமாக ஸ்ருதியை சேர்ப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. மோகமுள் படித்திருப்பீர்கள். அதில் ரங்கண்ணா சொல்வாரே, “என்றோ ஒரு நாள்தான் இப்படி ஸ்ருதி சேரும்”, என்று. ஹாலின் ஏஸிக்கும் தம்புராவுக்கும் கூட ஒத்துக் கொள்ளாமல் போகலாம்.
அடிப்படையில் ஒரு வீணையையோ, வயலினையோ கணிணி கொண்டு synthesixe செய்யும் போது, வாத்தியத்தின் இனிமை சற்று குறையக் கூடும். தம்புராயைப் பொறுத்த மட்டில், அது ஸ்ருதியின் அளவைக் கூறும் கருவி மட்டுமே. அதனால், electronic tambura உபயோகிப்பதில் எந்தப் பாதகமும் இல்லை என்றே நினைக்கிறேன்.
அல்லது, தம்புராவை வைத்துக் கொள்வதால், பெரிய சாதகம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.
தம்புராவை நிறுத்தி வைச்சா துணி காயப் போடலாம். எலெக்ட்ராணிக் தம்புரால்ல அது முடியுமோ?
அண்ணே உங்க கால் எங்கண்ணே _/\_
ஒரு தம்புராவிற்கும் பாடும் கலைஞனுக்கும் உள்ள பிணைப்பை இவ்வளவு சாதாரணமாக தூக்கிப்போட்டுவிட்டீர்கள்? தம்புராவை வெறும் ஒலியெழுப்பும் கருவியாக மட்டும் பார்ப்பதனால் வந்த விணை. அது அப்படியல்ல என்று உறுதியாகச் சொல்வேன். எனது ஆசிரியர் பாடம் தொடங்கும் முன்னர் சரியாக ஒரு அரைமணிநேரமாவது தம்பூரா ஸ்ருதி சேர்க்கச்சொல்வார். பிறகு அதை மடியில் வைத்து ஒரு 15 நிமிடம் மீட்டிய பிறகே வகுப்பு துவங்கும். ஒன்றை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். தம்பூராவை மடியிலிருத்தி மீட்டும்போது நம் உடல் அனைத்திலும் அது ரீங்காரமிடுவதை அனுபவித்தால்தான் தெரியும். காதோரம், கைமணிக்கட்டு, மார்பு, அடிவயிறு கால்கள் என்று அனைத்திலும் அதன் ரீங்காரத்தை உணரமுடியும். ஸ்ருதியே நாமாக ஒலிப்பதுபோல. அந்த அனுபவம் சாதாரணமாக புரிந்துகொள்ளக்கூடியது அல்ல. அது நமக்கும் தம்பூருக்குமான உறவைப்பொறுத்தது. இப்போதெல்லாம் சிறிய பெட்டியை கரண்டில் வைத்தால் சுருதியாம்… இங்கே ஒலியல்ல முக்கியம்… அந்த கருவிக்கும் கலைஞனுக்குமான உறவு. சும்மா ஸ்டேஜ் பெர்ஃபார்மிங் ஆர்டிஸ்ட் அடிக்கும் கூத்து எல்லாம் சும்மா…!!
ராம்,
நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. பாடுபவர்கள் எல்லாம் ஸ்ருதியோடு ஒன்றிப்போக தம்புராவைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், தம்புராவுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கத்தான் செய்கிறது என்று கூறலாம். ஆனால், இன்று சாதகமும், கச்சேரியும் எலெக்டிரானிக் தம்புரா இன்றி நடை பெறுவதில்லையே. நீங்கள் சொல்வது போன்ற உறவு பாடகருக்கும் தம்புராவுக்கும் இல்லாத பட்சத்தில், வெறும் பாரம்பரியத்துக்காக வேண்டி ஒரு தம்புராவை கச்சேரியில் மீட்டுதல் தேவையில்லை என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?
//bb
தம்புராவை நிறுத்தி வைச்சா துணி காயப் போடலாம். எலெக்ட்ராணிக் தம்புரால்ல அது முடியுமோ?//
1. இது விஷயமாக கருத்து கூறவேண்டியவர்கள்,
தம்புராவை வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல.
அதை உபயோகப்படுத்துபவர்கள்.
2. தம்புராவிலிருந்து தற்போது மின்ஸ்ருதிப் பெட்டிக்கு
மாறியவர்கள்.
3. நன்கு ஸ்ருதி சேர்க்கப்பட்ட தம்புராவையும் மின்ஸ்ருதிப்
பெட்டி ஒலியையும் பிரித்தறிய இயலாத காலம்
வரும்போது இக்கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெறும்.
அது, திருவையாற்றில் தொலைக்காட்சி நேரலை
நிறுத்தப்பட்டால், ஆராதனைக்கு எத்தனை பேர்
வருவார்கள் என்ற கேள்வியை ஒத்ததாக இருக்கும்.
4. மின்ஸ்ருதிப் பெட்டிமட்டுமல்ல; தம்புராவின் நாதம்
பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகளும் உபயோகப்
படுத்தப்படுகின்றன.
5. தம்புராவில் ஸ்ருதி சேர்ப்பது, பாடுபவர்களுக்கு
மட்டுமன்றி, பக்கவாத்யக்காரர்களுக்கும் தேவையான
பயிற்சி. அது, ஸ்வரங்களின் வசிப்பிடங்களை எளிதில்
அடையாளம் கொள்ளவும், அதனுடனே சேர்ந்து
வசிக்கவும்-வாசிக்கவும் வைக்கும்.
6. ஸா.. பா.. ஸா.. என்ற எல்லைகளை வகுத்தலும் புரிந்து
கொள்ளலும் கைகூடுவது, ஏனைய ஸ்வர
ஸ்தானங்களை எளிதில் விளங்க வைக்கும்.
7. தம்புரா இன்றியமையாதது அதன் நாதத்தால் மட்டுமல்ல,
வித்வத் இலக்ஷணங்களுள் அதுவும் ஒன்று.
//தம்புராவில் ஸ்ருதி சேர்ப்பது, பாடுபவர்களுக்கு
மட்டுமன்றி, பக்கவாத்யக்காரர்களுக்கும் தேவையான
பயிற்சி. அது, ஸ்வரங்களின் வசிப்பிடங்களை எளிதில்
அடையாளம் கொள்ளவும், அதனுடனே சேர்ந்து
வசிக்கவும்-வாசிக்கவும் வைக்கும்.
Absolutely, it gives us a clear idea on the swarasthanams. And by electronic … it is about justclicking the right button.
This would lead to other questions like.. now that synth or keyboard can play all music instruments .. so can we neglect those instruments…?
Even electronic tabla, electronic veena have come.. aiding with electronics is differrent.. but getting an “electronic” instrument insteadof “electric” performance is NOT good
நிறைய மாற்றங்களை எல்லா தளங்களுமே சந்தித்து அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டு வளர்கின்றன. ஆனால் மேடை கச்சேரி முழுதாக மனித பிரயத்தனங்களால் அமைகையில் ஒரு கலைஞர் சுருதி போடுவது முழுமையாக அமையும். (மைக் தவிர்க்க முடியாத விஷயம்) . ” நீங்கள் சொல்வது போன்ற உறவு பாடகருக்கும் தம்புராவுக்கும் இல்லாத பட்சத்தில்” எலக்ட்ரானிக் தீர்வுதான். கர்நாடக சங்கீதத்திற்கு வற்றும் கலைக்கான எல்லா அறிகுறியும் இருக்கின்றன. ஆகவே அதை காப்பற்றப்போவது டெக்னாலஜிதான் என்பதாக சுஜாதா எப்போதோ எழுதியதாக நினைவு. தம்பூராவைக் கடித்து பக்க வாத்யங்களை கடித்து …….பின்னொரு நாளில் தேவையா மிருதங்கம் என்று ஆகிவிட்டால்?
ரமேஷ் கல்யாண்,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
தம்புரா தேவையில்லை எனறு நான் கூறவில்லை. தேவையா என்று கேட்டேன். தம்புராவால் கலைஞர்களுக்கு சௌகரியம் என்றால் தம்புரா நிச்சயம் தேவைதான்.
ஆனால், இன்று பல இடங்களில் தம்புரா என்பது சடங்காகத்தான் இருக்கிறது. சடங்குக்காக தம்புரா தேவையா என்பதுதான் என் கேள்வி.
naano neengalo thambura podavum illai, poda vaikkavum illai. namakku edhukku indha vendadha velai? thambura venduma vendama enbadhu padagar mudivu panna vendiya vishayam. silarukku chatniya ammila arachathan pidikkum