வரலாறு.காமின் போன இதழ் வெளியான பின்னர்தான் அதை எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.
தொலைபேசியிலும், தனிமடலிலும், வேறு தளங்களின் மூலமாகவும், அன்பாகவும், உண்மையான அக்கறையுடனும், மரியாதையாய் மிரட்டியும், அச்சுறுத்தலாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட அனைவருக்கும் நன்றி.
தங்களுக்கான பதில் நேற்று வெளியாகியுள்ள வரலாறு.காம் இதழின் தலையங்கத்தில் உள்ளது. இங்கு படிக்கலாம்.
வரலாற்றை உணர்ச்சிப் பூர்வமாக அணூகாமல் முதன்மைத் தரவுகள் மட்டும் வைத்தே அணுகவேண்டும் என்பதே எங்கள் தாரக மந்திரம். அதனின்று வழுவாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை நிதர்சனமாய் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பைச் சென்ற இதழ் தலையங்கம் அளித்தது. அந்தக் கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் சில வரிகளால் யாரேனும் புண்பட்டிருப்பின் பொறுத்தருளுமாறு ஆசிரியர் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
சித்திரையில் கொண்டாடுவோரைத் தூற்றுவது எங்கள் நோக்கமன்று. எப்போது கொண்டாடுவது என்பது தனி மனித விருப்பம்.
எது வரலாறு என்பதில்தான் எங்களுக்கு அக்கறை. அதை இந்த இதழ் தலையங்கம் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்.