பரிவாதினியில் நாகஸ்வரத்துக்கு என்றுமே தனி இடமுண்டு. 2013-ல் தொடங்கி நாகஸ்வர நிகழ்ச்சிகள் இல்லாத பரிவாதினி இசைவிழாகள் இல்லாத நிகழ்ச்சி நிரலைக் காண முடியாது. இசைத் தொடரில் சம்பிரதாயமாக மங்கல வாத்யம் என்று ஒரு மணிக்கு குறைவாய் நாகஸ்வரக் கலைஞரை வாசிக்க வைப்பதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. அதனால் பரிவாதினியில் இடம் பெற்ற நாகஸ்வர கச்சேரிகள் அனைத்துமே மற்ற கச்சேரிகளுக்கு இணையான நேர அளவில்தான் அமையும்படி பார்த்துக் கொண்டு வருகிறோம்.
சில மாதங்களுக்கு வைணவ நாகஸ்வர மரபை ஆவணமாக்க இணையத்தில் உதவி கோரிய போது கிடைத்த ஆதரவு உண்மையில் நம்பமுடியாத வகையில் இருந்தது. அதுவே வழக்கமாக ஏற்பாடு செய்யும் வருடத்து ஒன்றிரண்டு நாகஸ்வர கச்சேரிகளைத் தவிர இன்னும் ஏதாவது செய்யத் தூண்டியது.
அந்த எண்ணத்தின் அடுத்த நிலைதான் நாத இன்பத்துடன் பரிவாதினி சேர்ந்து நடத்தும் இருமாதத்துக்கு ஒருமுறை நாகஸ்வர கச்சேரிகள். இதன் தொடக்கம் ஜூலை மாதம் நிகழ்ந்தது.
சின்னமனூர் விஜய்கார்த்திகேயனும், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜாவும் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அற்புதமாக வாசித்தனர். நாகஸ்வரத்துக்கே உரிய தத்தகாரப் பல்லவி அந்தக் கச்சேரியின் உச்சம் என்று நினைக்கத் தோன்றும் – அன்று அவர்கள் வாசித்த ராகமாலிகையைக் கேட்கும் வரை.
கோயில்களில் உற்சவ மூர்த்தி வீதி வலம் முடித்தபின், கோயில்வாசலுக்கு வந்து திருவந்திக் காப்பு முடித்து தன் இருப்பிடத்துக்குப் போகும் போது படியேற்றம் வாசிக்கப் படும். அதாவது ஒவ்வுரு படியாய் ஏறி தன் அறைக்குச் செல்லும் போது ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொருராகம் இசைக்கப்படும். கிட்டத்தட்ட பத்து வினாடிகளுக்குள் ஒருபடியைக் கடக்கும் கணத்தில் ஒரு ரகத்தைக் கடப்பார்கள் நாகஸ்வரக் கலைஞர்கள். இந்த நிகழ்வை மனக்கண் முன் நிறுத்தி அன்று கார்த்திகேயனும் இளையராஜாவும் வாசித்த ராகமாலிகையை நேரில் கேட்ட்வர்கள் புண்ணியம் செய்தவர்கள். (அவர்களைக் காட்டிலும் அளவில் சற்று குறைவாய் புண்ணியம் செய்தவர்களுக்காக இணைப்பு கீழே)
பரிவாதினி ஒருங்கிணைத்த நிகழ்வுகளில் கச்சேரி முடிந்தும் பல வாரங்களுக்கு பரபரப்பாய் பேசப்பட்ட நிகழ்ச்சி இதுதான்.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இஞ்சிக்குடி மாரியப்பன் அவர்களின் கச்சேரி இடம் பெற்றது. ஆரம்பம் முதல் கடைசி வரை பல அரிய பாடல்களின் ஆவணமாக அந்தக் கச்சேரி அமைந்தது. அவர் வாசித்த நீதிமதி அந்தக் கச்சேரியின் சிகரம் எனலாம்.
அன்ர்த மூன்றரை மணி நேர இசை மழையைத் தொடர்ந்து வரும் நவம்பர் 3-ம் தேதி ஒரு அரிய நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது.
இணையத்தில் இசையைத் தேடி அடைபவர்களுக்கு யாழ்பாணம் பாலமுருகனின் இசையைத் தெரிந்திருக்கும். அவர் வாசித்த பல இசைத் துளிகள் ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் மிகவும் பிரபலம். சென்ற வருடம் கோலப்பன் ஹிந்துவில் எழுதியிருந்த கட்டுரையில், கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும் இந்தக் கலைஞனை அழைக்கும் அளவிற்கு தமிழ்நாடும், சென்னை சபைகளும் அழைப்பதில்லை என்று எழுதியிருந்தார். அந்தக் குறை பரிவாதினியின் மூலம் தீர்வதில் எனக்க்குப் பெருமகிழ்ச்சி.
நினைத்த மாத்திரத்தில் கேட்டுவிடும் தூரத்தில் இல்லாத ஓர் கலைஞனின் அரிய நிகழ்வென்பதால் ரசிகர்கள் திரளாக வந்து ரசித்து இன்புற வேண்டும் என்று கோருகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த, பொருளாதர வசதி அதிகம் இல்லாத மூன்று நாகஸ்வர மாணவர்களுக்கும் ஒரு தவில் மாணவருக்கும் வாத்தியங்கள் வழங்கி மகிழவுள்ளோம்.
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆதாரம் பரிவாதினியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவியும் ஊக்கமும்தான். அதற்கு எத்தனை முறை நன்று கூறினாலும் ஈடாகாது.
இந்தத் தொடர் நிகழ்வுகளுக்கு பங்களிக்க விரும்புவோருக்காக க்வங்கிக் கனக்கு கீழே அளிக்கப்பட்டுள்ளது. பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடைகள் செக்தன் 80ஜி-யின் கீழ் வருமானவரிச் சலுகைக்கு தகுதிபெற்றவை.
இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.
கடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்று தெரிய வருகிறது.
செபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.
சாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும், இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.
இந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.
தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் வாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.
தன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.
மணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:
ஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.
அவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார். உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.
“அதுக்கென்ன ஐயா! அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.
சில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.
அப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா! பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.
“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”
சொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.
சில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய்? இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே!”, என்றார்.
அப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.
“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.
அப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.
“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா?”
“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா! அப்படியே பண்ணி இருக்கேன்”
அப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.
“ஏய்! இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா!”, என்றார்.
பர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.
“அப்ப எனக்கு வராதா!”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.
இந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.
பலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.
“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்”, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.
பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.
”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.
பொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.
இன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.
2014-ல் தினமலரில் எழுதியது. பதிவுக்காக இங்கும் போட்டு வைக்கிறேன்
அபர்ணா பார்வதி’ என்று டி.ஆர்.சுப்ரமணியத்தின் கணீர் குரலில் நளினகாந்தி அலையடித்துக் கொண்டுஇருந்தது. நிறைய கேட்கக் கிடைக்கும் ராகம் என்றாலும், இந்தப் பாடலில் விவரிக்க முடியாத, ஒரு புத்துணர்வு நிரம்பி வழிந்தது.
யார் புனைந்த பாடலிது? கற்பனைக்குப் பெயர்போன டி.ஆர்.சுப்ரமணியத்தின் மற்றுமொரு அற்புத வெளிப்பாடோ என்று எண்ணிக் குழம்புகையில், ”இந்தப் பாடல், கல்யாணி வரதராஜனுடையது,” என்று அறிவித்தார். அப்போதுதான் அந்தப் பெயர் முதன் முதலில் என் காதில் ஒலித்தது.
பின்னர் ஒருமுறை அவரிடம், இதுகுறித்து கேட்கையில், ”ஆந்திரத்தில் வளர்ந்த தமிழ்ப் பெண்மணி. அவர் பம்பாயில் புனைந்த சமஸ்கிருதப் பாடலைத் தான் அன்று பாடினேன். தானுண்டு தன் இசை உண்டு என்று வெளியில் தெரியாத எத்தனையோ ரத்தினங்களில் இவரும் ஒருவர்,” என்றார். பம்பாயில் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்த, கல்யாணி வரதராஜன் வாய்ப்பாட்டு, வயலின், வீணை மூன்றிலும் தேர்ந்து விளங்கினார்.
பம்பாய்க்கு கச்சேரி செய்ய சென்ற, எஸ்.கல்யாணராமன், எஸ்.ராஜம், டி.ஆர்.சுப்ரமணியம் போன்ற மேதைகள், இவரைத் தேடிச் சென்று, இவர் பாடல்களைக் கற்று கச்சேரிகளில் பரப்பிஉள்ளனர். தேர்ந்த சமஸ்கிருதத்தைத் தவிர, தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் புனைந்திருக்கும் இவர் ஐந்தாம் வகுப்பு வரையே படித்தவர் என்றொரு குறிப்பு தெரிவிக்கிறது. எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களிலும் மற்ற ராகங்களிலும், பல்வேறு தெய்வங்களின் பெயரில், இவரது பாடல்கள் அமைந்துள்ளன.
அழகான ஸ்வராக்ஷரங்களும், கச்சிதமான சிட்டை ஸ்வரங்களும், இசையைக் குலைக்காத சாகித்யங்களும் இவர் பாட்டில் நிறைந்திருக்கின்றன, வர்ணங்கள், கீர்த்தனங்கள், தில்லானாக்கள், ராகமாலிகைகள் என்று ஒரு முழுக் கச்சேரியே, இவர் பாடல்களைக் கொண்டு மட்டும் செய்யக்கூடிய வகையில், 700க்கு மேலான பாடல்களைப் புனைந்து உள்ளார். துந்துபி, பானு கீரவாணி போன்ற கேட்கக் கிடைக்காத ராகங்களிலும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், வடநாட்டு ராகங்களான த்விஜாவந்தி, மதுகவுன்ஸ், சந்திரகவுன்ஸ், குர்ஜரி தோடி போன்ற வற்றிலும் கீர்த்தனைகள் புனைந்து உள்ளார். இவர் கீர்த்தனைகளைத் தொகுக்கவும் பிரபலப்படுத்தவும் இவரது மருமகள் சரோஜா ராமன், டில்லி யில் இருந்தபடி பெருமுயற்சி எடுத்து வருகிறார். கல்யாணி வரதராஜனின் பேரன், டில்லி ஆர். ஸ்ரீனிவாசன் ஒரு சிறந்த மிருதங்க கலைஞர்.
துந்துபி, பானு கீரவாணி போன்ற கேட்கக் கிடைக்காத ராகங்களிலும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்று இருந்த இவர், வடநாட்டு ராகங்களான த்விஜாவந்தி, மதுகவுன்ஸ், சந்திரகவுன்ஸ், குர்ஜரி தோடி போன்றவற்றிலும் கீர்த்தனைகள் புனைந்துள்ளார்.
படங்கள்: கிருஷ்ணன் ராஜேந்திரம் (கல்யாணி வரதராஜனின் பேரன்)
இன்று காலை வயலின் வித்வான் ராகுல் சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனைப் பற்றிய காணொளியை அனுப்பியிருந்தார்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஓடும் அந்தப் படத்தை நிரப்பியிருக்கும் சந்துரு ஸாரில் கள்ளமில்லா சிரிப்புக்காகவே படத்தைப் பார்க்கலாம்.
அவர் வாசித்த பல கச்சேரிகளை நேரில் கேட்டிருக்கிறேன். அவர் வாசிப்பு இருக்கட்டும், மேடையில் அவர் தோற்றமே களை கட்ட வைத்துவிடும். வித்வான் என்பதைவிட முதல் ரசிகர் அவர். படத்தில் திரு.சேஷகோபாலன் கூறியுள்ளது போல, ஒரு நல்ல சங்கதிக்கு முதல் அங்கீகாரம் சந்துரு ஸாரிடமிருந்து வந்துவிடும்.
நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் வோலேடி வெங்கடேஸ்வருலு கச்சேரியில் சந்துரு ஸார் வாசித்திருக்கும் பூர்விகல்யாணியை அவர் வாசிப்புக்காகவே பலமுறை கேட்டுள்ளேன். அளவுக்கு மீறாத அமுதம் அந்த ஆலாபனை. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னால் திருவையாறு உற்சவத்தில் அந்து நிமிடத்துக்கும் குறைவாய் அவர் வாசித்த கல்யாண வசந்தம் அந்த மணல் தரையில் கூடியிருந்த ஆயிரக் கணக்கானோரை சொக்கிப் போக வைத்ததை இன்றளவும் மறக்க முடியாது.
இந்தப் படத்தில் மின்னல் கீற்றாய் ஒலிக்கும் அந்த சின்ன ஆபேரியும் இன்று அந்தக் கல்யாண வசந்தத்துடன் சேர்ந்து கொண்டது.
இந்தக் காணொளியை ஆவணப்படம் என்பதைவிட ஒரு கொண்டாட்டம் என்று சொல்லத் தோன்றுகிறது. கொண்டாட்டத்தின் நாயகனை நமக்களித்த சாருபாலா அவர்களுக்கும், அந்தக் கொண்டாட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட ராகுலுக்கும் நன்றி.
வழக்கமான நவம்பர் பரிவாதினி இசை நிகழ்ச்சிகளோடு இந்த வருடம் நவராத்ரியிலும் மூன்று நாட்களுக்கு இசை விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
விவரங்கள் இங்கே
ரசிகர்கள் ஆதரவினால்தான் இந்த நிகழ்ச்சிகள் நடத்த முடிகிறது. இதற்கு பங்களிக்க நினைப்போர் கீழுள்ள வங்கி விவரங்களைக் கண்டுகொள்ளலாம். பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடை செக்ஷன் 80G-யின் கீழ் வருமான வரிச்சலுகைக்கு தகுதியுறும்.
சங்கீத வித்வானும், ஓவியருமான மேதை எஸ்.ராஜம் அவர்களின் நூற்றாண்டு 2019 ஃபெப்ரவரியில் வருகிறது.
அதை முன்னிட்டு பல நிகழ்வுகள் திட்டமிடலில் உள்ளன. அதன் தொடக்கம் ஃபெப்ரவரியில் நடக்கவுள்ளது. அதை முன்னிட்ட ராஜம் அவர்கள் பாடிப் பிரபலபடுத்திய பாடல்களை வைத்து ஒரு பாட்டுப்போட்டி நடத்தி, வெல்பவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் பரிசும், பின்பொரு தருணத்தில் பரிவாதினியில் கச்சேரி வாய்ப்பும் கொடுக்கப்படவுள்ளது.
போட்டியிn விவரங்களை ராஜம் அவர்களின் மாணவி விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியத்தின் பின்வரும் குறிப்பில் காணலாம்
I am happy to inform you that 2019 is the birth centenary year of my esteemed guru, the late Sangita Kala Acharya Sri S. Rajam.
An eminent musician and painter, he has contributed immensely to both the arts. He hasimmortalized the image of the musical trinity, Thyagaraja, Muthuswamy Dikshitar and Syama Sastry through his paintings. His creations have adorned the covers of numerous editions of Kalki and Kalaimagal magazines, especially the Deepavali Malars. Many of his paintings have been preserved for eternity in a time capsule at the Hindu Temple in Kauai Island, Hawaii.
With his training under great gurus like Papanasam Sivan, Madurai Mani Iyer, TL Venkatarama Iyer and others, Sri S. Rajam was a repository of many kritis in their most authentic renditions.
He brought the 72-melakarta ragas into the fold of concerts and sang them effortlessly,mesmerizing listeners with their bhava in his haunting voice. S. Rajam set to tune many compositions and many popular musicians render these at performances.
Among his most iconic works, Sri S. Rajam brought a new dimension to many music compositions by capturing them in paintings. He elevated the experience of listening to kritis by bringing them visual beauty and allowing audiences to watch the songs as they heard them.
It is my deepest wish to bring to wide audiences, the beauty and rapture of Sri S. Rajam’s art and musical vidwat. This is a wonderful opportunity for your sabha / school to partake in spreading the works of this great artist and familiarizing today’s music lovers and students to his greatness.
Sangita Kalacharya Sri S. Rajam Centenary Music Competition
It is planned to organize a music competition at a Global level with selection at two levels–a preliminary and a final round. The preliminary selections will be held in Mumbai, Bengaluru
and Chennai and the International finals will be held in December 2018 at Chennai. The competition will be held based on the repertoire of Sri S. Rajam — compositions popularized by him and compositions set to music by him. A folder containing the renditions of kritis by Sri S.
Rajam will be uploaded and intimated to the participating Sabhas/ Institutions/ individuals.
1. There will be two categories of competition
Junior – 12 — 18 years Senior – 18 – 30 years
2. List of 8 songs to be given for Junior category. List of 10 songs for Senior category.
Inclusion of one Vivadi raga kriti is a must for both categories.
3. Manodharma – Ragam, niraval and swara – is compulsory for the senior category.
4. The Prizes will be given at the Inaugural of the Grand Centenary Celebrations on February 8 2019 at the iconic Main hall of the Madras Music Academy.
5. Senior First prize is a beautiful traditional Tambura. The other prize winners will be given equally cherishable prizes.
The First prize winners will be given an opportunity to perform a concert in Chennai during the year, under the auspices of Parivadini.
6. Dates of the competition – The competition is held at two levels – preliminary at Mumbai, Bengaluru and Chennai. The
dates and venue will be intimated soon. The Final competition will be at Chennai.
There is no entry fee and the competition is open to all, from anywhere across the world.
We are delighted to welcome your organization to join us in this venture — a wonderful opportunity globally for aspiring young musicians!
Please feel free to mail me at Vijayalakshmy.subramaniam@gmail.com if you have any questions.
Warm regards
Sincerely,
Vijayalakshmy Subramaniam
போட்டிக்கான பாடல் பட்டியலைக் காணவும், அந்தப் பாடல்களை வித்வான் ராஜத்தின் குரலில் கேட்கவும் இங்கு சொடுக்கவும்
Sometime in the late 90s, I tuned in late on radio to a concert. The tanam had just begun. As Khamboji flowed I was trying to figure out who the player was. I was quite sure I hadn’t heard this musician before. The measured yet vibrant playing got me hooked onto the rest of the concert. At the end came the announcement and I had heard Vid. Geetha Bennett for the first time.
As I developed interest in Carnatic music, I was fascinated by the music and works of Dr. S. Ramanathan, Geetha Bennett’s father. There were a lot of mention about his work on Silapadikaram but it was not easy to locate the publication. In 2001, I was in the US to do my Masters degree and through internet I could locate Geetha Bennett. With a hope of finding Dr. SR’s book I drew courage to call her up. She must have been surprised to receive that call from a stranger. Internet bandwidth and ease of digitization were not great then. Geetha did mention she had his thesis but was hesitant to send me the only copy she had with her. That was the only conversation I had with her.
As years rolled over, my fascination to Dr. S. Ramanathan – the personality — only grew. I had the chance to discuss and learn more about him with his other family members, some students and many rasikas.
A few months before Dr. Ramanathan’s centenary year, I ran into an article by Geetha Bennett on her illustrious father. Her account was a fascinating read and left me longing for more. I wanted to meet her and get more insights from her. When I contacted her niece, I was shocked to know about her prolonged fight with cancer.
Despite ill health, she travelled to Chennai to be a part of her father’s centenary celebrations and played a wonderful tribute concert last year. The Senchurutti varnam (a composition of Dr. S.R on Tyagaraja and perhaps the only varnam composed in this raga) is still ringing in my ears.
Despite going over 50 chemo sessions, here she was, on a mission on YouTube to record and document at least 100 songs that she had learnt from Dr. S. Ramanthan. The videos that are available are a treasure trove bearing the undeliable stamp of Dr.SR. One can see that despite her frail state, the music had a rejuvenating effect on her. The way she glows along with the composition would be etched in my memory forever.
It is unfortunate and our loss that she could only partly realize her dream. Her students and other students of Dr. S.Ramanathan can perhaps fulfill her dream.
The first half of the twentieth century saw the ascent of Tamil Print magazines. Several artists enriched these publications through their illustrations. Of which, five artists viz. K.Madhavan, Gopulu, Silpi, Maniam and S.Rajam left an everlasting impact. Each of the above-mentioned artists are unique in their own way. One can broadly say, Shri. S.Rajam was unique in two counts.
He was not only a professional artist (Given the quality and the volume of his art works, he can only be classified as a professional artist) but also a professional musician with a full-time job at the All India Radio – Madras.
The style that he chose to portray his themes, inspired by the traditional Indian fresco paintings and the oriental water wash technique.
Early Years
S.Rajam was born on 10th Feb 1919. His father – V.Sundaram Iyer was a lawyer and a connoisseur of music. S.Rajam in an interview has mentioned that music and painting were like his two eyes. If it was his father’s interest that spurred Rajam to take up music, it was the way his mother Chellammal went about executing even the smallest chores with an aesthetic and artistic touch that drew him towards art.
Rajam went to P.S.High school where he met Lingiah (Uncle of artist Maniam). Lingiah’s interest in painting further enthused S.Rajam’s interest. Lingiah and Rajam would share the expenses for the art materials and spend their leisure hours in painting. To quote S.Rajam, “I never thought of joining the college of arts. I always wanted to be a professional musician. It was Lingiah who wanted to join the college of arts. Unfortunately, he died young due to illness. In a way, it was his wish that prompted me to join the Arts college.”
By the time S.Rajam had joined the college of arts, he had also acted in the lead role of a then blockbuster movie – “Seetha Kalyanam” (He had acted in three other movies as well). His tryst with the tinsel world had invited skepticism from the then principal of Government College of arts and renowned artist/sculptor D.P.Roy Chowdhry . But it didn’t take long for S.Rajam to prove his mettle. He topped the course every single year and won the prestigious Dr. Rangachari scholarship. He even got a double promotion that helped him finish the six-year course in five years.
During his college years, S.Rajam met Lewis Thompson – a poet and a follower of Ramana Maharishi. The acquaintance turned out to be lifechanging as Lewis Thompson introduced S.Rajam to the philosophy and concept of classical Indian art. Thompson’s words, “Art must represent nature; but not reproduce it”, became S.Rajam’s Tharaka Mantra. While the college course, inspired by the western view, focused on techniques for realistic portrayal, the Indian perspective was more symbolic and suggestive. An inspired Rajam would visit various temples and study the sculptures deeply to understand the portrayal and the philosophy behind it. The idea that the features of the Godly subjects in the sculptures were to depict “what is ideal” rather than “what is real” fascinated S.Rajam endlessly. Even before his graduation from the college of arts, it was clear to him that his works would be based on the classical Indian style.
In 1939, Rajam met K.V.Jagannathan – the editor of “Kalaimagal”. Rajam’s first published work depicting a Guru and his disciple appeared in Kalaimagal the same year. It was the first of the many that would follow.
By the time he graduated, his career as a musician had taken off reasonably well. After a short stint as the in-charge of music and dance for the celebrated dancer Ramgopal, Rajam joined All India Radio Madras. During his vacation and during the concert tours, Rajam visited places such as Thanjavur, Kanchipuram, Sittannavasal, Sigiriya and studied the paintings deeply. In 1945, he visited the Ajanta caves. The paintings in there proved to be a lifelong inspiration for Rajam.
His illustrations on the themes based on literature, mythology and philosophy became a regular feature in Kalaimagal and other published works of K.V.Jagannathan. It was a matter of time that his works were sought by other publications such as Dinamani, Kalki etc. The special issues like Deepavali Malar gave him ample space to explore his subjects in depth.
Painting Technique
Rajam developed a style of his own drawing inspiration from the Indian frescos and combining it with the Chinese water wash technique. The distinct lines (rekhas) and his depiction of features such as eyes, fingers were clearly inspired by the Classical Indian frescos and the water color technique was based on the Chinese style. Although most of his works were on hand made paper, he has also done several works on surfaces such as wood, silk etc. The staggering feature of his paintings is the literal and figurative layers buried in them. The depth that he managed to create is the fruit of his arduous technique.
His themes often required meticulous research. After research, he created the entire painting with the all details in his mind. He started off the paintings with a pencil outline depicting the central figure. The actual painting is done around this central figure thereby creating the required depth. He used layers of transparent colors. Each color is applied only to be washed away with water using a brush. Upon drying the next layer is applied and washed away. It is this series of washes and the combination of the colors that eventually gave the desired color scheming that was originally envisioned. After the application of the transparent colors, the opaque colors are applied over it. Finally, his characteristic ink outlines (rekhas) were done using a Fineliner pen.
Clearly, this technique requires immense patience and (depending on the size) each painting can take from a few weeks to a few months for completion. It was Rajam’s disciplined approach and incredible ability to multitask that allowed him to simultaneously work on several paintings. It was his capacity to quickly mentally switch from one theme to the other, as the paintings were drying, was the main reason for the volume of work he could produce.
His Works
It was in the early 1940s the Music Academy, Madras approached Rajam to paint the Carnatic music trinity. Rajam referred previous portrayals, studied written accounts and created the portraits. They were not just faces but had multiple layers in them hinting at their life events and their compositions. It will not be an overstatement to say that these portraits have reached an immortal status on par with the compositions of the trinity. His original paintings of the trinity on various surfaces and in a wide range of sizes can be seen in over hundred locations.
Apart from the Trinity, he had done hundreds of paintings based on Indian classical music. He has painted portraits of several notable composers such as Gopalakrishna Bharathi, Annamacharya, Purandaradasa, Othukadu Venkata Kavi etc. His portrayal of the seven swaras based on Muthiah Bhagavatar’s book ‘Sangita Kalpadrumam’ is another masterpiece. He has meticulously depicted the features associated with each of the swara including the color, ornament, life span, flower, Vahana, Rishi, Devata, Nakshatra, Rasa, Weapon, food etc.
If one studies his works chronologically, it can be inferred that he keeps modifying his works as he gets more and more details. This can be easily observed in his trinity as well as the Saptaswara paintings.
He has also illustrated hundreds of songs of many composers. As a musician, he had a penchant for unearthing rare compositions. That had also driven him to portray some of the rare compositions of famous composers (e.g. “Vidhi Chakradhulu and Dayaseyavayya of Tyagaraja). His other famous music-based works include the ‘Navagrahas’, ‘Panchalinga Kritis’ and the various forms of Ganapathi – all inspired from the kritis of Muthuswami Dikshitar. He also came up with a unique musical letter pad that had line drawings of about hundred classical compositions with a short description.
Apart from music, literature and mythology proved to be great inspirations for his paintings. Thematic series including Dasavatara, Ashta Dikpalakas, Ashta Lakshmi, Sapthamatrika etc are some of his critically acclaimed works based on mythology.
His art work has adorned several books. One fabulous example is the Scenes from the Ramayana illustrated in the Valmiki Ramayana Publication. Some of his works have also been compiled as books. Notable ones are the Chitra Periya Purana – depicting the legends of the 63 Nayanmars and the Thiruvilaiyadal Puranam – depicting the 64 divine plays of Shiva. Another book titled “Dancing with Shiva” published by the Himalayan Academy, USA has over hundred works of Rajam reproduced with exemplary production value.
Although not in large numbers, Rajam has handled several contemporary themes as well. Even in handling such themes (e.g. a typical day in a South Indian Women’s life), his approach is true to his style.
Despite achieving singular heights in multiple fields, Rajam was humility personified. He lived a simple and contented life. Greatness sat lightly on him. Money or fame were never his priorities. While he never sought for accolades, plenty of unique honors reached him. One example would be the preservation of his paintings in the time capsule built by the Kauai Hindu Monastery in Hawaii.
Rajam passed away in 2010 at the ripe age of 90. He was seen painting even a week before his passing away.