Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஆவணப்படம்’ Category

ஓவியர், பாடகர், நடிகர், ‘சங்கீத கலா ஆசார்யர்’ எஸ்.ராஜம் அவர்களின் நூற்றாண்டு இந்த வருடம்.

அதன் தொடக்கமாய். வரும் வெள்ளிக்கிழமை, ஃபெப்ரவரி 8-ம் தேதி, சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு நிகழ்வு நடக்கிறது.

அதன் விவரங்கள்

PHOTO-2019-02-05-19-13-05.jpg

PHOTO-2019-02-05-19-13-05 (1)

அவர் நூற்றாண்டை முன்னிட்டு நிகழ்ந்த பாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவரைப் பற்றிய ஆவணப்படத்திலிருந்தும் பல சுவாரஸ்ய காட்சிகளைக் காணும் வாய்ப்பும் உள்ளது. அவருடன் பழகிய பலரின் அனுபவப் பகிர்வும் நிகழ்ச்சிக்கு செறிவு சேர்க்கும்.

இவைத் தவிர, அவர் ஓவியத்தை முன் வைத்து ஒரு நாட்டிய நிகழ்ச்சியும் (நவ்யா நடராஜன்), அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசைக் கச்சேரியும் (ரஞ்சனி காயத்ரி) இடம் பெறவுள்ளது.

இந்த அரிய நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். கலை ரசிகர்கள் வந்து ரசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இது தொடங்கி, இன்னும் ஓராண்டுக்கு மாதம் ஒரு கச்சேரி ராஜம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் பரிவாதினியின் மூலம் நடக்கவுள்ளது.

முதல் கச்சேரியாய். ஃபெப் 22-ம் தேதி எஸ்.ராஜத்திடம் கற்ற பாடகர் அக்ஷய் பத்மநாபன் பாடுகிறார்.

இந்த முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விழைவோர்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

என்ற வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

 

 

Read Full Post »

இன்று காலை வயலின் வித்வான் ராகுல் சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனைப் பற்றிய காணொளியை அனுப்பியிருந்தார்.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஓடும் அந்தப் படத்தை நிரப்பியிருக்கும் சந்துரு ஸாரில் கள்ளமில்லா சிரிப்புக்காகவே படத்தைப் பார்க்கலாம்.

cs-photo

அவர் வாசித்த பல கச்சேரிகளை நேரில் கேட்டிருக்கிறேன். அவர் வாசிப்பு இருக்கட்டும், மேடையில் அவர் தோற்றமே களை கட்ட வைத்துவிடும். வித்வான் என்பதைவிட முதல் ரசிகர் அவர். படத்தில் திரு.சேஷகோபாலன் கூறியுள்ளது போல, ஒரு நல்ல சங்கதிக்கு முதல் அங்கீகாரம் சந்துரு ஸாரிடமிருந்து வந்துவிடும்.

நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் வோலேடி வெங்கடேஸ்வருலு கச்சேரியில் சந்துரு ஸார் வாசித்திருக்கும் பூர்விகல்யாணியை அவர் வாசிப்புக்காகவே பலமுறை கேட்டுள்ளேன். அளவுக்கு மீறாத அமுதம் அந்த ஆலாபனை. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னால் திருவையாறு உற்சவத்தில் அந்து நிமிடத்துக்கும் குறைவாய் அவர் வாசித்த கல்யாண வசந்தம் அந்த மணல் தரையில் கூடியிருந்த ஆயிரக் கணக்கானோரை சொக்கிப் போக வைத்ததை இன்றளவும் மறக்க முடியாது.

இந்தப் படத்தில் மின்னல் கீற்றாய் ஒலிக்கும் அந்த சின்ன ஆபேரியும் இன்று அந்தக் கல்யாண வசந்தத்துடன் சேர்ந்து கொண்டது.

இந்தக் காணொளியை ஆவணப்படம் என்பதைவிட ஒரு கொண்டாட்டம் என்று சொல்லத் தோன்றுகிறது. கொண்டாட்டத்தின் நாயகனை நமக்களித்த சாருபாலா அவர்களுக்கும், அந்தக் கொண்டாட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட ராகுலுக்கும் நன்றி.

Read Full Post »

ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.

அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

Read Full Post »

ஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:

மல்லாரி 1:

மல்லாரி 2:

மல்லாரி 3:

மல்லாரி 4:

மல்லாரி 5:

மல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

Read Full Post »

நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.

ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

மூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,

இந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

இரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.

இன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.

 

 

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

இங்கு குறிப்பிடதைப் போல, ஊர்வலத்தின் தொடக்கத்தில் மல்லாரிகள் இசைக்கப்படும். தேரடியை அடைந்ததும் அந்த நாளுக்குரிய ராகங்கள் இசைக்கப்படும்.

சைவ மரபை ஆவணப்படுத்தும் போது, இரண்டாம் நாள் ராகத்துக்கு முன்னும் இன்னொரு மல்லாரியை பதிவு செய்யக்கூடிய பேறு கிட்டியது.

இதில் தவில் வித்வான் அலாரிப்பு வாசித்து தொடக்கி வைக்க அதன்பின் இசைக்கப்படும் மல்லாரியில் திரிகாலம் முதலான நகாஸுகளைக் காணலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).

இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.

ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:

தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும்.  பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.

ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

கோயில்களில் நடக்கும் புறப்பாடுகளில் வாசிக்கப்படும் உருப்படி மல்லாரி. கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த மல்லாரியில் வாசிக்கின்ற தருணத்திற்கும், கலைஞரின் திறனுக்கேற்றும் சுருக்கமாகவோ, விரிவாகவோ மல்லாரிகள் வாசிக்கப்படும். சாஹித்யங்களின்று தத்தகாரங்களினால் இசைக்கப்படும் மல்லாரியை முதலில் ‘அல்லாரிப்பு’ (கண்ட நடையில்) வாசித்து தவில் கலைஞரே தொடங்கி வைப்பார். தத்தகார அமைப்பை திஸ்ரம் செய்வது, திரிகாலம் செய்வது, கல்பனை ஸ்வரம் வாசிப்பது போன்ற மேன்மெருகேற்றல்களும் நடைபெருவதுண்டு.

பதினொரு நாள் நடைபெரும் திருவிழாவில், பெரும்பாலான நாட்களில் பஞ்ச மூர்த்திகளின் உலா இடம் பெறும். சிதம்பரத்தை பொருத்தமட்டில், உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு வீதிக்கு வரும் வரையில் ஒரு மல்லாரியும் (ஒப்பீட்டளவில் எளிமையான ஒன்று), வீதிக்கு வந்ததும் வேறொரு மல்லாரியும் (ஒப்பீட்டில் நுணுக்கங்கள் நிறைந்த ஒன்று – உ.தா. – திரிபுட தாள மல்லாரி) இடம் பெறும். இந்த மல்லாரி உற்சவர் தேரடி அடைந்து மாட வீதிகளில் திரும்பும் வரை வாசிக்கப்படும்.

இந்த இணைப்பில் முதலில் புறப்பாட்டின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் மல்லாரியும், அதனைத் தொடர்ந்து திரிபுட தாள மல்லாரியும் இடம்பெற்றுள்ளன.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

Older Posts »