Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நாகஸ்வரம்’ Category

திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளைக்கு ‘நாகஸ்வர யமன்’ என்றொரு பட்டப் பெயர் உண்டு.

பல்லவிகள் வாசிப்பதில் நிபுணரான இவருடன் இணைந்து வாசிப்பது சிரமமென்பதால் மட்டுமல்ல அந்தப் பெயர். யமன் தர்மராஜா ஆயிற்றே. ஏழை-பணக்காரன், நல்லவன் – தீயவன், இளைஞன் – முதியவன் என்கிற பாகுபாடெல்லாம் தெரியாது. அவன் தர்மம் எதுவோ அதில் வழுவாதிருப்பான். அது போல, உடன் வாசிப்பவர்களுக்கு தாளம் நிக்குமா, தாளம் போடும் பையன் ஓட்டம்/இழுப்பு இல்லாமல் போடுவானா, கூட்டத்தில் இருப்பவர்கள் பல்லவியின் தாளத்தை கிரகிக்க முடியாமல் அவர்கள் பாட்டுக்கு ஒரு தாளத்தைப் போட்டு கலைஞர்களைக் குழப்பாமல் இருப்பார்களா என்றெல்லாம் திருமெய்ஞானத்தாருக்குக் கவலையே இல்லை. அவருடைய லய நிர்ணயம் தர்மராஜனைப் போன்றது.

அவர் வாசித்த பல்லவி பதிவுகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அவர் வாசித்த பைரவி வர்ணமும், நாட்டைக்குறிஞ்சி வர்ணமும் வாசிப்பின் நளினத்தையும் லய நிர்ணயத்தையும் பறை சாற்றுகின்றன.

அவற்றைப் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம். இன்று சொல்ல வந்தது திருமெய்ஞானத்தார் சினிமாவில் வாசித்ததைப் பற்றி.

இரண்டு படங்களில் அவர் நாகஸ்வரம் இடம் பெற்றுள்ளது. வெளிச்சத்துக்கு வாங்க படத்தின் தொடக்கத்தில் பெயர் போடும் போது ‘ஹிந்தோள ராக’ கிருதி ஒன்றை வாசித்துள்ளார். யூடியூபில் தேடினால் படம் கிடைக்கிறது.

அவர் வாசித்த இன்னொரு படம் ‘நாத நார்த்தகி’. கொஞ்சும் சலங்கையில் காருக்குறிச்சியாரும் எஸ்.ஜானகியும் இணைந்தது போல வாணி ஜெயராமுடன் சேர்ந்து வாசித்த பாடல் என்று தெரிய வருகிறது. துரதிர்ஷ்ட வசமாய் படம் வெளிவரவில்லை. பாடல் பதிவு வெளியானதா என்றும் தெரியவில்லை.

நேற்று திருமெய்ஞானத்தாரின் இளைய மகன் ராமநாதன் பரிவாதினிக்காக கச்சேரி செய்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் தனக்குப் பாடமிருப்பதாய் கூறினார். கச்சேரியில் இந்தப் பாடலையும் சேர்த்துக் கொள்ள வேண்டிக்கொண்டேன்.

கர்நாடக, பக்தி, திரை இசை ஆர்வலர்களுக்கு இந்தப்பாடலைக் கேட்க ஆவலாயிருக்கலாம். ஆர்வமிருப்பவர்களுக்காக இந்த இணைப்பு:

Read Full Post »

Parivadini comes to Bangalore!

We are excited to announce that now we will be organising nagaswaram concerts in Bangalore as well. The first concert is scheduled in September! Details in the flyer.

Parivadini Bangalore

We would like to thank Vid. TS Satyavati for inspiring us to start this.

Seeking your support as always!

Read Full Post »

Parivadini has been doing various activities to document nagaswara tradition, support artists and help out talented students in need. This video is an appeal to support the cause.

Bank Details:

Parivadini Charitable Trust,

Union Bank of India

Account Number: 579902120000916

branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

Donations to Parivadini are eligible for exemptions under Income Tax act 80G.

Read Full Post »

சென்ற ஆண்டு தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாத இன்பத்துடன் சேர்ந்து, நாகஸ்வர கச்சேரி ஒன்றை பரிவாதினி ஒருங்கிணைத்து வருகிறது.

அந்த வரிசையில் இந்த மாதம் 27-ம் தேதி, நெம்மாரா சகோதரர்களின் கச்சேரி ஏற்பாடாகியுள்ளது. கேரளத்தைச் செர்ந்த இந்த கலைஞர்கள் சமீப காலத்தில் சங்கீத உலகில் நல்லதொரு பெயரை ஈட்டி, அனைத்து பிரபல அரங்குகளிலும் வாசித்து வருகின்றனர். இவர்களுடன் தேர்ந்த தவில் கலைஞர்களான திருராமேஸ்வரம் ராதாகிருஷ்ணனும், தாராபுரம் கணேஷும் வாசிக்கவுள்ளனர்.

PHOTO-2019-04-16-11-43-34

வழக்கம் போல், கச்சேரியுடன் சேர்ந்து திறமையுள்ள ஆனால் நிதி நிலை ஸ்திரமாக இல்லாத இரு மாணவர்களுக்குத் தவிலும் நாகஸ்வரமும் வழங்கப்படவுள்ளது.

இம்முறை தவில் பெறும் மாணவர் பதினைந்து வயது நிரம்பிய மணிகண்டன். இவர் தென்திருப்பதி அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார். நாகஸ்வரம் பெறும் மாணவர் சிவகுருகணேஷ். பதினேழு வயது நிரம்பிய இவர், திருவையாறு அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார்.

கச்சேரிகளுக்கோ, வாத்தியம் வழங்குவதற்கோ நன்கொடை அளிக்க விரும்புவோர் இங்கு குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கில் நன்கொடை அளிக்கலாம்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

 

Read Full Post »

Nagaswaram Not Allowed

I had written this on facebook a few years ago. Posting it here as well (for my reference).

இரண்டு நாட்களுக்கு முன் Ramkumar R ஒரு படத்தைப் பகிர்ந்திருந்தார். அதையொட்டி இந்தப் பதிவு:

17522862_10158448428550383_6070319639086736001_n

Live Nadaswaram not allowed-ஐ பார்த்ததும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது,

அது டிசம்பர் 2013.

பரிவாதினியைத் தொடங்கிய வருடம்.

வருடாந்திர கச்சேரிகள் நடத்த வேண்டும் என்றெல்லாம் சத்தியமாய் நினைக்கவில்லை.

டிசம்பரில் நடக்கவிருந்த கச்சேரிகளின் பட்டியலைப் பார்த்த போது, பல அற்புத கலைஞர்கள் ஒரு இடத்தில் கூட பாட/வாசிக்கவில்லை என்பதை உணர முடிந்தது. அவர்களுள் குறைந்த பட்சம் சிலருக்காவது மேடையளிக்க வேண்டும் என்று நினைத்து அசட்டு தைரியத்தில் எடுத்த முடிவுதான் பரிவாதினி இசை விழா.

ஒரு வாரம் நடக்கவிருந்த இசை விழாவுக்கு இடத்துக்கு எங்கு செல்ல?

ஒரு வாரம் முடியாது 3 நாள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர் தி.நகர் கிளப் நிர்வாகிகள்.

மற்ற நாட்களுக்கு?

தென் சென்னை முழுவதும் துழாவிய போதும் ஒரு மொட்டை மாடி கூட கிடைக்கவில்லை. கடைசியில் Venkataraghavan Srinivasan-ன் சித்தி குடியிருந்த அமைப்பின் கம்யுனிடி ஹாலைப் பிடித்தோம்.

அதிகம் அலைய வைக்காமல் ஆழ்வார்பேட்டையிலேயே இடம்.

முதல் கச்சேரி வியாசர்பாடி கோதண்டராமனின் நாகஸ்வரம்.

அவர் வாசிக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் மேனேஜர் ஓடி வந்தார்.

”என்ன ஸார் நடக்குது இங்க?”

“ஏன் ஸார்?”

“கச்சேரிக்குத்தானே இடம் கேட்டீங்க?”

“ஆமாம்”
“அப்புறம் நாகஸ்வரம் வாசிக்கறாங்க?”

“நாகஸ்வர கச்சேரிங்க”

“இங்க நாகஸ்வரம் அலௌட் இல்ல”

“ஏங்க”

“அதாங்க ரூல்ஸ்”

“…”

“நிறுத்த சொல்லுங்க ஸார்”

“அய்யோ ஸார்”

“ரெஸிடெண்ட்ஸ் என்னை வேலையை விட்டே தூக்குடுவாங்க”

“கச்சேரி ஆரம்பிச்சாச்சு ஸார்”

“பத்து நிமிஷத்துல ஆயிடுமா?”

“இன்னும் ரெண்டு மணி நேரம்…”

“ரெண்டு மணி நேரமா? அதெல்லாம் முடியாது ஸார். அட்வான்ஸை வேணா வாங்கிக்கங்க”

“இன்னும் மூணு நாள் கச்சேரி இருக்கு. திடீர்-னு வேற எங்க போவோம்?”

“ஐயோ இன்னும் மூணு நாள் நாகஸ்வர கச்சேரியா?”

“இல்லை இல்லை! இது ஒண்ணுதான் நாகஸ்வரம். மத்ததெல்லாம் வேற வாத்தியம், இல்லைனா வாய்பாட்டு”

“ஹப்பாடி! இப்ப இதை மட்டும் நிறுத்திடுங்க. மத்ததெல்லாம் பிர்ச்னை இல்லை”

“கச்சேரியை எப்படி ஸார் பாதில நிறுத்த”

“ரூல்ஸ் அப்படி ஸார்”

நல்ல காலம் வெங்கட்-ன் சித்தியின் சொல்லுக்கு செல்வாக்கு இருந்தது.

அவர் வந்து சொன்னதும் கொஞ்சம் இறங்கி வந்தார்.

“உங்களுக்காக பெரிய ரிஸ்க் எடுக்கறேன் மேடம். யாராவது கேட்டா நீங்கதான் பதில் சொல்லணும். இது ஒண்ணுதானே நாகஸ்வர கச்சேரி?”
மீண்டுமொரு முறை உறுதி செய்து கொண்டார்.

“ம்..”

“வயலின், கீபோர்ட், டிரம்ஸ் எது வேணா ஓகே, நாகஸ்வரம் மட்டும் அலௌட் இல்லீங்க. அப்புறம் காது குத்து ஃபங்ஷன் வெக்கறவங்க கூட நாகஸ்வர பார்ட்டியை கூட்டிட்டு வந்துடுவாங்க.”

“வந்தா என்னங்க?”

“என்னவா? எவ்வளோ சவுண்ட் வரும்? எத்தனை பேருக்கு இடைஞ்சல்?”

பதில் சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் கோதண்டராமன் சாலகபைரவியை ஊதத் தொடங்கியிருந்தார்.

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று சபித்தபடி ஹாலுக்குள் ஓடினேன்.

 

Read Full Post »

சென்ற வருடத்தில் தொடங்கிய இரு மாதங்களுக்கு ஒருமுறை நடை பெரும் நாகஸ்வர நிகழ்ச்சியில், இந்த முறை மிகவும் அனுபவம் வாய்ந்த திருபாம்புரம் சகோதரர்கள் வாசிக்கிறார்கள். அவர்களுடன் புகழின் உச்சியில் இருக்கும் மன்னார்குடி திரு. வாசுதேவனும், திருக்கடையூர் திரு. பாபுவும் வாசிக்கின்றனர். விவரங்கள் கீழே.

PHOTO-2019-02-17-20-07-17

சில மாதங்களுக்கு முன் ஒரு நாகஸ்வர நாட்காட்டியை பரிவாதினி உருவாக்கி அதில் 12 கலைஞர்களைப் பற்றிய குறிப்பையும், படங்களையும் இடம்பெறச் செய்தது.இந்த ஆண்டு நடைபெறவுள்ல நாகஸ்வர நிகழ்ச்சிகளை அந்த கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளோம். அந்த வகையில், முதல் நிகழ்ச்சி வண்டிகாரத்தெரு மணி/மான்பூண்டியா பிள்ளை அவர்களுக்கும், கீழ்வேளூர் சிங்காரவேலு பிள்ளை அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.

PHOTO-2019-02-17-20-07-17 (1)

இந்தக் கலைஞர்களைப் பற்றி காலெண்டரில் பதிவான குறிப்பு:

Vanidakaratheru Mani/Manpoondiah Pillai

Musicians usually attach their hometown to their names. Hailing from Mayiladuthurai that boasted of several nagaswaram greats, Subramania Pillai and Manpoondia Pillai chose to attach the street they lived – Vandikkaara Theru – to their names. The older of the brothers, Subramania Pillai, learnt from his father Ramiah Pillai. The younger brother Manpoondiah Pillai learnt from his father as well as his brother.  The brothers were known for their unique elaborate raga exploration. To them the raga that they took up never constrained them. An apparently small raga with limited scope would be explored for several hours. One such instance when they played Dwijavanthi raga alapana all night during a temple festival is still recalled by many.

Kivalur Sinagaravelu Pillai 

There were many great practitioners of this art. Not all of them can be called as great teachers. Kizhvelur “Kunju” Singaravelu Pillai is widely acknowledged as one of the greatest teachers of thavil ever. Stretching beyond the regular teaching hours of the college that worked in, he would take special interest in each and every student.  His ability to instill the basics in a student was unparalleled. Even when more than thirty students played together, his discerning ears would pick up the slightest of the mistakes. In a teaching tradition that was largely oral, he was a pioneer in teaching through accurate notations. Many of his students have gone on to become maestros. Some of his students include Mannargudi Vasudevan, Thirukarugavur Gurunathan, Kovilur Kalyanasundaram, Idumbavanam Kannan and Thirukadaiyur Babu.

இதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இருவருக்கு வாத்தியங்கள் (1 தவில், 1 நாகஸ்வரம்) வழங்கப்படும்.

வித்வான் வியாசர்பாடி கோதண்டராமனின் பரிந்துரையில், வேலூரைச் சேர்ந்த அஜித்துக்கு தவில் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-02-09-10-00-47

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனின் பரிந்துரையில் காட்டூரைச் சேர்ந்த அபினேஷுக்கு நாகஸ்வரம் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-01-16-11-02-58

முன்பே குறிப்பிட்டது போல, தவில் வித்வான் குயப்பேட்டை தட்சிணாமூர்த்தி அவர்களின் நலனுக்காக உதவித் தொகையும் அன்று வழங்கப்படும்.

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b

இதற்காக பரிவாதினியின் இருப்பிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படும். இதைத் தவிர, இந்த முயற்சிக்கின்று வந்துள்ள நன்கொடையும் சேர்த்து அன்று வழங்கப்படும். இதுவரையில் இதற்கென்று ரூபாய் பதினெட்டாயிரம் திரண்டுள்ளது.

 

 

Read Full Post »

சென்ற மாதம் நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமனைச் சந்தித்த போது அவர் தவில் வித்வான் ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு, அவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த வித்வானைப் பற்றிய குறிப்பு பின்வருமாறு:

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b.JPG

1941-ல் பிறந்த குயப்பேட்டை திரு.கே.என்.தட்சிணாமூர்த்தி, தன் தந்தையார் நாகப்பனிடம் பயிற்சி பெற்று சென்னையில் பிரபலமாக விளங்கிய/விளங்கும் பல நாகஸ்வர கலைஞர்களுடன் வாசித்தவர்.

சென்னை பி.ஐ.நடேச பிள்ளை, சிந்தாதிரிப்பேட்டை நாராயணசாமி, பி.என்.கோவிந்தசாமி, தேனாம்பேட்டை பி.கே.மதுரை, மாம்பலம் எம்.கே.சுவாமிநாதன், சைதை எஸ்.நடராஜன், சென்னை வி.என்.பாலசுப்ரமணி, இந்நாளில் பிரபலமாய் விளங்கும் மாம்பலம் எம்.கே.எஸ் சிவா போன்ற கலைஞர்களுடன் தொடர்ந்து வாசித்தவர். எண்ணற்ற தவில் வித்வான்களுடன் இணைந்தும் வாசித்துள்ளார்.

இவர் உருவாக்கியிருக்கும் பல மாணவர்கள் இன்று சிறப்பாக வாசித்து வருகின்றனர்.

தவிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இவர், இன்று முதுமையினாலும், உடல் நலிவினாலும் வாசிக்க முடியாத நிலையில் உள்ளார். இதனால் இவரது பொருளாதார நிலை மிகவும் நலிந்துள்ளது.

வரும் ஃபெப்ரவரி 23 அன்று நடக்கவுள்ள பரிவாதினி/நாத இன்பம் சேர்ந்து ஒருங்கிணைத்திருக்கும் நாகஸ்வர கச்சேரிக்கு முன், இவருக்கு உதவும் வகையில் ஒரு பணமுடிப்பைக் கொடுக்க பரிவாதினி எத்தனிக்கிறது.

இந்த நிகழ்வில், பரிவாதினியுடன் கைகோர்க்க இசை ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உதவும் மனம் படைத்த நல்லோர்களை பணிவன்புடன் அழைக்கிறேன்.

உதவி செய்ய விரும்புவோர் parivadinimusic@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். வாட்சாப்-ல் 99809 92830 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read Full Post »

Older Posts »