Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Formula1’ Category

Welcome Back Schumi

தமிழ்ப் பதிவுலகில் ஃபார்முலா-1 பற்றி யாரேனும் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. சிறு வயது முதலே ஃபார்முலா-1 ரேசிங் மேல் நிறைய ஈடுபாடு எனக்குண்டு.

ஸ்டார் டிவி வகையறாக்களின் வருகைக்கு முன், டிடி-யில் வரும் ‘world of sports’-ம் வாரா வாரம் மலரும் sportstar இதழுமே ஃபார்முலா-1 நிகழ்வுகளைத் தெரியப்படுத்தின. Ayrton Senna, Nigel Mansell, Alain Prost மூவரும்தான் அப்போதைய சூப்பர் ஸ்டார்கள். அதிலும் ப்ராஸ்டும், சென்னாவும் ஒரே டீமுக்கு ஓட்டிய போதும், ஒருவரை ஒருவர் மிஞ்ச போட்ட போட்டியைப் பற்றி படிப்பது கூட பயங்கர திரில்லிங்காக இருந்தது.

Pit Stop Strategy, Engine Cooling, Tyre maintenence என்று எதுவுமே தெரியாத போதும், சும்மா சுற்றி சுற்றி வருவதையே வேடிக்கை பார்ப்பதில் ஏன் விருப்பம் ஏற்பட்டது என்று இன்று வரை புரியவில்லை. பள்ளி லைப்ரரியில் நிறைய படம் போட்ட ஃபார்முலா-1 என்சைக்ளோபீடியா ஒன்று இருந்தது. கருப்பு வெள்ளையும், கலருமாய் பல படங்கள் அடங்கிய புத்தகத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புரட்டுவேன்.

பின்னாளில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் எடுத்த போது, கேபிள் டிவி-யில் ஃபார்முலா-1 லைவ் ரிலே தொடங்கிவிட்டது. நிறைய ஃபார்முலா-1 பார்க்கும் நண்பர்களும் செட்டு சேர்ந்தனர். ரெண்டு கட்சிதான். 1. ஷூமாக்கர் கட்சி. 2. ஹாக்கினன் கட்சி. 2-3 வருடங்களுக்கு எக்கெச் செக்க nail-biting races பார்த்தோம். IC Engines, Automobile Engineering போன்ற பாடங்கள் படித்த போது, ஃபார்முலா-1 ரசனையும் வளர்ந்தது. கிட்டத்தட்ட 11 வருடங்களாய் பெரும்பான்மையான போட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். 2000-லிருந்து, 2004 வரை தொடர்ந்து ஐந்து சாம்பியன்ஷிப்-களை ஷுமாக்கர் வென்ற போது, அத்தனை போட்டியையும் பார்த்தேன்! 2006 சீஸன் முடிவில் ஷூமாக்கர் ஓய்வு பெற்றார்.

டென்னிஸில் பெக்கர் ஓய்வு பெற்றதும், அடுத்து ஒரு ஃபெடரர் வரும் வரை டென்னிஸ் பார்ப்பதில் ஒரு தொய்வு ஏற்பட்டது. அதே போல, ஆதர்ச ஹீரோ ஷூமாக்கர் ரிடையர் ஆனதும் ஒரு தொய்வு ஏற்பட்டது. வருடா வருடம், ஃபார்முலா-1 பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. சென்ற வருடம், Felippe Massa-வுக்கு விபத்து ஏற்பட்ட போது ஷுமாக்கர் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்ட போது மீண்டும் ஃபார்முலா-1 பார்க்க நினைத்தேன். துரதிர்ஷ்ட வசமாக ஷுமாக்கர் போன வருடம் போட்டிக்கு வரவே இல்லை.

யாருமே எதிர்பாரா வண்ணம், இந்த வருடம் Mercedes GP-ன் டிரைவராக ஷுமாக்கர் அறிவிக்கப்பட்டார். ஃபெராரி-யில் ஷுமாக்கர் ஜாலம் புரிந்த போது, டெக்னிக்கல் டைரக்டராக இருந்தவர் ராஸ் ப்ரான். அவரே தொடங்கிய Brawn GP-தான் போன வருட பட்டத்தை வென்றது. இந்த வருடம், Brawn GP-ன் Stakes-ஐ வாங்கியுள்ள Mercedes, அவர்கள் பெயரிலேயே ஒரு டீமை உருவாக்கியுள்ளனர். (Mclaren-ம், Force India-வும் கூட Mercedez Engine-ல்தான் ஓடுகின்றன.)

3 வருடங்களுக்குப் பின் ஓட்ட வர்உம் ஷுமாக்கரால் பழையபடி ஜெயிக்க முடியுமா?

நேற்றுதான் சாம்பின்ஷிப் தொடங்கியது. முதல் ரேஸான பெஹரின் கிராண்ட் பிரி-யில் Ferrari முதல் இரண்டு இடங்களையும் பிடித்தது. Red Bull-ன் Sebastial Vettel ஜெயிப்பார் என்று நினைத்திருந்த போது, அவர் காரில் ஏற்பட்ட கோளாரால், அவரால் நான்காவது இடத்தையே பெற முடிந்தது. ஷுமாக்கர் ஆறாவது இடத்தில் வந்தார். முடிவிற்குக் காரணம் கார்தான் என்று பழியைப் போட முடியாது. ஏனெனில் அதே காரை வைத்து ஓட்டிய மற்றொரு டிரைவர் கூட ஷுமாக்கருக்கு முன்னால் வந்திருக்கிறார்.

மூன்று வருடங்களுக்குப் பின் ஓட்டிய ஷுமாக்கர் சற்று rusty-ஆக இருக்கக் கூடும்.

In any case, I’m glad that the Charisma is back in Racing.

வருடம் முழுவதும் தொடர்ந்து நடக்கும் race பற்றியும், ஃபார்முலா-1-ன் நுணுக்கங்கள் பற்றியும் எழுதலாம் என்றொரு எண்ணம். பிழைத்துக் கிடந்தால் பார்ப்போம்!

Read Full Post »