நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.
ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).
இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.
ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:
தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும். பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.
ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
நாகஸ்வரத்தில் வாசிக்கும் இசை உருக்களான மல்லாரி, ரக்தி, பல்லவி, உடற்கூறு முதலியவற்றைப் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன் வைக்கிறார் துறை விற்பன்னர் முனைவர் பி.எம்.சுந்தரம்.
சமீபத்தைய மாற்றங்கள், ராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் மரபு என்று பல விஷயங்களைத் தொட்டுச் சென்ற படி, சிதம்பரம் கோயிலில் திருவிழா காலங்களில் இன்றும் பின்பற்றக் கூடும் மரபை விரிவாக விவரித்துள்ளார்.
ஓர் அரிய பொக்கிஷம் – இன்று இணையத்தில் ஏற்றுவதில் பரிவாதினி பெருமகிழ்ச்சி அடைகிறது.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
தமிழிசை என்ற பெயரில் ஜல்லி அடிப்பவர்கள் அனேகம். இந்தச் சூழலில் இசையும் தமிழும் உண்மையாய் வரப்பெற்ற அறிஞர் அரிமளம் ப… twitter.com/i/web/status/1…1 week ago
மாமேதை பழனி சுப்ரமணிய பிள்ளை வழியில் மணி மணியாய் சீடர்களை உருவாக்கியிருக்கும் வித்வான் காளிதாஸ் அவர்களுக்கு இந்த வ… twitter.com/i/web/status/1…1 week ago
பிகு: இந்தக் குறிப்பு நூல் விமர்சனமன்று. என் அனுபவப் பகிர்வு. 6/n <end> 1 week ago
ஆனால் இது பெயர் பட்டியல் மட்டும்தான் என்பதை படித்ததும் புரிந்து கொள்ளும் வகையில் ஜெ-யின் குறிப்பு இருந்திருக்கலாம்.… twitter.com/i/web/status/1…1 week ago
இந்தக் குறிப்பே நூலை வாங்கத் தூண்டுதலாய் அமைந்தது. நூல் சில நாட்கள் முன் கைக்குக் கிடைத்தது. தனிப்பட்ட அளவில் எனக்… twitter.com/i/web/status/1…1 week ago