Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘நாகஸ்வரம்’

பரிவாதினி வழங்கும் 2021-ம் ஆண்டுக்கான பர்லாந்து விருதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


2013-ல் தொடங்கி மிருதங்கம்/கடம்/வீணை/கஞ்சிரா/நாகஸ்வரம் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வினைஞர்களை இதுவரை கௌரவித்துள்ளோம். இந்த ஆண்டு ஒரு வித்தியாசமான வினைஞருக்கு இந்த விருதையளிப்பதில் பரிவாதினி பெருமையடைகிறது.


நாகஸ்வர இசைக்கு நாகஸ்வரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் வாய்ந்த அங்கம் சீவளி எனப்படும் நறுக்கிற்கும் உண்டு. பார்க்கச் சாதாரணமாய் தோன்றும் ஓலை போன்ற சீவாளிகளின் தயாரிப்புக்குப் பின்னால் பெரும் உழைப்பு புதைந்துள்ளது. வரும் நாட்களில் இதைப் பற்றி விவரமாக எழுதுகிறேன்.


இந்த ஆண்டு விருது பெரும் திருவாவடுதுறையைச் சேர்ந்த சீவாளி வினைஞர் முத்துராமனுக்கு வாழ்த்துக்கள்.

Read Full Post »

பொடி சங்கதி தொடரின் முதல் காணொளி வெளியாகிவிட்டது.

பாடகர், ஹரிகதை வித்வான், மேடைநாடக நடிகர், சினிமா நட்சத்திரம், பரதநாட்டிய ஆசிரியர் என்று பன்முக ஆளுமையாக விளங்கியும் இன்று அதிகம் வெளியில் தெரியாமல் இருக்கும் ஆளுமை சிதம்பரம் பிள்ளை.

இவருடைய தந்தையார் சுப்ரமண்ய பிள்ளை நாகஸ்வர கலைஞர் என்றும் இவருடைய தமையனார் நடராஜசுந்தரம் பிள்ளை ஒரு வாக்கேயகாரர் என்றும் – இந்தக் காணொளிக்கான மறுமொழியாய் முனைவர் பி.எம்.சுந்தரம் சொல்லியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது.

Read Full Post »

சென்ற வருடத்தில் தொடங்கிய இரு மாதங்களுக்கு ஒருமுறை நடை பெரும் நாகஸ்வர நிகழ்ச்சியில், இந்த முறை மிகவும் அனுபவம் வாய்ந்த திருபாம்புரம் சகோதரர்கள் வாசிக்கிறார்கள். அவர்களுடன் புகழின் உச்சியில் இருக்கும் மன்னார்குடி திரு. வாசுதேவனும், திருக்கடையூர் திரு. பாபுவும் வாசிக்கின்றனர். விவரங்கள் கீழே.

PHOTO-2019-02-17-20-07-17

சில மாதங்களுக்கு முன் ஒரு நாகஸ்வர நாட்காட்டியை பரிவாதினி உருவாக்கி அதில் 12 கலைஞர்களைப் பற்றிய குறிப்பையும், படங்களையும் இடம்பெறச் செய்தது.இந்த ஆண்டு நடைபெறவுள்ல நாகஸ்வர நிகழ்ச்சிகளை அந்த கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளோம். அந்த வகையில், முதல் நிகழ்ச்சி வண்டிகாரத்தெரு மணி/மான்பூண்டியா பிள்ளை அவர்களுக்கும், கீழ்வேளூர் சிங்காரவேலு பிள்ளை அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.

PHOTO-2019-02-17-20-07-17 (1)

இந்தக் கலைஞர்களைப் பற்றி காலெண்டரில் பதிவான குறிப்பு:

Vanidakaratheru Mani/Manpoondiah Pillai

Musicians usually attach their hometown to their names. Hailing from Mayiladuthurai that boasted of several nagaswaram greats, Subramania Pillai and Manpoondia Pillai chose to attach the street they lived – Vandikkaara Theru – to their names. The older of the brothers, Subramania Pillai, learnt from his father Ramiah Pillai. The younger brother Manpoondiah Pillai learnt from his father as well as his brother.  The brothers were known for their unique elaborate raga exploration. To them the raga that they took up never constrained them. An apparently small raga with limited scope would be explored for several hours. One such instance when they played Dwijavanthi raga alapana all night during a temple festival is still recalled by many.

Kivalur Sinagaravelu Pillai 

There were many great practitioners of this art. Not all of them can be called as great teachers. Kizhvelur “Kunju” Singaravelu Pillai is widely acknowledged as one of the greatest teachers of thavil ever. Stretching beyond the regular teaching hours of the college that worked in, he would take special interest in each and every student.  His ability to instill the basics in a student was unparalleled. Even when more than thirty students played together, his discerning ears would pick up the slightest of the mistakes. In a teaching tradition that was largely oral, he was a pioneer in teaching through accurate notations. Many of his students have gone on to become maestros. Some of his students include Mannargudi Vasudevan, Thirukarugavur Gurunathan, Kovilur Kalyanasundaram, Idumbavanam Kannan and Thirukadaiyur Babu.

இதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இருவருக்கு வாத்தியங்கள் (1 தவில், 1 நாகஸ்வரம்) வழங்கப்படும்.

வித்வான் வியாசர்பாடி கோதண்டராமனின் பரிந்துரையில், வேலூரைச் சேர்ந்த அஜித்துக்கு தவில் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-02-09-10-00-47

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனின் பரிந்துரையில் காட்டூரைச் சேர்ந்த அபினேஷுக்கு நாகஸ்வரம் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-01-16-11-02-58

முன்பே குறிப்பிட்டது போல, தவில் வித்வான் குயப்பேட்டை தட்சிணாமூர்த்தி அவர்களின் நலனுக்காக உதவித் தொகையும் அன்று வழங்கப்படும்.

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b

இதற்காக பரிவாதினியின் இருப்பிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படும். இதைத் தவிர, இந்த முயற்சிக்கின்று வந்துள்ள நன்கொடையும் சேர்த்து அன்று வழங்கப்படும். இதுவரையில் இதற்கென்று ரூபாய் பதினெட்டாயிரம் திரண்டுள்ளது.

 

 

Read Full Post »

சென்ற மாதம் நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமனைச் சந்தித்த போது அவர் தவில் வித்வான் ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு, அவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த வித்வானைப் பற்றிய குறிப்பு பின்வருமாறு:

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b.JPG

1941-ல் பிறந்த குயப்பேட்டை திரு.கே.என்.தட்சிணாமூர்த்தி, தன் தந்தையார் நாகப்பனிடம் பயிற்சி பெற்று சென்னையில் பிரபலமாக விளங்கிய/விளங்கும் பல நாகஸ்வர கலைஞர்களுடன் வாசித்தவர்.

சென்னை பி.ஐ.நடேச பிள்ளை, சிந்தாதிரிப்பேட்டை நாராயணசாமி, பி.என்.கோவிந்தசாமி, தேனாம்பேட்டை பி.கே.மதுரை, மாம்பலம் எம்.கே.சுவாமிநாதன், சைதை எஸ்.நடராஜன், சென்னை வி.என்.பாலசுப்ரமணி, இந்நாளில் பிரபலமாய் விளங்கும் மாம்பலம் எம்.கே.எஸ் சிவா போன்ற கலைஞர்களுடன் தொடர்ந்து வாசித்தவர். எண்ணற்ற தவில் வித்வான்களுடன் இணைந்தும் வாசித்துள்ளார்.

இவர் உருவாக்கியிருக்கும் பல மாணவர்கள் இன்று சிறப்பாக வாசித்து வருகின்றனர்.

தவிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இவர், இன்று முதுமையினாலும், உடல் நலிவினாலும் வாசிக்க முடியாத நிலையில் உள்ளார். இதனால் இவரது பொருளாதார நிலை மிகவும் நலிந்துள்ளது.

வரும் ஃபெப்ரவரி 23 அன்று நடக்கவுள்ள பரிவாதினி/நாத இன்பம் சேர்ந்து ஒருங்கிணைத்திருக்கும் நாகஸ்வர கச்சேரிக்கு முன், இவருக்கு உதவும் வகையில் ஒரு பணமுடிப்பைக் கொடுக்க பரிவாதினி எத்தனிக்கிறது.

இந்த நிகழ்வில், பரிவாதினியுடன் கைகோர்க்க இசை ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உதவும் மனம் படைத்த நல்லோர்களை பணிவன்புடன் அழைக்கிறேன்.

உதவி செய்ய விரும்புவோர் parivadinimusic@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். வாட்சாப்-ல் 99809 92830 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read Full Post »

தவில்/நாகஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய முக்கிய ஆவணம் முனைவர். பி.எம்.சுந்தரம் எழுதியுள்ள ‘மங்கல இசை மன்னர்கள்’. அந்தப் புத்தகத்தின் முடிவில், பல கலைஞர்களைப் பற்றி எழுத முடியாமல் போனதை நூலாசிரியர் சொல்கிறார். சமீபத்தில் நண்பர் சரவணன் பல அரிய கலைஞர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.

அதைப் பார்த்ததும், ‘மங்கல இசை மன்னர்கள்-ன் தொடர்ச்சியாய் இந்தக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகளை செய்யலாமா என்ற எண்ணம் வந்தது. விரிவான பதிவுகளுக்கு மாதக் கணக்கில் உழைப்பு தேவை. விரைவாய் ஒரு குறிப்பு வரைந்து, முதல்கட்டமாய் ஒரு நாட்காட்டியாய் இருக்கும் படங்கள் கொண்டு உருவாக்கலாம் என்ற எண்ணம் உதித்தது.

எண்ணத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் காரியத்தில் இறங்கினோம். ஒரு வாரத்தில், ஆறு தவில் கலைஞர்கள், ஆறு நாகஸ்வரக் கலைஞர்களை பட்டியலிட்டுக் கொண்டு (யாரை விடுவது என்பதில் பெரும்பாடுபட்டோம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை), படங்களைப் பெற்று பெரும்பாலும் அவர்களிடம் கற்றவர்களிடம் பேசி சிறு குறிப்பு ஒன்றையும் வரைந்தோம்.

நாட்காட்டியிஒல் இடம் பெற்றிருக்கும் கலைஞர்களின் பட்டியல் கீழே:

Valangaiman Shanmugasundaram
Sembanarkoil Brothers (SRD Muthukumaraswami and SRD Vaidhyanathan)
Perumpallam Venkatesan
Madurai Ponnuthayi
Thirucherai Muthukumaraswami
Vanidakaratheru Mani/Manpoondiah Pillai
Poraiyar Venugopal
Dharmapuram Govindarajan
Swamimalai Govindaraja Pillai
Thirumagalam Somaskanda Pillai
Kivalur Sinagaravelu Pillai
Pandhanainalloor Dakshinamurthi

காலண்டரைப் பற்றிஒய அழகான அறிமுகம் இன்று இந்து நாளிதழில் நண்பர் கோலப்பனின் வாயிலாக வந்துள்ளது.

calendar

முதன் முயற்சி என்பதால் மிகக் குறைவான பிரதிகளே அச்சடித்துள்ளோம். நாட்காட்டியின் பிரதிகள் வேண்டுவோர்.

Parivadini Charitable Trust, Union Bank of India Account Number: 579902120000916 branch: Kolathur, Chennai, IFSC Code: UBIN0557994

என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி parivadinimusic@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ஒரு பிரதியின் விலை 100 ரூபாய். வெளி ஊர்களில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவுக்கு என்று நீங்கள் இஷ்டப்பட்டதை சேர்த்துச் செலுத்தலாம். செலுத்தாவிடினும் (வெளிநாடென்றாலும்) நாட்காட்டி அனுப்பிவைக்கப்படும்.

இதுவொரு தொடக்கம். தொடர இறையருள் கிட்ட வேண்டும்.

Read Full Post »

ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.

அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

Read Full Post »

ஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:

மல்லாரி 1:

மல்லாரி 2:

மல்லாரி 3:

மல்லாரி 4:

மல்லாரி 5:

மல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

Read Full Post »

நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.

ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

மூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,

இந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

இரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.

இன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.

 

 

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

Older Posts »