ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.
அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி, ஷண்முகப்ரியா, nagaswaram, thavil on பிப்ரவரி 16, 2018| 3 Comments »
ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.
அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 15, 2018| Leave a Comment »
ஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:
மல்லாரி 1:
மல்லாரி 2:
மல்லாரி 3:
மல்லாரி 4:
மல்லாரி 5:
மல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சக்ரவாகம், சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 9, 2018| Leave a Comment »
மூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,
இந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, வரலாறு, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம் on பிப்ரவரி 8, 2018| Leave a Comment »
இரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.
இன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, tagged announcement, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சங்கராபரணம், சிதம்பரம், தவில், தானம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பல்லவி, பி.எம்.சுந்தரம், மல்லாரி, முதலாம் திருநாள், ரக்தி மேளம், ராகம், Music on பிப்ரவரி 6, 2018| 1 Comment »
முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).
இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.
ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:
தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும். பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.
ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், பரிவாதினி, tagged announcement, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், Music on பிப்ரவரி 5, 2018| Leave a Comment »
கோயில்களில் நடக்கும் புறப்பாடுகளில் வாசிக்கப்படும் உருப்படி மல்லாரி. கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த மல்லாரியில் வாசிக்கின்ற தருணத்திற்கும், கலைஞரின் திறனுக்கேற்றும் சுருக்கமாகவோ, விரிவாகவோ மல்லாரிகள் வாசிக்கப்படும். சாஹித்யங்களின்று தத்தகாரங்களினால் இசைக்கப்படும் மல்லாரியை முதலில் ‘அல்லாரிப்பு’ (கண்ட நடையில்) வாசித்து தவில் கலைஞரே தொடங்கி வைப்பார். தத்தகார அமைப்பை திஸ்ரம் செய்வது, திரிகாலம் செய்வது, கல்பனை ஸ்வரம் வாசிப்பது போன்ற மேன்மெருகேற்றல்களும் நடைபெருவதுண்டு.
பதினொரு நாள் நடைபெரும் திருவிழாவில், பெரும்பாலான நாட்களில் பஞ்ச மூர்த்திகளின் உலா இடம் பெறும். சிதம்பரத்தை பொருத்தமட்டில், உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு வீதிக்கு வரும் வரையில் ஒரு மல்லாரியும் (ஒப்பீட்டளவில் எளிமையான ஒன்று), வீதிக்கு வந்ததும் வேறொரு மல்லாரியும் (ஒப்பீட்டில் நுணுக்கங்கள் நிறைந்த ஒன்று – உ.தா. – திரிபுட தாள மல்லாரி) இடம் பெறும். இந்த மல்லாரி உற்சவர் தேரடி அடைந்து மாட வீதிகளில் திரும்பும் வரை வாசிக்கப்படும்.
இந்த இணைப்பில் முதலில் புறப்பாட்டின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் மல்லாரியும், அதனைத் தொடர்ந்து திரிபுட தாள மல்லாரியும் இடம்பெற்றுள்ளன.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், பரிவாதினி, percussion instruments, Uncategorized, tagged தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பேரி பூஜை on பிப்ரவரி 2, 2018| 1 Comment »
இன்றைய காணொளியில் பேரி பூஜையைக் காணலாம்.
ஆண்டுதோரும் நடை பெறும் கோயில் திருவிழாவின் தொடக்க சடங்குகளின் ஒன்று. கொடியேற்றத்தை ஒட்டி நடை பெறும் சடங்கில், தவிலை நடுநாயகமாக வைத்து பூஜை செய்து, கலைஞரிடம் கொடுத்து ஒரு சொல்லை மட்டும் முழக்கு சுற்றி வரச் செய்யும் சடங்கு.
முற்காலத்தின் இந்த சடங்கு மயானத்தின் வைத்து இந்தச் சடங்கை செய்தனர். சமீப காலங்களில் கோயில் வளாகத்திலேயே நடை பெருகின்றந்து.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், tagged சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on ஜனவரி 29, 2018| Leave a Comment »
இன்று முதல், சைவ நாகஸ்வர மரபை ஆவணமாக்கிய காணொளிகளை ஒவ்வொன்றாய் வெளியிட பரிவாதினி முடிவெடுத்துள்ளது.
அதில் முதல் காணொளியில் தளிகை மல்லாரியைக் காணலாம்.
இறைவனுக்குப் படைக்கும் நெய்வேத்யத்தை மடப்பள்ளியிலிருந்து கருவறைக்கு எடுத்துச் செல்லும் போது வாசிக்கப்படும் மல்லாரியே தளிகை மல்லாரி.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.