Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Navaratri’

வருடாந்திர கச்சேரிகளை இந்த வருடம், கரோனா சமயத்தில், வைக்க வேண்டுமா/வேண்டாமா என்று பலமுறை ஊசலாடிய பின் – அற்புதக் கலைஞர்கள் இன்னொரு முறை மக்களை சென்றடைய ஒரு வாய்ப்பாகவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இருந்தும் கரோனா காலத்தில் எந்த அரங்கில் வைப்பது? ரசிகர்களை அழைப்பது சரியா? கலைஞர்களை பயணிக்க வைப்பது சரியா என்றெல்லாம் குழப்பம் நிலவியது.

நண்பர் சரவணன் ஒரு வழி சொன்னார். கலைஞர்கள் – அவரவர் சௌகரியத்துக்கு கச்சேரியைப் பதிவு செய்து அனுப்பட்டும். யூடியூபில் நாளுக்கு ஒன்றாய் போடலாம் என்றார்.ஒன்பது நாட்கள் – அரிய கலைஞர்களின் இசை வர்ஷம். வழக்கமாய் நடப்பதைவிட இந்த வருடம் நன்றாகவே அமைந்தது என்று தோன்றியது.

நாகஸ்வரம் அழிந்துவிட்டது. அது வருங்காலத்தில் வழக்கொழிந்தே போய்விடும் என்று பிலாக்காணம் படிப்பவர்கள் இந்தக் கச்சேரிகளைக் கேட்டு மனத்தை மாற்றிக் கொள்ளலாம்.ஒன்பது கச்சேரிகளையும் கேட்க:

Read Full Post »

ஆறாம் நாளில் வித்வான் மாரியப்பன் வாசித்துள்ள ராகம் வசுகரி. ஒரு ரேடியோ நேர்காணலில் இந்த ராகத்தைப் பற்றி வித்வான் மதுரை சோமு கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சண்முகப்ரியாவின் ஜன்யமான இந்த ராகத்தை வாசித்துள்ளார்.

 

ஏழாம் நாளில் உலா வரும் ராக தேவதை மாயாதாரிணி. சுபபந்துவராளியில் ரிஷப ஸ்வரமில்லாத ஜன்யமான இந்த ராகத்தில் சுருக்கமாகவும் உருக்கமாகவும் ஒரு ராகம் தானம் பல்லவியை இசைத்துள்ளார் மாரியப்பன்.

 

எட்டாம் நாளில் கீரவாணி ராகத்தின் ஜன்யமான ரிஷிப்ரியாவை இசைத்துள்ளார் மாரியப்பன். இந்த ராகத்துக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் வித்வான் மதுரை சோமு அவர்கள்தான்.

 

நவராத்ரி நவராக தேவதைகளின் உலாவை நிறைவு செய்யும் வண்ணம் மாரியப்பன் வாசித்திருக்கும் ராகம் 72-வது மேளகர்த்தாவான ரசிகப்ரியா.

இந்தத் தொடருக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் பரிவாதினியின் சார்பிலும், வித்வான் மாரியப்பன் சார்பிலும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன்பது ராகங்களையும் இந்த இணைப்பில் கேட்கலாம்:

Read Full Post »

ஐந்தாம் நாளில் உலா வரும் ராக தேவதை  காந்தாமணி.

61-வது மேளகர்த்தா ராகமான காந்தாமணியில் வித்வான் மாரியப்பன் சுருக்கமாக ஒரு ராகம் தானம் பல்லவி வாசித்துள்ளார்.

விவாதி ராகங்களின் எழிலை வெளிக்கொணருமாறு அவர் வாசித்துள்ளதை இங்கு காணலாம்.

Read Full Post »

நான்காம் நாளில் உலா வரும் ராக தேவதை ஸ்ரோதஸ்வினி.

ஸ்ரோதஸ்வினியின் சுத்த தன்யாஸி ராகத்தை ஒத்தது. நிஷாத ஸ்வரம் மட்டும் காகளி நிஷாதமாய் அமைந்துள்ளது.

அறிஞர்கள் இது பழமையான ராகமான உதய ரவிசந்திரிகாவின் அமைப்பென்று கூறுவர். தீட்சிதரின் “ஸ்ரீ குருகுஹமூர்த்தே” இந்த ராகத்தில் அமைந்தவொன்றுதான்.

இன்றைய நிலையில் சுத்த தன்யாஸியும் உதய ரவிசந்திரிகாவும் ஒரே ராகம் என்றே கொள்ளப்படுகின்றது. ஆதலால் காகளி நிஷாதம் வரும் ராகத்தை ஸ்ரோதஸ்வினி என்று குறிக்கின்றனர்.

கர்நாடக இசைக் கச்சேரிகளில் அதிகம் கேட்கக் கிடைக்காத ராகமென்றாலும், இந்த ராகத்தில் பல அற்புத திரையிசைப்பாடல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் தமிழிலும் (உதா: ஓ வசந்த ராஜா) தெலுங்கிலும் (சுமம் ப்ரதி சுமம்) பல பாடல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ராகத்தை வாசித்துள்ள வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பன் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு இந்த ராகத்தின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது என்கிறார்.

Read Full Post »

மூன்றாம் நாளில் உலா வரும் ராக தேவதை ஓம்காரி.

நீங்கள் மதுரை சோமுவின் ரசிகரெனில் இந்த ராகத்தை கேட்டிருக்கக்கூடும். இந்த ராகத்தில் வர்ணமும், கீர்த்தனையும் பாடியுள்ளார்.

கரஹரப்ரியாவின் ஜன்யமான இந்த ராகத்தில் தாய் ராகத்தில் வரும் நிஷாதம் இல்லை.

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பன் நமக்காக சுருக்கமாய் ஒரு ராகம் தானம் பல்லவியை இந்த ராகத்தில் வழங்கியுள்ளார்.

 

Read Full Post »

இரண்டாம் நாளில் உலா வரும் ராக தேவதை ஹம்ஸப்ரம்மரி.

சபா கச்சேரிகள் அதிகம் கேட்கக் கிடைக்காத ராகமெனினும், கோயில்களில் நாகஸ்வரத்தில் வாசிக்கப்படும் ராகங்களுள் முக்கியமான ஒன்று.

ஹேமவதியின் ஜன்யமான இந்த ராகத்தை சிதம்பரம் கோயில் அருத்ரா தரிசன திருவிழாகாலங்களில் நான்காம் நாள் உற்சவத்தின் போது பிரதான ராகமாக இசைப்பர்.

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பன் நமக்காக சுருக்கமாய் ஒரு ராகம் தானம் பல்லவியை இந்த ராகத்தில் வழங்கியுள்ளார்.

Read Full Post »

 

நவராத்ரியை தேவி கீர்த்தனைகள், ஸ்வாதி திருநாளின் நவராத்ரி கீர்த்தனைகள் என்று இசையுலகம் அணைத்துக் கொள்ளும்.

அதையொட்டி நாகஸ்வரத்தில் நவராத்ரி சிறப்புப் பகிர்வுகளை பரிவாதினியில் வெளியிடலாமென்று தோன்றியது. நாகஸ்வர வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனுடனும், நண்பர் ஸ்வாமிமலை சரவணனுடனும் கலந்து பேசி, ஒன்பது ராக தேவதைகளையே ஒன்பது நாட்களுக்கு சமர்ப்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

அதிகம் கேட்கக் கிடைக்காத ராகங்களில், சுருக்கமாய் ராக ஆலாபனை, கொஞ்சம் தானம், ஒரு பல்லவி அதில் கொஞ்சம் ஸ்வரங்கள் என்று வெளியிட முடிவெடுத்தோம்.

சரவணனின் ஒலி/ஒளிப்பதிவில், மாரியப்பனின் வாசிப்பில் நவராக தேவதைகளின் உலா இதோ இன்று தொடங்கிவிட்டது.

முதல் நாள் உலாவுக்கு வந்திருக்கும் ராக தேவதை சந்திரஜோதி

 

இன்னும் பல ராகங்கள் அடுத்த எட்டு நாட்களில் காணத் தவறாதீர்கள்.

கண்டு, கேட்டுப், பகிர்ந்து மகிழுங்கள்,

நவராத்ரி வாழ்த்துகள்!

Read Full Post »

வழக்கமான நவம்பர் பரிவாதினி இசை நிகழ்ச்சிகளோடு இந்த வருடம் நவராத்ரியிலும் மூன்று நாட்களுக்கு இசை விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விவரங்கள் இங்கே

Parivadini Navaratri Series (1)

ரசிகர்கள் ஆதரவினால்தான் இந்த நிகழ்ச்சிகள் நடத்த முடிகிறது. இதற்கு பங்களிக்க நினைப்போர் கீழுள்ள வங்கி விவரங்களைக் கண்டுகொள்ளலாம். பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடை செக்‌ஷன் 80G-யின் கீழ் வருமான வரிச்சலுகைக்கு தகுதியுறும்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »