எழுத்துக்காக: லலிதா ராம் (பொண்டாட்டி பேரு லலிதா இல்லை.)
ஊர்: மனதளவில் எப்போதும் தஞ்சை ஜில்லா. வயிற்றுப் பிழைப்புக்காக பெங்களூர். டிசம்பரில் சிங்காரச் சென்னை.
படிப்பு: மெடீரியல் சயின்ஸ்
செய்ய நினைப்பது: மெடீரியல் சயின்ஸ் தவிர
பிடித்த வேலை: ஜி.என்.பி-யை வைத்துக் கொண்டு ஜல்லி அடிப்பது (அடிச்ச ஜல்லியில ஒரு புத்தகமே வந்துவிட்டதுதான் ஆச்சரியம்), டிசம்பரில் கச்சேரி கேட்பது, எண்பது வயதைத் தாண்டிய சங்கீதப்ரியர்கள் பேசுவதை வாய் பிளந்து கேட்பது. சோழ தேசத்தில் பயணம் செய்வது.
alma mater: தினம் ஒரு கவிதை, ரா.கா.கி, மரத்தடி
.
எழுத நினைக்கும் விஷயங்கள்: மியூச்சுவல் ஃபண்ட்ஸ், டென்னிஸ், ஃபார்முலா ஒன், கடற்கரை ஓர சுற்றுலாத் தளங்கள், காற்றலை மின் உற்பத்தி, சங்க இலக்கியங்களில் இசை, “இராமநாதபுரம் கிருஷ்ணன், எம்.எல்.வி, ஐராவதம் மகாதேவன், மதுரை மணி, எல்லிஸ் டங்கன் ஆகியோரின் முழு நீள பயோகிராஃபி”. (இவற்றைப் பற்றி என் பெயரில் ஏதேனும் கிடைப்பின் அவை என் பெயரில் யாரோ எழுதியன என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)
எழுதிக் கிழித்தவை: கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் இளையராஜா, கொஞ்சம் கர்நாடக இசை
அலுக்காமல் படிப்பது: தி.ஜானகிராமன், லா.ச.ரா, உ.வே.சா-வின் ‘என் சரித்திரம்’
அலுக்காமல் கேட்பது: ஜி.என்.பி, மதுரை மணி, எஸ்.ராஜம், சேஷகோபாலன், பழநி சுப்ரமணிய பிள்ளை, லால்குடி, மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ஜி.ராமநாதன், இளையராஜா
சமீபத்திய (சோ)சாதனை: சக்களத்தி லெவலுக்கு கர்நாடக சங்கீதத்தை ஆக்கிக் கொண்டுவிட்டது
நடக்காது என்று தெரிந்தும் செய்ய நினைப்பது: ஒவ்வொரு மார்கழியிலும் குறைந்த பட்சம் 15 கட்டுரைகள்.
ஒரே பிரச்னை: சுருக்கமாய்ச் சொல்லத் தெரியாதது. (என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை என்று எழுத நினைத்து இவ்வளவு நிரப்பியிருப்பதைப் பார்த்தாலே தெரியுமே!)
// எழுதிக் கிழித்தவை: கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் இளையராஜா, கொஞ்சம் கர்நாடக //
any links for what you have written on ilaiyaraja?
தினம் ஒரு கவிதையிலும் தமிழோவியத்திலலும் முன்பு வந்த தொடரில் நிறைய இளையராஜா வருவார்.
http://www.tamiloviam.com/html/Isaioviam1.asp (இந்தச் சுட்டியிலிருந்து மற்ற கட்டுரைகளுக்குத் தாவலாம்)
டிஸ்கி எழுத்திருவில் படிக்கலாம்.
தனியா சைட் எப்போ போடலாம்?
சைட்-ஆ? எதுக்கு போடணும்?
வணக்கம்,
உலக தமிழ் எழுத்தாளர்களை இணையத்தளம் ஊடாக ஒன்றிணைக்கும் முகமாக http://www.tamilauthors.com என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இங்கு எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை இலவசமாக இணைத்து வருகின்றோம்.
நன்றி.
பிரியமுடன்,
அகில்.
I look forward to your book on Ramnad Krishnan. For Visual
reasons, we were forced to keep out some very interesting incidents in his life.
I mean that there are a lot more of potential for writing / reading in his life.
(Would love to write in Tamizh. Do not know how. Can some one show me the way pl.)
அண்ணா, உங்க G-Mail-compose mail பகுதியிலேயே, ஆங்கிலத்தில் டைப் செய்தால், தமிழில் தந்துவிடுமே.. இல்லையென்றால், இங்கே… http://www.google.com/transliterate/
பெயரைத் தூக்கக் கலக்கத்தில் தவறாக பதிவு செய்துவிட்டேன்…
//சுருக்கமாய்ச் சொல்லத் தெரியாதது. (என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை என்று எழுத நினைத்து இவ்வளவு நிரப்பியிருப்பதைப் பார்த்தாலே தெரியுமே!)//
சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் ஒரு கலையே.
அதில் தேர்ந்தவரோ எங்கும் இலையே !!
நூறு பக்கம் எழுதினால் கிடைக்கும் விலையே
நூறு கிராம் உப்பு வாங்க போதவிலையே !!
எழுதுங்கள். அதுதான் முக்கியம்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
கொடுத்து வைத்தவர்!
தமிழை தமிழாக எழுதும் இணையப்பதிவுகள் மிகக்குறைவு. எழுதுவதற்கென படைக்கப்பட்டது எழுதுதமிழ், பேசுவதற்கு பேச்சுத்தமிழ் என்றல்லாமல் அனைவரும் பேச்சு நடையில் எழுத தொடங்கி விட்டார்கள். அந்த சந்தையில் உங்கள் இணையதளம் ஓர் நறுமணம் மிகுந்த மல்லிகை. படிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய சதுரங்க பதிவுகள் அபாரம். ஆங்கில வார்த்தைகளை முடிந்த வரை தவிர்த்து, தேவையான இடங்களில் அளவாக உபயோகித்து, எளிதாக இருப்பினும் பேச்சுத்தமிழை தவிர்த்து – ஆஹா – பேச்சுத்தமிழில் கூறினால், பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள்.
டியர் ராம்,
என் எழுத்துக்கள் உங்களுக்குப் பிடிக்காததாக இருக்கலாம். ஆனால் நான் உங்கள் எழுத்தை மிக விரும்பிப் படிக்கிறேன். உங்கள் ரசிகன் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், இன்று இசை ரசிகர்கள் அநேகம் பேர் இருந்தாலும் இசை பற்றி எழுத ஆள் இல்லை. நீங்கள் பிரமாதமாக எழுதுகிறீர்கள். ஆனால் இவ்வளவு இளைஞராக இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. ஒரே ஒரு ஆதங்கம், வருத்தம். உங்கள் எழுத்தை பல்லாயிரம் பேர் படிக்க வேண்டும். தண்டபாணி தேசிகரையும், பாகவதரையும் கேட்டு ரசித்த தமிழ்நாட்டில் இன்று மிக மோசமான, வல்கரான சத்தங்களை இசை என்று ரசிக்கும் நிலையில், உங்கள் எழுத்து பிராபல்யமானால் சமூகம் பயன்பெறும்.
சாருவின் மூலம் உங்கள் வலைத்தளம் வருகிறேன்.
உங்கள் எழுத்தைப் படிக்க மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்…
சாருவின் மூலம் உங்கள் தளத்துக்கு வந்தேன். அருமையான நடை.
இனி தினமும் வருவேன்.
இன்னும் நிறைய பேர் படிக்க வாழ்த்துக்கள்.
Hi,
I came here by the reco of Charu. I love your site and its contents. Keep it up.
Regards,
Muthu
அன்புள்ள ராம்,
நானும் சாரு மூலமே இந்தத் தளத்திற்கு வந்தேன். அவருக்கு என் நன்றி. உங்கள் இசையுலக இளவரசர் ஜி.என்.பி. புத்தகத்தை வந்த புதிதிலேயே படித்துவிட்டேன். அதைப் படித்ததே ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இசையில் அதிகப் பரிச்சயம் இல்லாத எனக்கு , பொதுவாக இசை விமர்சனத்தைப் பார்த்தாலே ‘ இப்படிக் கூறுபோட்டு ரசிக்கவிடாமல் பண்ணுகிறார்களே’ என்று தோன்றியது முதலில்! முடிந்தவரை ஒருவரை ரசிக்கும்போது எப்படி அவருடைய எலும்பு அமைப்புகளையெல்லாம் நுணுக்கமாகப் பார்த்துக்கொண்டிருப்பதில்லையோ அப்படி பொதுவாக மேம்போக்காக ரசிக்கும் மனோபாவமே எனக்கு! இனிமையாய் உங்களைப்போல் எழுதுவோர் மூலம் எங்களைப்போன்றோருக்கு இசை நாட்டம் இன்னும் அதிகரிக்கிறது. உங்கள் எழுத்துக்கள் என் மனநிலைக்கு ஏற்றார்போல் சுகமாக இருக்கக் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!
வெங்கடப்பிரகாஷ்
ஜீ தமிழ் செய்திவாசிப்பாளர் , பேட்டியாளர்.
Hi “Lalitha Ram”,
I have been listening to carnatic music and other forms of music all my life with limited knowledge in music.
I came to your website after seeing this on charuonline.
Is there an article/book/publication that you can suggest to novice people who want to learn more about Carnatic music so that we can enjoy it better?
Thanks for your help.
Arul
வணக்கம்.
என்னது varalaru.com நீங்க (உங்கள் நண்பர்களுடன்) ஆரம்பிச்சதா? நான் ரொம்ப நாட்களாக படித்து வருகிறேன்.
கண்டிப்பாக இவ்வளவு இளமையாக இருப்பீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.
நானும் சோழ தேசம் சேர்ந்தவன். திருவானைக்கோவில் – திருச்சி தான் சொந்த ஊர்.
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு இசைக் கருவி உண்டல்லவா? அவற்றை பற்றி எழுதி இருக்கீர்களா? எங்கள் கோவிலில் “உடல்” என்று ஒரு கருவி.
அப்படி எழுதி இருந்தால் அதனை பகிர முடியுமா? அப்படி எழுதவில்லை எனில் இனி எழுத முடியுமா? (நேயர் விருப்பம் என எடுத்துக் கொள்ளவும் – தவறாக நினைக்க வேண்டாம்).
அன்புடன்,
விஜய்வீரப்பன் சுவாமிநாதன்.
http://vijayveerappan.blogspot.com/
I too, from today, will follow your articles.
அன்புள்ள நண்பருக்கு,
உங்களின் வலைத்தளம் பற்றி சாருவின் அறிமுகத்தால் தெரிந்து கொண்டேன்.
(அவரின் கோபம் எனக்கு பிடிக்காது!) அவரது எழுத்தால் சில சமயம் நடக்கும் மகிழ்ச்சியான விபத்து “உங்கள் வலைதளம் அறிமுகம்” போன்றவை.
நான் கொஞ்சம் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்களின் எழுத்தைப் படித்த பிறகு இத்தனை இளம் வயதில் இத்தனை தீட்ஷண்யமா என்று வியந்து, அதே சமயம் என்னை நினைத்து வெட்கப் பட வைத்தது. என் 50 வயதில் நான் அடைய போராடும் அறிவு விசாலம் மற்றும் கூர்மை உங்களிடம் இத்தனை இளம் வயதில் கண்டு கொஞ்சம் பொறாமை கூட படுகிறேன்.
கமல் ஒரு படத்தில் சொல்வது போல் “இதெல்லாம் அப்படியே வர்றது இல்ல…”
எங்கள் பூர்வீகமும் தஞ்சாவூர் என்று அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன்.
குலதெய்வம் கோயிலுக்கு போவதுடன் சரி. மற்றபடி சென்னையின் கூவத்து கொசுக்கடியில் வளர்ந்தவன் நான்.
எனக்கு இசை ஞானம் கிடையாது. ஆனால் நல்ல இசையை கேட்டு மனம் கசிந்து கண்ணில் நீர் கசிய உருகுவேன்.
அடுத்த பிறவி என்று இருந்தால் நான் ஒரு இசை கலைஞனாகவே திரும்பி வர விரும்புகிறேன்.
உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருவேன்.
நன்றி.
ரவி.
இங்கிலாந்து.
பி.கு. போட்டோவில் நிச்சயமாக ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்.
அலோ (லலிதா) ராம். ரொம்ப நாளைக்கு முன்னாடி மரத்தடில பார்த்தது. அப்பறம் இப்பதான் பாக்கறேன். சும்மா ஒரு “உள்ளேன் ஐயா” சொல்லிட்டுப் போலாம்னு.
வலைப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. பாராட்டுகள்.
அப்றம் மரத்தடிப் பக்கம் எப்ப வர்றதா உத்தேசம்? அங்கிட்டு இன்னும் கிருபா, ஆசிப், பிரசன்னா எல்லாரும் லொள்ளு பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. சீக்கிரம் வாரும்!
அன்புடன்
சுந்தர்
புதிய & பழைய நண்பர்களே,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.
வணக்கம். இன்றுதான் தங்களின் வலைத்தளம் கண்டேன் பாராட்டுகள். நான் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்தவன். இசையினைக் கேட்பேனே தவிர அதன் விவரங்கள் பற்றி ஏதும் அறியேன். இசை மேதைகளைப் பற்றிய விவரங்கள் எனக்கு வியப்பை அளிக்கின்றன. புதிய தளத்தை அறிய வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.
என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.
ராம்
சாருவின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ராபர்ட் சின்னதுரையின் கடிதங்களை சற்று நேரம் ஒதுக்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பதியுமாறு அம்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முதல் கடிதம் சுட்டி http://charuonline.com/blog/?p=1164 ரெண்டாவது அதுக்கடுத்ததா இருக்கு.
உம்மை மாதிரி விவரம் தெரிந்த ஆசாமிகள் இம்மாதிரி விவரங்களை வெளிக்கொண்டுவந்தாதான் எம்மாதிரி (சே எத்தனை மாதிரி) ஞானசூன்யங்களுக்குப் பிரயோஜனமா இருக்கும்.
தேங்ஸ் இன் அட்வான்ஸ்
-சுந்தர்
வணக்கம்.உங்கள் கட்டுரைகள் அபூர்வமானவை.கலைநுட்பம்
வாய்ந்தவை.நீங்கள் அனுமதி தந்தால் திரிசக்தி குழுமம் வெளியீட்டில் என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ரசனை இதழில் இந்தக் கட்டுரைகளை வெளியிட விரும்புகிறேன்.
மற்றவை மடல்பார்த்து..
அன்புடன்
மரபின்மைந்தன் முத்தையா
Hi Ram,
Even though I read about your website through links in Charu and Jeymo’s site I still have not read most of your articles. Today I chanced upon the interview of Sri. Iravatham Mahadevan in Varalaaru.com and was pleasantly surprised to learn that you had conducted the absolutely wonderful interview with this amazing person. I happen to visit chennai during second week of december and would love to meet Sri. Mahadevan just to learn from him. Is there a mail id or a contact number to get in touch with him if he resides in Chennai? Will you please help me in contacting him so that I would be able to meet him without disturbing his schedule.
Thanks and regards,
Vijay
நான் கடந்த 25 வருடமாக மயிலாப்பூர் வாசி. கர்நாடக சங்கீதம் 30 -35 கேட்டு வருகிறேன் .நான் தவறாமல்
சீசன் கச்சேரியும் கேட்டு வருகிறேன் …தவிர மாதம் 5 -10 கச்சேரியும் கேட்பேன் ..ஆயினும் ஏதோ குறை கேட்கும் அரங்கத்தில் குறை இருப்பது போல் சில இடங்களில் படும். இதை சற்று சரி செய்ய நானே ஒரு சிறிய அரங்கத்தை 100 பேர் அமர்ந்து கேட்க ,கடந்த வாரம் ஆரம்பித்தேன் ..ப்ளுட் ரமணி முதல் கச்சேரி செய்ய ,மற்ற மூன்று நாட்கள் V சங்கர நாராயணன் பாட்டு, ஜலதரங்கம் கணேசன் மற்றும் M சந்திரசேகரன் VIOLIN சோலோ நடந்தது. கடந்த ஒன்றாம் தேதி முதல் கர்நாடிக சசிகிரணுடன் இணைந்து சமர்ப்பணம் 2010 நிகழ்ச்சி நடந்து வருகிறது .இதுவரி பாடிய ஆனைவரும்( OST, RK SRIKANTAN, RAVIKIRAN, PARUR QUATRET,SRIRAM PARSURAM, T N KRISHNAN ETC) இந்த மினி ஹால் நன்கு இருப்பதாக கூறியுள்ளார்கள் ..சீசன் கச்சேரி கேட்க வரும் இந்த வலை நண்பர்களை என்னுடைய ARKAY CONVENTION CENTER க்கு வர முயற்சிக்க வேண்டுகிறேன் . வலைத்தளத்தில் முகவரி காண்க
Hi
I am intrigued by your writing on Sri Trichy J Venkataraman and would love to get to meet him. Wld you know his whereabouts in Chennai now? If so, I wld be grateful to receive the info.
Rgds
Shobha
Shoba, he left to Trichy on the day I spoke to him. You can contact his disciple Pradeep Kumar to be in touch with JV sir.
உங்கள் வலைத்தளத்தை பற்றி கருத்து சொல்லும் தகுதி எனக்கு இல்லை, ஆனாலும் உங்கள் எழுத்து படிப்போர் மனம் கவரும் விதத்தில் உள்ளது. அதற்கு என் பாராட்டுகள். கர்னாடக சங்கீதத்தில் எனக்கு பூஜ்ஜியம், எனவே அது பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள “Music Appreciation” நூல்கள் ஏதேனும் உள்ளதா?
நன்றி
மிகவும் அருமையான பதிவுகள் நண்பா…. வாழ்த்துகள்….எனக்கு இசை மீது மிகுந்த நாட்டம்… ஆனால் இசையறிவோ குறைவுதான்… என்னால் முடிந்த வரை நானும் சில விஷயங்களை வலைப்பகுதியின் மூலம் பகிர்ந்துக் கொண்டுள்ளேன்… http://nithyavani@blogspot.com நேரம் கிடைத்தால் வலம் வாருங்கள்… நன்றி
Hi,
I just saw your comments on Maamallan website…..I think we need to define “Bakhthi ” first then we should get into the argument about,whether basic of music is bhakhthi or not…
Sundar kurukkal…
Dear Sir, I have read a biography of GNB in Sruthi magazine pub. Is that by you> I thought it was by a lady! I liked the book. Congrats. Why is it that you have not mentioned about MS, DKPattammal and NC Vasanthakokilam? In my opinion, the three were great singers. Though much has been written about MS, there is a dire need for a research on the singing career of N.C.Vasanthakokilam. from 1938 to 1950, when she passed away unfortunately . She must have given a hundred concerts during that period. not only in Chennai sabhas but in places like Nellai Sangeetha Saba. If a renowned critic and writer visits Nellai and contacts the old rasikas there, you may be able to get priceless treasures which you can upload one by one in youtube and do a great service.
A humble request.. I want to know the ragam of MS record ‘Pyare Dharsana ‘ ( given as a separate record in 1947…the reverse side contains Hari Thum Haro’. ) . The tmail meera film had a song following the viruttham ;charaacharam’ in the same ragam. Can you please enlighten me? i am giving the links to hindi ( not in film) and tamil ( in film) versions below. The music was by Sri.S,.V.VENKATARAMAN. .I am creating sites for old songs of 78 rpm era of DKP and NCV also . I am unable to locate many great songs. You can definitely help.
I am really surprised that you are so young! I am past 76!
Can I have your personal mail-id?
https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/06-pyaare-dharsana
Best Regards.
I am deeply thankful to you for an interesting article on the two schools of mridangam and in particular I was elated to read about my (mridangam) Guru, Sri. Kumbakonam Narayanswami Iyer’s Guru, Sri. Kumbakonam Sri. Azhaganambiya Pillai. I’ve heard him speak in great fervor about Sri. Pillai and his superlative style of sowkiyam. I am hoping that you will also cover in the continuation of this article or another time about Sri. Sakottai Rangu Iyengar who was a stalwart mridangist and was another Guru of Sri. Narayanaawami Iyer. Thinking back, I wish that I could have had more conversations with my Guru about these doyens. Much appreciate your contributions.
Kind regards,
Balajee
அருமை. பெரிதும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.
Please complete the biography of Dr MLV and Ramanathapuram Krishnan as early as possible.
I remember to have read a blog by you on ragam Naattai and gambira naattai. May I have a link to that please?
I am ghatam Vidwan Suresh Vaidyanathan. Amazing page. You know and give information more than a well informed seasond musician could give. The narration about meeting at Pudukkottai Pillaval samadhi is an eye opener. Very impressive list of sources of your research. Incidentally I am also an addict of Pazhani courtesy my guru Dr T V G. who gave me the taste of the rythmic honey.
I have collected some reasonable information on ghatam for my on going PhD research titled evolution of Ghatam through the ages. Would you be able to share any information from your repository.
Dear Sir,
Thanks for your kind words. I’m happy to be of use. You can write to me – ramchi@gmail.com
Best Regards
Lalitharam
Thank you. Have sent you a mail and a rare picture. May be you have seen it.
அருமை.இளைய வயதில் சாதிக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்..பல புதிய சாதனைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்