Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘varalaaru.com’

2008-ல் ஐராவதம் மகாதேவனின் பணிப்பாராட்டு மலரை வரலாறு.காம் வெளியிட்டது.

பல அறிஞர்கள் பங்களித்த அந்த மலரின் மின்பதிப்பை திரு.மகாதேவனுக்கு காணிக்கையாய் இலவசமாய் இங்கு வெளியிடுகிறோம்.

பதிப்பின் முன்னுரை இங்கே.

airavati wrapper 1

Anyone can make history. But it takes a genius to write it. Little did the toddy-tapper Nakkan realize, when he scribed his name on his pot, that he was creating history. Several centuries later, it took the genius of Iravatham Mahadevan to correlate this pot with the widespread literacy in the ancient Tamil country.

This felicitation volume, Airāvati, for Iravatham Mahadevan is brought out, as researchers, scholars, admirers and followers – young and old, spread across the world celebrate Mahadevan‘s Golden Jubilee year in Indological research. This volume stands to represent the tribute paid to his outstanding work in Indus Script, Tamil Brahmi, Journalism and Numismatics.

While men of honour in different fields are recognized in various ways, wise men in the field of history, have set a unique tradition by publishing a felicitation volume that carries articles from the best in the field. Airāvati is no exception. It contains interesting articles from several accomplished experts in their fields . The enthusiastic response from the scholars across the globe to our request for an article for this volume testifies the global admiration that Mahadevan enjoys among his peers.

Like any other student of history, our editorial board too is indebted to Mahadevan for his contributions through his multitude of journal articles and his two meticulously worked out books. However, the intention of this volume is neither to show our gratitude nor to eulogise the veteran. Purpose of this volume is to inspire and encourage all those individuals, who are interested in history but are hesitant to pursue research on it, as they feel they don‘t have the background to do quality research. This volume felicitates a man, who studied Chemistry and Law; earned his living as a civil servant; did not earn a formal degree in history; nor was he an expert in technology. But through his insatiable thirst for knowledge and passionate pursuit of Truth, he went on to become the best in the fields he worked on.

The volume is divided in to three sections. The first section in English and the second section in Tamil contain articles from proficient historians, archaeologists, journalists and numismatists. The third section is dedicated to Iravatham Mahadevan and it carries his bibliography on Indus script, Tamil Brahmi, a couple of reviews on his magnum opus – Early Tamil Epigraphy, one article each in his fields of accomplishment and an interview – throwing light on the man behind these great works.

Bringing out such a volume is not possible without the cooperation of the academic community. We thank all the contributors for their prompt response. The Editorial board is a truly global team with members in India, Japan and the U.S. Even at this technologically advanced age, our correspondence would have not been possible without human intervention in the form of Prof. M. R. Arasu, Mr. M. Selvamoorthy, Mrs. S. Sumitha, Mr. S. Seetharaman and Mr. Bala. Padmanaban. Special thanks must be given to Alamu Printers for their highly professional work in printing this volume.

வரலாற்று ஆர்வலர்களுடன் இதைப் பகிர்வதில் பெருமகிழ்ச்சி. பரவலாய் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தரவிறக்க இந்த இணைப்பில் சொடுக்கவும்: ஐராவதி

Read Full Post »

வரலாறு.காமின் போன இதழ் வெளியான பின்னர்தான் அதை எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

தொலைபேசியிலும், தனிமடலிலும், வேறு தளங்களின் மூலமாகவும், அன்பாகவும், உண்மையான அக்கறையுடனும், மரியாதையாய் மிரட்டியும், அச்சுறுத்தலாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

தங்களுக்கான பதில் நேற்று வெளியாகியுள்ள வரலாறு.காம் இதழின் தலையங்கத்தில் உள்ளது. இங்கு படிக்கலாம்.

வரலாற்றை உணர்ச்சிப் பூர்வமாக அணூகாமல் முதன்மைத் தரவுகள் மட்டும் வைத்தே அணுகவேண்டும் என்பதே எங்கள் தாரக மந்திரம்.  அதனின்று வழுவாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை நிதர்சனமாய் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பைச் சென்ற இதழ் தலையங்கம் அளித்தது. அந்தக் கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் சில வரிகளால் யாரேனும் புண்பட்டிருப்பின் பொறுத்தருளுமாறு ஆசிரியர் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

சித்திரையில் கொண்டாடுவோரைத் தூற்றுவது எங்கள் நோக்கமன்று. எப்போது கொண்டாடுவது என்பது தனி மனித விருப்பம்.

எது வரலாறு என்பதில்தான் எங்களுக்கு அக்கறை. அதை இந்த இதழ் தலையங்கம் தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்.

 

 

 

 

Read Full Post »

வரலாறு என்றால், பல நூறு வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தவைதான் என்று ஒரு போதும் (http://varalaaru.com/Default.asp) வரலாறு.காம் எண்ணியதில்லை. நம்மிடையே வாழும் வரலாறுகளாய் விளங்குபவர்களை இயன்ற வரை கௌரவப்படுத்துவதும் இவ்விதழின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று. அவ்வகையில், இந்த மாதம் மலரும் வரலாறு.காம் இதழை, எஸ்.ராஜத்திற்குக் காணிக்கை ஆக்குகிறோம்.

வரலாறு.காமில் இது வரை வந்த சிறப்பிதழ்கள் அனைத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியுடன்தான் வெளியிட்டோம். இந்த மாதம் மலரும் எஸ்.ராஜம் சிறப்பதிழை மிகுந்த வருத்தத்துடன் வெளியிடுகிறோம்.

ஸ்ருதி இதழ் ஆசிரியர் ஜானகி, ராஜத்தின் மூத்த மகன் ராமமூர்த்தி, தமிழ்ஸ்டுடியோ.காமின் அருண், விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியம், கவிஞர் ஹரிகிருஷ்ணன் என்று பலரின் படைப்புகள் வெளியாயுள்ளன.

அகில இந்திய வானொலியின் அஞ்சலியும், ஓவியர் மணியம் செல்வனின் அஞ்சலியும் ஒலிப்பதிவாக இட்டுள்ளோம்.

வருக வரலாறு.காம்-க்கு!

Read Full Post »