இந்தியாவில் கடந்த சிலநாட்களாய் அதிகம் விவாதிக்கப்பட்டுவரும் #metoo-வில் என் குறைந்தபட்ச பங்களிப்பாய் செய்தகொண்ட சுயபரிசீலனையின் விளைவாய் சில சொந்த நிலைப்பாடுகளையும், நான் பங்களிப்பை அளித்து வரும் பரிவாதினியின் சார்பில் சில நிலைப்பாடுகளையும் எடுத்துள்ளேன்.

1. #metoo-வின் மூலமாய் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கலைஞரின் கச்சேரிகளுக்கு இனி செல்வதில்லை.
2. அவர் பாடியவற்றைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதுவதோ, அல்லது அவர் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதோ செய்யப்போவது இல்லை.
3. அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதுவது, நேர்காணல் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடப்போவதில்லை.
4. பரிவாதினி ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் இடம்பெற மாட்டார்கள்.
5. பரிவாதினி செய்து வரும் இணைய நேரலை ஒளிபரப்புகளிலும் அவர்களின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் போவதில்லை.
இந்தக் கலைஞர்களைப் பற்றி லலிதாராம் எழுதி அவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்கள் பரிவாதினியில் பாடித்தான் பெயர் வாங்க வெண்டும் என்ற நிலையுமில்லை என்பதை நன்கறிவேன்.
இத்தனை ஆண்டுகள் “அதெல்லாம் இருக்கட்டும் – அந்தத் தோடியும் காம்போஜியும் பாரு!”, என்றிருந்தது போல இனியும் இருப்பது சரியல்ல என்பதே கடந்த சில நாட்களில் நான் கண்டுகொண்டது. இந்தப் புரிதலை வெளிப்படுத்தும் குறைந்தபட்ச வெளிப்பாடே இந்த நிலைப்பாடு.
இதில் சில கலைஞர்களின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தியிருக்கக் கூடும். எத்தனையோ காலம் எண்ணற்ற இடர்பாடுகளைப் பற்றி மூச்சுவிடக்கூட முடியாத சூழலைக் கொஞ்சமாவது மாற்ற முற்படும் இந்த வேளையில் சன்னமாகவாவது எதிர்குரலை எழுப்பியிருப்பவர்கள் பக்கம் நிற்பதே சரியென்றுபடுகிறது. அந்தக் குரல்களில் ஒலிப்பவையெல்லாம் உண்மையின் குரல்கள்தானா என்ற ஆராய்ச்சிக்கு இது தருணமல்ல.
Read Full Post »